புறப்பட்ட சில நொடிகளிலேயே அந்த விமானம்
தீப்பிடித்து நொறுங்கி கீழே விழுந்தது.
.
[ இடம் : மும்பை விமான நிலையம்
நேரம் : 11.10.1976 , நள்ளிரவு 1.40 மணிக்கு .. ]

விமானத்தில் இருந்த 95 பேரும்
கருகிப் போனார்கள் .
கருகிப் போனார்கள் .
அதில் ஒருவர் நடிகை ராணி சந்திரா.
.
அதிர்ந்து போனார்
இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர் ..!
.
காரணம் ... அந்த ராணி சந்திராவை வைத்து ஒரு படம் தயாரித்து இயக்கிக் கொண்டிருக்கிறார் ஏ.சி.திருலோகசந்தர்..!
.
“பத்ரகாளி”...
.
பாதிப் படம் மட்டுமே முடிந்த நிலையில் இப்படி ஒரு பரிதாபம் ! மீதிப் படத்தை எப்படி முடிப்பது ?
.
கலங்கிப் போய் நின்ற இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தரை சமாதானப்படுத்தினார் “பத்ரகாளி” படத்தின் கதாநாயகன் சிவகுமார் !
.
இதோ , சிவகுமார் சொன்ன ஆறுதல் வார்த்தைகள் :

“எப்படியும் படத்தை முடித்து விடலாம் சார்” என்றேன்.
“எப்படி சிவகுமார் முடியும் ? படத்தில் மூன்றில் ஒரு பங்கு பாக்கியிருக்கிறது. முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சி இருக்கிறது. ராணி சந்திரா இல்லாமல் இந்தக் காட்சிகளை எப்படி எடுப்பது ? கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை ” என்று வேதனையோடு கூறினார், டைரக்டர் திருலோகசந்தர். மறுநாள் வருவதாகக் கூறிவிட்டு, வீடு திரும்பினேன்.”
.
# வீட்டுக்கு வந்த சிவகுமார் ,
படுக்கையில் படுத்தார் .
தன் ஆழ்மனதுக்குள் ஆராய்ந்து பார்த்தார்... !
.
ஆழ்மனத்தின் சக்தி அளவிட முடியாதது !
அது பிரபஞ்ச சக்தியோடு தொடர்பு கொள்ளும்போது அற்புதங்கள் நிகழ்கின்றன !
.
அடுத்த நாள் காலை அந்த அற்புதம் நிகழ்ந்தது..!
.
சிவகுமார் சொல்கிறார் :
“ அதிகாலை .. அரைத் தூக்கத்தில் இருந்தபோது “சட்”டென்று ஒரு பொறி தட்டியது... என் ஆழ்மனதில் தோன்றிய அந்த நடிகையின் பெயர் “புஷ்பா”....உடனே டைரக்டர் வீட்டுக்கு ஓடினேன். நடிகை புஷ்பா பற்றி அவரிடம் கூறினேன்.
.
“பட்டிக்காட்டுராஜா”, “தங்கத்திலே வைரம்” படங்களில் என்னோடு சில காட்சிகள் மட்டுமே நடித்திருந்த துணை நடிகை புஷ்பா !
.
புஷ்பாவை படம் பிடித்துப் பார்த்தோம்.... உயரம், உருவம், நெற்றி, முகத்தோற்றம் எல்லாம் ஒரே மாதிரி இருந்தன. டைரக்டர் திருலோகசந்தர் , மிக சாமர்த்தியமாக ராணி சந்திராவுக்கும் , புஷ்பாவுக்கும் வித்தியாசம் தெரியாதபடி காட்சிகளை படமாக்கி, படத்தை முடித்தார்.”
.
# யாருமே எதிர்பார்க்காத இமாலய வெற்றியைப் பெற்றது “பத்ரகாளி”...!
.
வெளியிட்ட தியேட்டர்களில் எல்லாம் வெள்ளி விழா !

இறந்து போன கதாநாயகிக்கு பதிலாக இன்னொரு பெண்ணை வைத்து , கொஞ்சம் கூட வித்தியாசம் தெரியாமல் பல காட்சிகளைப் படமாக்கி , முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சியையும் படமாக்கி
“ பத்ரகாளி ”யை வெற்றி பெறச் செய்தது ஏ.சி. திருலோகசந்தரின் இமாலயச் சாதனை.
.
அந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது , சிவகுமாரின் ஆழ்மன சக்தியும் ...
பிரபஞ்ச சக்தியும்..!
.
# மூடப்பட்ட கதவுகள் திறக்க வேண்டும் என பார்த்துக்கொண்டிருப்பதை விட்டு விடுங்கள்.!
இறைவன் அல்லது பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு கொள்ளுங்கள்...!
அவை நமக்காக
புதிய கதவுகளை திறந்து வைக்கும் !
புதிய கதவுகளை திறந்து வைக்கும் !
No comments:
Post a Comment