"முதலாளி நீங்க இத நக்க மறந்துடீங்க" ன்னு ஒரு படத்துல விவேக் சொல்லுவாரு, அப்படி மொத்த தமிழ்நாடும் மறந்துபோன ரெண்டு விஷயம் சமீபத்துல நடந்திருக்கு, சம்பவம் அந்த மாதிரிங்கிறதால உதாரணம் இந்த மாதிரி..
இந்திய அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட, அதன் ஜனநாயக தேர்தல் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மூத்த அரசியல்வாதி ஒரு வெளிநாட்டில் நுழைய தடை செய்யப்பட்டு திருப்பி அனுப்பபடுகிறார். அவர் ஏற்றுக்கொண்ட அவர் சார்ந்த தேசம் எந்த எதிர்ப்பும் இல்லாமல் கடந்து கைவிடுகிறது..
ஒரே தேசத்திற்குள் உள்ள ஒரு மாநிலத்தின் அரசு அதிகாரிகள் இன்னொரு மாநிலத்தில் உள்ள குண்டர்களால் தாக்கப்படுகிறார்கள், அந்த தேசத்திடம் இருந்தோ அந்த மாநில அரசாங்கத்திடம் இருந்தோ எந்த வலிமையான நடவடிக்கையும் கண்டனமும் இல்லாமல் கடந்து விடுகிறது.
இந்த இரண்டு சம்பவங்களிலும் பாதிக்கப்படுவது என்பது ஒரே தேசிய இனமாக இருக்கிறது, அதுதான் கவனிக்க வேண்டியது.
சென்னை ஐஐடி தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இயங்குவது கிடையாது ஆனால் அங்கு ஒரு கேரளா மாணவர் தாக்கப்படுகிறார் உடனடியாக அந்த மாநில முதல்வர் தமிழ்நாடு அரசை நடவடிக்கை எடுக்க சொல்கிறார், ஒரு தேசிய கட்சியை சேர்ந்த தலைவர் வந்து பார்த்துவிட்டு போகிறார்..
ரெண்டிலுமே ஒரு தேசிய இன உணர்வு இருக்கிறதா இல்லையா?.. அவர்களுக்குள் எவ்வளவு முரணும் இருக்கலாம் ஆனால் வெளியாளிடம் விட்டுத்தர முடியாது இல்லையா?..
அவர் சென்னை வந்திட்டு மாணவரை பார்த்த மாதிரியே அடிபட்ட தமிழக அதிகாரிகளையும் பார்த்திருக்கலாம்தான், ரெண்டு தாக்குதலுக்குமான காரணங்கள் கூட ஒன்றுதான், அவரும்கூட ஒரு மாநிலத்துக்கு மட்டுமில்லாத தேசிய தலைவர்தான்,ஆனால் கூட உள்ளூர ஒரு தேசிய இன அரசியல் சார்ந்த உணர்வு அவருக்காகவும் அவரிடமும் இருக்கிறதா இல்லையா?.
அது ஏன் இங்கு இல்லை?..
நம் அரசு அதிகாரிகள் இன்னொரு மாநில குண்டர்களால் தாக்கப்படுகிறார்கள், நம் தலைவர்கள் என்ன எதிர்வினை மாற்றியிருக்கிறார்கள், பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய பெரிய கட்சி எம்பிக்கள் இது அவர்கள் அரசென்ற சொரணையோ அவர்கள் இனமென்ற சொரணையோ ஏதாவது இருந்ததா?, தமிழ்நாடு அரசு அதிகாரிகள் இந்திய அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவர்கள் என்ற சொரணை இந்திய அரசுக்காவது இருந்ததா?.
தலைவர்களை விடுங்கள். சாதாரண மக்களுக்குள் இந்த உணர்வு எப்படி இருக்கிறது?. நம்ம ஊரு பழக்கமே உள்ளுக்குள்ள வெட்டிக்குவோம் குத்திக்குவோம் ஆனா வெளியூர்காரண்ட நம்ம ஊர்காரன விட்டுத்தர மாட்டோம். ஒரு வடநாட்டு சாமியார் கருணாநிதி தலையை கேட்ட போது சும்மா விட்டமா?..
வைகோவின் அரசியல் மீதான விமர்ச்சனைகள், தனிமனித தாக்குதல் எல்லாம் பேச வேண்டிய நேரம் இதுவா. தடைவிதித்தது இலங்கை போன்ற உள்ளார்ந்த கான்பிளிக்ட் கொண்ட நாடாக இருந்தாலும் பேரவா இல்லை,
ஆனால் மலேசியா போன்ற ஒரு நட்பு நாடு நம் தேசிய இனத்தை சேர்ந்த இந்திய நாட்டின் ஜனநாயக அரசியல் தலைவரை நுழைய தடை விதிக்கிறது அதை நம் நாடும் கண்டிக்க மாறுகிறது என்றால் முதலில் உண்மையிலேயே இந்திய நாடு அதன் இறையாண்மையை பின்பற்றி வாழக்கூடிய நம் தேசிய இனத்தை அதே பொறுப்புணர்வோடு பாதுகாக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது அது இந்த நாட்டின் இறையாண்மையை பின்பற்றி வாழக்கூடிய நம்மை இந்த நாடு அதே பொறுப்போடு பார்க்கிறதா என்பதில் சந்தேகம் எழுகிறது?..
அடுத்து அப்படி ஒரு அவமானம் நமக்கும் சேர்ந்து நிகழ்ந்தது என்பதை உணர்ந்துகொள்ளாத அரசியல் கோளாறுகள் இந்த இனத்தில் எங்கு ஏற்படுகிறது.
எங்க இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி டக்ளஸ் தேவானந்தா சிவப்பு கம்பள வரவேற்போடு இந்திய நாட்டின் தலைநகருக்கு வந்து இந்தநாட்டின் பிரதமரை சந்தித்துவிட்டு போகிறான்.. அது இந்த தேசத்தின் அவமானம் இல்லையா, தமிழர்கள் சார்ந்தது என்றால் அதைக்கூட இழக்க தயாராக இருக்கிறதே இது எப்படி தமிழர்களுக்கு நீதியை தரும்.. அந்த பாதுகாப்பற்ற உணர்வை பற்றிய சொரணை நம்மக்கு கூட இல்லாமல் கிண்டலாகவும் உள்ளார்ந்த வன்மமாகவும் கடந்து செல்கின்றோமே நம் அரசியல் எப்படி வலிமையானதாக இருக்கும்..
ஒரு கலாச்சார விழாவுக்கு தவறான வாழ்த்து சொன்ன அமித்ஷாவை மலையாளிகள் ஒரே குரலில் வறுத்து எடுத்தனரே, இனிமே அமித்ஷா அப்படி சொல்லிவிடுவாரா, மாட்டிறைச்சி தடைக்கு வெளிநாட்டு விளையாட்டு மைதானத்துல கூட மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இன உணர்வு எவ்வளவு வலிமையானது இனி மலையாளிகள் தொடர்பாக மோடிக்கு தயக்கம் இருக்குமா இல்லையா, இது நாம கத்துக்க வேண்டிய பாடமில்லையா?.
நீங்கள் அரசால் எந்த தொகுதியாக ஒடுக்கப்படுகிறீர்களோ அதே தொகுதியாக திரள்வதுதானே பாதுகாப்பான அரசியல், இந்த ரெண்டு நீங்கள் தமிழ்த்தேசிய இனம் என்ற காரணத்திற்காக புறக்கணிக்க படுகிறார்கள் என்பதை அப்பட்டமாக சொல்லும் சம்பவங்கள்..
இங்க ஒரு குருட்டுத்தனமான தப்பான புரிதல் வளர்க்கப்பட்டிருக்கு இனஉணர்வுன்னா அது ஹிட்லருக்கு உள்ளது மாதிரின்னு, உலகில் உள்ள தேசிய இன விடுதலை போராட்டங்களுக்குஎல்லாம் ஆதர்சமாக விளங்கக்கூடிய அயர்லாந்து தேசிய இனவிடுதலை போராட்ட வீரன் தான்பரீன்க்கு இருந்தது கூட தேசிய இன உணர்வுதான்..
தேசிய இன கருத்தாக்கத்தை முற்றாக நிராகரிக்கிற முட்டப் பயலுக்கலுக்கு வேற ஏதோ பிரச்சினை, விட்டுதள்ளுங்கள் அதற்க்கு அந்த தேசிய இன மக்கள் பலியாகவேண்டிய அவசியமில்லை..
No comments:
Post a Comment