பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கடந்த 2012 ல் ராஜ்யசபா எம்.பி.,யாக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் தற்போது முடிவடைந்தது. எம்.பி.,யாக அவர் பார்லிமென்ட் நடவடிக்கைகளில் சரியாக கலந்து கொள்ளவில்லை என விமர்சனம் இருந்தது. இந்நிலையில், எம்.பி.,யாக இருந்த 6 வருடத்தில் பெற்ற சம்பளம் மற்றும் இதர படிகள் என கிடைத்த 90 லட்ச ரூபாயை பிரதமர் நிவாரண நிதிக்கு தெண்டுல்கர் அளித்துள்ளார்.
இதற்காக தெண்டுல்கரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக கருணாநிதி சட்டசபைக்கு செல்லாமலேயே கோடிக்கணக்கான ரூபாய்களை சம்பளமாகவும் அலவன்ஸாகவும் பெற்று வருகிறார். தெண்டுல்கர் வழியைப் பின்பற்றி ஸ்டாலினும் அந்தக் கோடிக்கணக்கான ரூபாய்களை முதல்வர் நிவாரண நிதிக்கோ, பிரதமரின் நிவாரண நிதிக்கோ அளிக்க வேண்டும்.
ஸ்டாலின் செய்வாரா..?
No comments:
Post a Comment