Wednesday, September 5, 2018

கண்கள் பேசும் புதுமொழிகளும் அதன் அற்புத‌ அர்த்த‍ங்களும் – புத்துயிரூட்டும் தகவல்.

கண்கள் பேசும் புதுமொழிகளும் அதன் அற்புத‌ அர்த்த‍ங்களும் – புத்துயிரூட்டும் தகவல்

கண்கள் பேசும் புதுமொழிகளும் அதன் அற்புத‌ அர்த்த‍ங்களும் – புத்துயிரூட்டும் தகவல்
பொதுவாக‌ மொழிகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று வாய்மொழி இரண்டாவது
உடல்மொழி. நாம் நினைக்கும் எண்ணங்களை வார்த்தை களாக வெளிக்காட்டுவது வாய் மொழி ( #Mouth #Language ) என்றால், நம் எண்ணங்களை செயல்களாக காட்டுவது உடல் மொழி ( #BodyLanguage ). ஆனால் இந்த இரண்டு மொழிகள்இன்றி மூன்றாவதாக ஒருமொழிஉண்டு. அது என்ன‍வென்றால் அதுதான் கண்கள் பேசும்மொழி ( Eye Language / Eyes Speaking Language ). அக்கண்கள் பேசும் மொழிகளும் அதன் அர்த்த‍ங்களும் இங்கே கீழே காணலாம்.

கண்களின் மொழி ( #EyeLanguage )

01. கண்கள் வலப்புறமாக பார்த்தால் பொய் சொல்கிறது
02. கண்கள் இடப்புறமாக பார்த்தால் உண்மை பேசுகிறது
03. கண்கள் மேலே பார்த்தால் ஆளுமை செய்கிறது
04. கண்கள் கீழே பார்த்தால் அடிபணிகிறது
05. கண்கள் விரிந்தால் ஆச்சர்யப்படுகிறது,ஆசைப்படுகிறது.
06. கண்கள் சுருங்கினால் சந்தேகப்படுகிறது.
07. கண்கள் கூர்ந்து பார்த்தால் விரும்புகிறது
08. கண்கள் வேறு எங்கோ பார்த்தால் தவிர்க்கிறது
09. கண்கள் வலமும் இடமும் மாறி மாறி ஓடினால் பதட்டத்தில் உள்ளது.
10. கண்கள் படபடத்தால் விரும்புகிறது, வெட்கப்படுகிறது
11. கண்கள் மூக்கைப் பார்த்தால் கோபப்படுகிறது
12. கண்கள் எதை பார்க்கிறதோ அதை விரும்புகிறது.
13. கண்கள் கழுத்துக்கு கீழே பார்த்தால் காமம்
14. கண்கள் கண்ணுக்குள் பார்த்தால் காதல்
15. கண்கள் இடமாக கீழே பார்த்தால் தனக்குள் பேசிக் கொள்கிறது
16. கண்கள் இடமாக மேலே பார்த்தால் பழைய நினைவுகளை தேடுகிறது
17. கண்கள் வலமாக கீழே பார்த்தால் விடை தெரியாமல் யோசிக்கிறது
18. கண்கள் வலமாக மேலே பார்த்தால் பொய் சொல்ல யோசிக்கிறது
19. கண்கள் உயர்ந்தும் தலை தாழ்ந்தும் இருந்தால் எதையோ தேடுகிறது.
20. கண்கள் ஓரப்பார்வையில் அவ்வப்பொழுது பார்த்தால் விரும்புகிறது.
21. கண்கள் மூடித்திறந்தால் உள்ளுக்குள் தேடுகிறது
22. கண்களை கைகள் மறைத்தால்எதையோ மறைக்கிறது
23. கண்களை கைகள் கசக்கினால் தஞ்சம் கேட்கிறது.
24. கண்கள் மூடித்திறந்தால் வெறுக்கிறது.
25. கண் புருவங்கள் உயர்ந்தால் பேச விரும்புகிறது
26. கண் புருவங்கள் சுருங்கினால் பேச விருப்பமில்லை.
27. கண்களும் புருவங்களும் சுருங்கியிருந்தால் கோபம்
28. ஒரு கண் திறந்திருந்தால் சேட்டை
29. இரண்டு கண்களும் மூடி இருந்தால்தூக்கம்.
30. கண்கள் திறக்கவில்லையென்றால் மரணம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...