அழகுப் பராமரிப்பில் தேனின் பங்கு
சிறு சிறு தேன் துளிகள் சருமத்தைப் பராமரிக்கு ம் பணியினை ஆச்சரி யப்படத் தக்க வகையில் செய்யும் என் பது உங்களுக்குத் தெரியுமா? இது வரை பருகும் தேநீரில் சர்க்கரைக்கு மாற்றாக தேனை ப் பயன்படுத்தியிரு ப்பீர்கள். இப்போது அழகுப் பராமரிப்பிற்கு தேனைப் பயன்படுத் துவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக தேனானது சருமத்தை மென்மை யாக்குவது மட்டும ன்றி, அதனுடைய பாக்டீரியா எதிர்ப்புக் குணமும், ஈர மாக்கும் தன்மையும், சருமத்தின் குறைபாடுகளைப் போக்கி, அதன்இளமைத் தன்மையைப் பேணு கின்றது.
மேலும் இந்த தேன் சருமத்திற்கான பராம ரிப்பில் மட்டு மின்றி, கூந்தல் பராமரிப்பிற் கான அழகு சாதனப் பொருட்களிலும் பயன் படுத்தப்படுகிறது. ஆகவே, பண்டைக் காலத்திலிருந்து சிறந்த உணவுப்பொரு ளாக பயன்படும் தேன் தற்போது, சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்புக் கும் பயன்படுகிறது. மொத்தத்தில் அழகுப் பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக தேன் இருக்கும். இப்போது கூந்தல் பராமரிப்பிற்கும், சருமப் பராமரிப் பிற்கும் சில தேன் கலந்த வீட்டுக் குறிப்புகள் கீழே தரப்பட்டுள் ளன. இவற்றைப் பயன்ப டுத்திப் பாருங்கள்.
கூந்தல் பராமரிப்பில் தேன்!!!
பட்டுப்போன்ற கூந்தலுக்கு…
சிக்கலற்ற பட்டுப் போன்ற கூந்தல் வேண்டு மா? அதுவும் குறிப்பாக மழைக்காலங்களில் கூந்தல் எண்ணெய் பசையின்றி பட்டுப் போல மெ ன்மையாக இருக்க வேண்டுமா? அப்படியாயின் இம்முறையைப் பயன் படு த்திப் பாருங்கள். ஒரு கிண்ணத்தில், இரண்டு மேசைக்கரண்டி தயிர், இரண்டு முட்டைகள் (வெள்ளைக்கரு மட்டும்), எலுமிச்சைச் சாறு, ஐந்து துளி தேன் ஆகியவை கலந்து கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் படும் படி தேய்த்துக் கொள்ள வேண்டும். பின் அரை மணிநேரம் கழித்து, தண்ணீரில் நன்றாக அலச வேண்டும். இதனால் கூந்தலானது பட்டுப் போல மென்மையாகி இருப்பதைக் கவனிப் பீர்கள்.
பளபளப்பான கூந்தலுக்கு…
தேனுடன் சிறிது ஆலிவ் எண்ணெய் கலந்து கூந்தல் மீது தடவி, சிறிது நேரம் கழித்துத் தண்ணீரில் அலசினா ல், கூந்தல் பளபளப்புடன் இருப்ப தைக் காண முடியும்.
சரும பராமரிப்பில் தேன்!
தேவையற்ற முடிகளை நீக்குதல்…
முகத்தில் வளர்ந்துள்ள தேவையற்ற முடி களை நீக்க விரும்பினால், இம்முறையைச் செய்து பாருங்கள். ஒரு கிண்ணத்தில், ஒரு தேக்கரண்டி தேன், ஒரு மேசைக்கரண்டி சர்க்கரை, சில துளிகள் எலுமிச்சை சா று ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இதனை ஒரு கரண்டி கொண் டு நன்றாக அடித்துக் கலக்கிப் பசை போலாக்குங்கள். பின் இதனை அப்படியே ஒரு மைக்ரோ வேவ் ஓவனில் மூன்று நிமிடங்கள் வைத்து சூடு செய்யுங்கள். பிறகு வெளியே எடுத்து, கை சூடு தாங்கும் பதத்தில் வந் ததும், அத னை முகத்தில் முடி வளர்ந்துள்ள பகுதிக ளில் தடவிக் கொள் ளுங்கள். குறிப்பாக முடியானது எந்த திசையை நோக்கி வளர்ந்துள்ளன வோ, அந்தத் திசைகளில் தடவ வேண்டியது முக்கியம். இப்போது ஒரு சுத்தமான பருத்தி யால் ஆன துணி ஒன்றை எடுத்துக் கொண் டு, முகத்தில் இக்கலவை தடவிய பகுதியி ன் மேல் போர்த்தி அழுத்தி எதிர்த் திசையில் இழுங்கள். இப்போது முகத்தில் உள்ள முடி கள் வேரோடு அகற் றப்பட்டுவிடும். இதனா ல் முகத்தில் நீண்ட காலத்திற்கு முடிகள் வளராமல், முகம் வழவழப்புடன் திகழும்.
மாசு மருவற்ற சருமம்
முகத்திலுள்ள சருமம் மாசு மருவின்றித் திகழ வேண்டுமென்று விரும் புகிறீர்களா? அப்படியெனில் பின்வரும் தேன் ஃபேஸ் மாஸ்க்கை செய்து பாருங்கள். அதற்கு சிறி து தேன், கடலை மாவு, சந்தனம், பன்னீர் ஆகியவற்றைக் கலந்து கெட்டியான பதத்திற்குக் கலந்து கொள்ளுங்க ள். பின் இதனைக் கொண்டு முகம் மற்றும் கழுத்தில் மாஸ்க் போல பூசிக் கொள் ளுங்கள். சிறிது நேரம் நன்றாகக் காயவிடுங்கள். நன்கு காய்ந்ததும், முக த்திலிருந்து உரித்தெடுங்கள். இம்மாஸ்க் கானது முகத்திலுள்ள அழுக்கு க ளை நீக்கு வது மட்டுமின்றி, முகத்தை மென்மையாக வும் ஆக்கும். அதிலும் வாரமொரு முறையா வது இதனைச் செய்து வந்தால், நல்ல பலன் தெரியும்.
சருமம் கருமையடைதலைப் போக்க…
சூரிய ஒளி அதிகம் படுவதால், சருமம் கருமை அடைகிறதா? அப்படியெ ன்றால் அதற்கு சிறப்பான தீர்வாக தேன் அமையும். தேன், பால் பவுடர், எலுமிச்சை சாறு, பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் கலந் து கொள்ளுங்கள். பின் அதனை சூரிய ஒளியால் கருமை அடைந்த பகுதிகளில் இக்கலவையைத் தடவி, 20 நிமிடங்கள் ஊற வைத்து, அதன் பின் தண்ணீர் கொண்டு நன்கு அலசி விடுங்கள்.
தீப்புண் தழும்புகள் போக்க உதவும் தேன்
நெருப்பில் சுட்டுக் கொண்டீர்களா? உடனடி யாக தீக்காயத்தின் மீது சிறிது தேனைத் தடவுங்கள். தேனுக்குக் காயத்தினை ஆற்று ம் தன்மை யும், கிருமிநாசினித் தன்மையும் உண்டு. இதன் காரணமாக தீப்புண் எளிதில் ஆறுவதோடு, தீக்காயத்தால் உண்டாகும் தழும்புகளும் வழ க்கத்தை விட குறைவான அளவில் இருக்கும்.
பருக்கள்
சிலரது சருமம் எளிதில் பருக்கள் உருவாவதற்கு வசதியானதாக இருக் கும். பருக்கள் நிறைந்த சருமம் உண்மையிலேயே பராமரிப்பதற்கு கடினமானது தான். பருக்களைப் போக்குவ தும் கடினமான காரியம்தான். எனவே வீட் டில் உள்ள மசாலா பொருள்களில் ஒன்றான பட்டையை யும் சிறிது தேனையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். பின் இதனை பருக்களின் மீது தடவுங்கள். ஒரு இரவு முழுவதும் அப்படியே இருக்க விடுங் கள். காலையில் எழுந்ததும் வெதுவெதுப் பான நீரில் முகத்தை நன்கு கழுவுங்கள். பரு க்களைப் போக்குவதற்கு இது சிறப் பான ஒரு வீட்டு மருத்துவம்.
அழகுப் பராமரிப்பில் எலுமிச்சையின் பங்கு
எலுமிச்சை பழம்! இதன் பயன்பாடு இல்லாத வீடே இருப்ப தில்லை. எலுமிச்சையை நேர டியாகவும் சரி, பானமாகவும் சரி அல்லது எலுமிச் சை கலந்த பொருட்களாகவும் சரி, அதனை நாம் அன்றாடம் பயன்படு த்திக் கொண்டு தான் இருக்கிறோம். எலுமிச்சையி ல் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது என்று பல காலத்திற்கு முன்பே கண்டு பிடிக் கப்பட் டுள்ளது. ஆகவே இதனை வெறும் பானத்தில் கலந்து குடிக்கவும், சால ட்மீது புளியவும் மட்டுமே பயன்படுகிறது என்று நினைத்தால் அது தவறு.
அதையும் மீறி இந்த சிட்ரஸ் பழம் பல மரு த்துவ குணங்களை கொண்டுள்ளது. அத னால் இந்த சிறிய பழத்தில் ஒளிந்திருக்கும் பல அதிசயங்களையும், அது அழகை மேம்படுத்த உடம்பிற்கும் சருமத்திற்கும் எப்படி பயன்படு கிறது என்பதையும் இப்போது பார்க்கலாம்.
வெண்மையான சருமத்தை இயற்கையாக பெற …
எலுமிச்சை சாற்றில் இயற்கையாக வெளுக்க வைக்கும் குணங்கள் உ ள்ளது. சருமத்தை இயற் கையாக வெளுக்க வைப்பதால், அது நம் சரும த்திற்கு மிகவும் பயன் அளிப்பதாக விளங்குகி றது. அதனால் தான் வீட்டி ல் தயார் செய்யப்படும் அழகு பொருட்களிலும் சரி, சந்தையில் கிடைக்கு ம் அழகு பொருட்களிலும் சரி, எலுமிச்சை சேர்க்க ப்படுகிறது. இத்தகைய எலுமி ச்சையை நேரடியாக சருமத் தின் மீது தேய்க்கலாம் அல்ல து எலுமி ச்சை அடங்கி யுள்ள பேஸ் பேக்கை தடவலாம். இது கரும்புள்ளிகளையும் நாளடை வில் நீக்கும்.
இளமையுடன் இருக்க…
உடம்பில் முதுமை தெரியும் பகுதிகளை எலு மிச்சையை வைத்து நீக்கலாம். எலுமி ச்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளதால், அது சருமத்தில் உள்ள சுருக்கங் களை எதிர்த்து போராடும். சரும சுருக்கங் களை நீக்க நல்ல தொரு பேஸ் பேக் வேண்டுமா? அப்படி யெனில் கொஞ்சம் எலுமிச்சை சாற்றை எடுத்து, இனிக்கும் பாதாம் எண் ணெயில் கலந்து, முகத்தில் பூசி 20 நிமிடங்கள் வரை ஊறவிடுங்கள். இல்லை யெனில் எலுமிச்சை சாறு மற்றும் ஆப்பிள் சிடர் வினீகரை சமமான அள வில் கலந்து, இளமை தொலை யும் இட ங்களில் தடவுங்கள்.
எண்ணெய் பசையுள்ள சருமத்தை பராமரி க்க…
எண்ணெய் வழியும் சருமத்தில் முகப்பரு, கரும் புள்ளி என பல சரும பிரச்சனைகள் ஏற் படும். ஆகவே எண்ணெய் பசையான சருமத் திற்கு நிவாரணியாக எலுமிச்சை விளங்குகி றது. எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், சருமத்தின் எண்ணெய் மூலக்கூறுகளை உடைத்தெறியும். அதனால் சருமம் மென் மையாக விளங்கும். அதற்கு எலுமிச்சை சா ற்றினை தண்ணீருடன் கலந்து, அந்த கலவையை பஞ்சுருண்டை யை பயன்படுத்தி முகத்தில் தடவுங்கள். அதிலும் எண்ணெய் பசை சருமத் தை கொண் டவர்கள், இதனை தினசரி செய் ய வேண்டு ம்.
சருமம் புத்துணர்வும், மென்மையும் அடைய. ..
நற்பதமான எலுமிச்சை சாறு, சருமத்தை மென்மையாக வைக்க உதவு ம். அதிலும் முகத்தில், முட்டியில், முழங்கையில் எலு மிச்சை சாற்றை தடவினால், அவைகள் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக் கும். குறிப்பாக எலுமிச்சையின் தோலை முகத்தில் தேய்த்தால் அது இயற்கை தெம் பூட்டியாகவும், இறந்த செல்களை அகற்ற வும் செய்யும். மேலும் பொலிவிழந்த வறண்ட சருமத்திற்கு எலுமிச்சை கலந்த எண்ணெயை உபயோகப்படுத்தலாம்.
அழகிய இதழ்கள்
எலுமிச்சை பானம் இதழ்களுக்கும் பயனுள்ளதாக விளங்குகிறது. வற ட்சி, வெடிப்பு மற்றும் வெம்புண் போன்றவைகளால் உதடு பாதிக்கப் பட்டிருந்தால், உதட்டில் எலுமிச்சை சாற்றினை தடவுங்கள். எலுமிச் சை சாற்றை பாலின் நுரை மற்றும் தேனுடன் கலந்து உதட்டின் மீது தட வலாம். அது உதட்டு பிரச்சனை களை தீர்க்கும்.
அக்குள்களைப் பராமரிக்க…
நண்பர்களை சந்திக்க அல்லது பார்ட்டிக்கு செல்ல வெளியே கிளம்புகிறீ ர்களா? அப்போது அக்குள் அசிங்கமாகவும், துர் நாற்றம் வீசுவதையும் பின்னர் தான் உணர்ந்தீ ர்களா? வியர்வை, வெப்பம் மற்றும் தூய்மை கேடு இவை அனைத்தும் அக்குளை கருமையடை யச் செய்து துர்நாற்ற த்தை கொடுக்கும். எனவே எலுமிச்சை சாற்றில் சிறிய பஞ்சுருண்டை யை முக்கி, அக்குளுக்குள் தடவுங்கள். வேண்டுமெனி ல் எலுமிச்சை யை அப்படியே தடவலாம். இனி என்ன, நீங்கள் பயமில்லாமல் ஸ்லீவ் லெஸ் சட்டையை அணியலாம்.
திடமான அழகிய நகங்கள்
எளிதில் உடையக்கூடிய மஞ்சள் நிற நகங்களை கொண்டிருக்கிறீர் களா? அப்படியெனில் அழகு சாதனங்களில் எலுமிச்சை இருக்கும் வரை கவலைப்பட தேவையில்லை. எப்படியெனில், எலுமிச்சை சாற்றி ல் நகங்களை ஊற வைத்தால், நக ங்கள் திடமாக இருக்கும். மேலும் இது நகங்களின் பழுப்பு நிறத்தையு ம் நீக்கி, அழகாக ஜொலிக்கச் செய் யும்.
முகப்பருவுக்கு விடை கொடுங்க ள்
முகப்பரு மற்றும் இதர சரும புண்களுக்கு எலுமிச்சை சாறு நல்ல மரு ந்தாக விளங்கும். எலுமிச்சையில் வைட்டமின் சி அடங்கியுள்ளதால், சருமத்தை அது ஆரோக்கிய மாகவும் பளப்பளப்பாகவும் வைத்திருக்க உதவு ம். மேலும் அதில் உள்ள ஆல்கலைன் சருமத்தை, பருக்கள் மற்றும் இதர பிரச்சனைகளை ஏற்ப டுத்தும் பாக்டீரியாவிடம் இருந்து பாதுகா க்கும்.
அழகிய கரங்களுக்கு எலுமிச்சை
முகத்தை போல கைகளும் அதிக அளவில் வெளி ப்படும் ஒரு பாகமா கும். அதனால் அதனையும் நன்றாக பராமரிக்க வேண்டும். எலுமிச்சை சாற்றில் தேன் மற்றும் பாதாம் எண்ணெயை கலந்து, கைகளை மசாஜ் செய்யுங்கள். இது கைகளை சுத்தமாகவும், மென்மையாகவும் வைத்தி ருக்க உதவும். அதிலும் இது முழங்கையில் காணப்படும் கரு நிறத்தை வெளுப்பாக் கவும் செய்யும்.
உடல் எடை மெலிவதற்கு…
எலுமிச்சையில் அதிக அளவு பெக்டின் பைபர் உள்ளது. அது பசியை போக்க உத வும். பெக்டின் உள்ள உணவுகளில் கலோரி மற்றும் கொழுப்பு குறைந்த அளவில் உள்ளதால், அது உடலுக்கு நன்மையை விளைவி க்கும். மேலும் இவ்வகை உணவுகள், உடம்பில் உள்ள இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அள வை கட்டுப்பாட்டில் வைக்க உதவும். அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தா ல், உட ம்பும் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். இது கலோரிகளை எரி த்து, உடல் எடையை குறைக்கச் செய்யும்.
வாயை நற்பதத்துடனும் பற்களை சுத்தமாக வும் வைக்க…
வாயில் இருந்து வரும் துர்நாற்றத்தை போக்க எலுமிச்சை பெரிதும் உதவி புரிகிறது. மேலும் இது பல் வலி மற்றும் ஈறு வீக்கத்திற்கு நிவா ரணியாக விளங்கும். வெண்ணிற மற்றும் பளிச்சிடும் பற்களுக்கு, எலு மிச்சை பழத்தை சிறிது உப்பு அல்லது பேக்கிங் சோடாவில் தொட்டு, பற்களில் தேய்க்க வேண்டும்.
பொடுகுகளை நீக்க…
அரிக்கும் தலை அல்லது பொடுகு நிறைந்த தலை முடியுடன் வெளியி ல் செல்ல சங்கடமாக உள்ளதா? கவலை வேண்டாம்! தொந்தரவு அளி க்கும் இந்த பொடுகுகளில் இருந்து எலுமிச்சை காக்கும். அதற்கு தலை யில் எலுமிச்சையை தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்தால், நல்ல பலன் கிடைக்கும்.
அழகான கூந்தலுக்கு…
தலைமுடி தனிப்பட்டு தெரிய அல்லது தலைக்கு பயன்படுத்திய சாயங் களை நீக்க, ஏன் எலுமிச்சை போன்ற இயற்கையான வழிமுறைகளை நாடக் கூடாது? ஏனெனில் எலுமிச்சையை தலை முடி யில் தேவையா ன பகுதியில் தடவி, சிறிது நேரம் சூரிய ஒளியில் நின்று காய வையுங்கள். இதனால் தடவிய பகுதி மட்டும் தனித்து தெரிவது உறுதி. மேலும் எலுமிச்சையி ல் உள்ள சிட்ரஸ் அமிலம், தலை முடியில் பூசிய சாயத்தை இயற்கையான முறையில் நீக்கும்.
செரிமானத்திற்கு…
செரிமான பிரச்சனை அடிக்கடி வந்து செல்கி றதா? அப்படியானால் எலு மிச்சை செரிமான த்திற்கு பெரிதும் உதவி புரிகிறது என்பது உங்களுக்கு நல்ல செய்தியாக விளங்கப் போவது உறுதி. அதற்கு வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை கலந்து, சிறிது தேனையும் கலந்து பருகலா ம். இது உடலில் தேவையற்ற நச்சுத்தன்மையுள்ள பொருட் களை வெளியேற்ற உதவும். அழகுக்கு சருமம் மிகவும் முக்கியமாக உள்ளதால், மின்னும் சருமத்தை பெற ஆரோக்கியமான செரிமான அமைப்பு அவசி யமான ஒன்று.
எலுமிச்சையின் உடல்நல பயன்கள்
எலுமிச்சையில் வேறு பல உடல்நல பயன்களும் அடங்கியுள்ளது. அதில் செரிமான அமைப்பை நன்றாக வைக்க உதவுவதோடு மட்டும் நின்று விடாமல், புண்ணான தொ ண்டை, நெஞ்சு எரிச்சல் மற்றும் சரும அரிப்புக்கும் நிவாரணி யாக விளங் குகிறது. மேலும் புண்களை குணப் படுத்தவும் எலும்புகள் மற்றும் இணைப்பு தசைகளை ஆரோக்கியமாக வைக்கவும் உதவும். உடலின் திறன் அதிகரிக்க எலுமிச்சை மிகவும் உறுதுணையாக நிற்கிறது. மேலும் எலுமிச்சை எண்ணெயின் மனம் மன நிலையை ஊக்கப்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கும்.
No comments:
Post a Comment