Saturday, September 15, 2018

புத்திசாலி பிள்ளையும் புத்திசாலி அம்மாவும் :)

காலையில் எழுந்ததும் முடி திருத்தும் கடைக்கு சென்று வந்தவர் சாப்பிட போகும்போது மொபைலை தேடினார். வீட்டில் இல்லை. அங்கேயே விட்டு வந்திருப்பீர்கள் என்று சொல்லி பார்க்க சொன்னேன். புது vivo போன் வாங்கி ஒரு மாதம் கூட‌ ஆகவில்லை. உடனே அங்கே போய் கேட்டால் கடைக்காரன் இங்கு இல்லை நீங்கள் கையில் எடுத்து போனதை பார்த்தேன் என்று சொன்னாராம். இவரும் வழியில் எங்காவது விழுந்திருக்கும் என்று சொன்னார். போன் வாங்கும் போதே நானும் மகனும் அவருக்கு விலை அதிகமுள்ள மொபைல் வேண்டாம் என்று சொன்னோம். கேட்கவில்லை. இப்பொழுது காணோம் என்றதும் கஷ்டமாக இருந்தது. நான் அந்த கடைக்காரன்தான் எடுத்திருக்க வேண்டும் என்று சொன்னதற்கு அவன் நல்லவன் என்று இவரும் தெரியாமல் யார் மேலும் பழி போடக்கூடாது என்று மகனும் அவனுக்கு வக்காலத்து.
உடனே என் மகன் புத்திசாலித்தனமான ஒரு காரியம் செய்தான். கூகுளில் போய் locate my device என்று அவர் மெயில் ஐடி கொடுத்து தேடியதும் மொபைல் இருக்குமிடம் காட்டியது. அது அந்த பார்பர் கடை‌ இருக்கும்‌ ஏரியா தான். உடனே இரண்டு பேரும் அங்கு சென்று தேடினார்கள். மொபைலை ரிங் செய்யும் வசதியும் கூகுளில் இருக்கிறது. போன் சைலண்ட் மோடில் இருந்தாலும் சத்தம் வரும். சற்று நேரத்தில் வேறு இடத்தில் இருப்பதாக காட்டியது அங்கு போனால் அந்த பார்பரிடம்தான் இருந்தது. அவன் சும்மா உங்களிடம் விளையாடினேன். நீங்கள் கவனம் இல்லாமல் விட்டு சென்றதற்கு தண்டனை என்று நல்லவன் போல் சொல்லி போனை கொடுத்தானாம்
என் மகனின் புத்திசாலிதனத்தால் இன்று போன் கிடைத்தது. Vivo வை எனக்கு கொடுத்துவிட்டு என்னுடைய‌ readmi யை அவரை வைத்துக்கொள்ள சொல்லி விட்டேன் 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...