Monday, September 3, 2018

" பனை மரம் "

#தாய்லாந்து என்றாலே ஒரு உல்லாசபூமி
என்பது அனைவரின் கருத்தாகவே
இருக்கும் அதில் உண்மையும் உண்டு!
ஆனால் அதை நான் பார்க்கும் 
கண்ணோட்டம் வெவ்வேறு
விதமாக இருக்கிறது!
சேற்றில் தான் செந்தாமரை மலர்கிறது.
ஆனால் இதுவரை எந்த புலவர்களும் தாமரையை மட்டுமே புகழ்ந்து பாடியுள்ளனர்!
சேற்றில் இருப்பதை குறையாக அறம்
பாடியதில்லை!
இந்த தாய்லாந்து மண்ணில் கண்ட
பல நெருடலான வாழ்க்கைக்கு
இடையே ஒரு அருமையான விசயம்
பனை மரங்களுக்கு தரும் முக்கியத்துவம்!
ஃபுக்கட் நகரத்திலிருந்து கோ சா மி நகரம் செல்லும் ஆறுவழிச்சாலையான தேசிய நெடுஞ்சாலையின் மத்தியில் உள்ள பத்து அடி அகல மண் நிரப்பப்பட்ட பகுதியில் 20 அடிக்கொரு பனைமரங்களை பல மைல் தூரங்களுக்கு நட்டு வளர்த்துள்ளனர்!
இவற்றில் ஒரு மரம் ஆண்மரமாகவும் இன்னொன்று பெண் மரமாகவும்
வரிசையாக காய்த்துக்கொண்டுள்ளது!
எத்தனையோ சிறுமரங்கள்
இருந்தாலும் பனை மரங்களை நட்டு
வளர்த்தது அதற்கான முக்கியத்துவத்தை
உணர்த்தியது.
பனை மரம் என்கிற கற்பக விருட்சத்தை நம்முன்னோர்கள் குளக்கரையிலும் வயல் வரப்பிலும் காலியிடங்களிலும் நட்டு
வைத்தனர். காரணம் பனை மரம் நீரை
ஆவியாக்கி மேலே அனுப்புவதைவிட
தன் உருண்டை வேரின் மூலம்
நிலத்திற்குள் அனுப்புகிறது!
நாம் பனை மரங்களின் முக்கியத்துவத்தை உணராமல் வெட்டி வீழ்த்தி செங்கல் சூளைகளுக்கு அனுப்பியதன் விளைவு இன்றைய வறட்சிக்கான காரணங்களில் ஒன்று!
நீர்வளம் அதிகமான நாடுகளில் கூட
நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த
செய்கின்ற முயற்சிகளை நிலத்தடிநீர்
பற்றாக்குறையுள்ள நம் நாட்டில்
பின்பற்றினால் நீர்வள நாடாக மாறும்!
உல்லாச பூமியில் கூட..
நீர் இன்றியமையாது உலகு
என்பதை உணர்ந்துள்ள நிலையில்..
நாமும் பனைமரத்தை வளர்ப்போம்.
நீர்வள நாடாக மாற்றுவோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...