Saturday, September 1, 2018

தலைவலி...

தலை வலி என்பது 90 சதவிகித மக்களுக்கு, தங்களுக்கு எதற்கு வருகிறது என்று தெரியாமல் கண்ட மாத்திரைகளையும் தைலங்களையும் பயன்படுத்தி நமது உடலை உள்ளேயும் வெளியேயும் கெடுத்துக்கொள்கிறோம்.
தலைவலி ஒருசிலருக்கு ஒற்றை தலைவலியாக வலிக்கும். இது மட்டும்தான் நாம் மிகவும் கவனமாக மருத்துவரிடம் சென்று தக்க மருத்துவம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஆனால் சாதரணாமாக இரண்டுப்பக்கமும் வரும் தலைவலியானது எதோ ஒரு நோயின் அறிகுறியாக மட்டுமே இருக்கும். ஆனால் நாம் தலை வலி வந்ததும் என்ன செய்கிறோம்? ஒரு மாத்திரை போடுகிறோம். மாத்திரை தலைவலியை குணமாக்குவது கிடையாது. மாறாக நம்மால் அந்த வலியை உணரமுடியாதவாறு மாற்றுகிறது.
இந்த மாதிரி இரண்டு பக்கமும், சாதரணமாக அனைவருக்கும் வரும் தலைவலியானது பெரும்பாலும் மூளைக்கு அல்லது மற்ற உறுப்புகளுக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறையும்போது அதை நமக்கு அறிவுறுத்தவே வருகிறது. 98 சதவிகித தலைவலி இந்த காரணத்தினால்தான் வருகிறது. இதை நாம் சரிசெய்தாலே போதும் தலைவலியை விரட்டிவிடலாம்.
எளிமையான வழிகள்
தினமும் காலை வெறும் வயிற்றில் ஒன்னரை லிட்டர், மாலையிலும் ஒன்னரை லிட்டர் தண்ணீரை குடித்து வந்தால், நம் உடலின் இரத்த ஓட்டம் நன்கு வேகப்படுத்தப்படும். எடுத்ததும் இவ்வளவு தண்ணீர் குடிப்பது கடினம்தான். பழக்கபடுத்திக் கொள்ளுங்கள்.
அர்த்த சிரசாசனம் என்று கூகுளில் தேடுங்கள். அதில் வரும் ஆசனத்தை பழகி செய்து வர தலைவலி என்றால் என்ன என்று கேட்பீர்கள். எல்லாவற்றையும் விட இந்த ஆசனதிற்குத்தான் தலைவலி மிரண்டோடும். ஒரு வாரம் செய்தாலே ஒரு மாதத்திற்கு உங்களுக்கு தலைவலி பிரச்சினை இருக்காது.
"இதில் தலையை கீழே வைக்குபோது முழு பாரமும் கைகளில்தான் இருக்கவேண்டும். தலையில் பாரத்தை வைத்தால் தலைவலி அதிகமாகும். எனவே நன்கு தெளிவாக இந்த ஆசனத்தை கற்று பின் செய்து பலன்பெறுங்கள்." -

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...