Tuesday, September 4, 2018

நம்ப மாட்டீங்க? – ஒரு நாளைக்கு மூன்று கோப்பை காபி அருந்துபவர்களை.

நம்ப மாட்டீங்க? -ஒரு நாளைக்கு மூன்று கோப்பை காபி அருந்துபவர்களை…

நம்ப மாட்டீங்க? – ஒரு நாளைக்கு மூன்று கோப்பை காபி அருந்துபவர்களை…
காபி அருந்துவது குறித்து ஆதரவாகவும், எதிராகவும் பல
கருத்துகள் இருக்கின்றன. இந்நிலையில் மிதமாக காபி அருந்துவது பாதுகாப்பானது என்றும், அதுபோல ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூன்று, நான்கு கோப்பைகள் காபி அருந்துவது உடல் நலத்துக்கு நல்லது என்றும் சமீபத்திய ஆய்வு ஒன்று கூறு கிறது.
அதேநேரத்தில், கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகம் காபி அருந்துவது உடல் நலத்துக்குத் தீங்கானது என்கிறது இந்த ஆய்வறிக்கை.
உடல்நலக் காரணத்தை முன்வைத்து மக்கள் காபி அருந்த தொடங்க கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளது.
சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், மனித உடலில் காபியின் ஆதிக்கம் குறித்து ஆய்வு செய்தனர்.
அதில் காபி ( Coffee ) அருந்தாதவர்களுடன் ஒப்பிடும்போது, ஒரு நாளைக்கு மூன்று கோப்பை காபி அருந்துபவர்களை, இதயம் ( Heart ) சம்பந்தப்பட்ட நோய்கள் குறைவாகத் தாக்குகின்றன என்று தெரியவந்திருப்பதாகக் கூறுகின்றனர்.
குறிப்பிடத்தக்க விஷயமாக காபி அருந்துபவர்களை கல்லீரல் ( ( Lever ) சம்பந்தப்பட்ட நோய்கள் குறைவாக தாக்குகின்றன. குறிப்பாக கல்லீரல் புற்றுநோய்  ( Lever Cancer ) கட்டுப்படுத்தப் படுகிறதாம் .
ஆனால் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழக மருத்துவப் பேராசிரி யரும், ஆய்வாளர்களில் ஒருவருமான பால் ரொடரிக், காபி அருந்துவதால் மட்டும் இம்மாற்றம் ஏற்படுகிறது என்று உறுதியாகச் சொல்ல முடியாது என்கிறார்.
மேலும் அவர், வயது, புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவரா, உடற்பயிற்சி செய்பவரா என்பது எல்லாம் ஒருவரது ஆரோக்கி யத்தில் ஆதிக்கம் செலுத்தும் என்கிறார். காபியின் நன்மை குறித்து சமீபத்தில் வந்த பல ஆய்வறிக்கைகளுக்குத் துணையாக இந்த ஆய்வும் உள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...