Tuesday, September 4, 2018

முக்யமான வேலைகளை செய்யச் செல்லும் போது பட்ட அனுபவம் ஆயிரம் .

ஒரு நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் தன் பதவிக்கு விசுவாசமாக இல்லாதபோது,
அது அந்த ஒட்டுமொத்த நிறுவனத்தையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிடுகிறது.
நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அவர் முட்டுக்கட்டையாக ஆகிவிடுகிறார்.
அவர் தன் பதவியின் பொறுப்புகளுக்கு விசுவாசமாக இருக்கும்போதுதான், முன்னேற்றத்தை நோக்கி அந்நிறுவனத்தை அவரால் அழைத்துச் செல்ல முடியும்.
அந்தப் பதவியில் இருந்து கொண்டு,
அற்பமான விஷயங்கள்
அல்லது நிறுவனத்தின்
அன்றாட நெருக்கடிகளின்மீது
அவர் கவனம் செலுத்தக்கூடாது.
அவ்வாறு இவ்விஷயங்களில் கவனம் செலுத்தினால்,
அந்த நிறுவனத்தின்
அதிக சம்பளம் வாங்கும் கணக்கராக அவர் ஆகிவிடுவார்.
மாறாக,
ஒரு நிறுவனத்தின் தலைவர் எதிர்காலத்திற்கான ஒரு நோக்கத்தை உருவாக்க வேண்டும்,
வியாபாரக் கூட்டணிகளை உருவாக்க வேண்டும்,
இரண்டாம் நிலைத் தலைவர்களை உருவாக்க வேண்டும்,
விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளைக் கண்டுகொள்ள வேண்டும்,
மிக முக்கியமாக
எல்லாச் செயற்திட்டங்களும் ஒழுங்காக உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிறுவனத்தை எதிர்காலத்திற்குத் தயாராக்குவதுதான்
அவரது முதன்மையான பொறுப்பு.
உங்கள் பதவிக்கு விசுவாசமாக இருங்கள்.
அருமையான காலை
அற்புதமாக மலரட்டும்...
வளம் பெற்று வாழ
காலை வணக்கங்கள்.
கல்லும் உடையாமல்,
சிலையும் சிதறாமல்
பலரை உருவாக்கிய
#ஆசிரியர்கள் அனைவருக்கும்
#ஆசிரியர்தின வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...