Friday, October 5, 2018

ஆயுதங்களை வியாபாரம் செய்தார். அரசு ஆதரவுடன்... இவர் உபயோகப் பொருட்களைத் தானே விற்கிறார்.

யோகா மாஸ்டராக இருந்துகொண்டே பெருங்கோடீஸ்வரராக உருவெடுத்தவர் ராம் தேவ். யோகா கலையையே வியாபாரமாக்கிய அவர், ஆயுர்வேத மருந்துப் பொருட்கள் தயாரிப்பில் துவங்கி, பவர் வீட்டா, தேன், நெய், பால் பவுடர், கோதுமை மாவு, கடுகு எண்ணெய், அன்னாசி ஜாம், உப்பு, நூடுல்ஸ் என்று புறப்பட்டு தற்போது ஜீன்ஸ் பேண்ட், சர்ட் வரையில் அமோகமாக விற்று வருகிறார். மத்திய பாஜக ஆட்சியாளர்களின் ஆதரவுடன், ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இந்த விற்பனையை உயர்த்தியுள்ளார்.இந்நிலையில் ஒரு யோகா மாஸ்டர் எவ்வாறு இவ்வளவு பெரிய முதலாளியாக உருவெடுத்தார் என்பதை விளக்கும் வகையில், பதக் நாராயணன் என்பவர் நூல் ஒன்றை எழுதினார். சாமியாரிலிருந்து பெரிய தொழிலதிபர் வரை (From Godman to Tycoon) என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்த நூலை ஜகர்நட் என்ற பதிப்பகம் வெளியிட இருந்தது.
ஒரு சைக்கிளில் கிராமம் கிராமமாகப் போய் யோகா பயிற்சி அளித்து வாழ்க்கை நடத்தி வந்த ராம் தேவ், இன்று ஒரு பெரிய தீவையே விலைக்கு வாங்கும் அளவுக்கு கார்ப்பரேட்டாக எப்படி உயர்ந்தார்? என்ற விபரங்கள் இந்த நூலில் இடம்பெற்று இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை எப்படியோ அறிந்துகொண்ட ராம் தேவ், பதக் நாராயணன் எழுதிய நூலில் தன்னைப்பற்றிய அவதூறுகள் இடம்பெற்றுள்ளதாக கூறி, தில்லி உயர் நீதிமன்றத்திற்கு ஓடினார். நூலை வெளியிடுவதற்கும் விற்பதற்கும் தடை கோரினார்.தில்லி உயர் நீதிமன்றமும், ராம்தேவ் கூறியதை ஏற்று, பதக் நாராயணன் எழுதிய நூலை வெளியிடவும் விற்பதற்கும் தடை விதித்துள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...