Thursday, October 4, 2018

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

*நீங்கள் கேள்விப்பட்டதெல்லாம் ரெட் அலர்ட் மட்டும் தான்..! ஆனால், கிரீன் அலர்ட், மஞ்சள் அலர்ட் பற்றி உங்களுக்கு தெரியுமா..!!*
கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போதே "ரெட் அலர்ட்" என்ற வார்த்தை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்நிலையில் தமிழகத்தில் வரும் 7ம் தேதி அதி கனமழை பெயய வாய்ப்பு உள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை இந்திய வானிலை மையத்தால் விடப்பட்டுள்ளது.
தொடர்ந்து 5 நாட்கள் வானிலை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவது போல் அறிகுறி தெரியும் போது வானிலை ஆய்வு மையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும். அந்த எச்சரிக்கையானது மொத்தம் நான்கு வகையாகும். அவை
பச்சை எச்சரிக்கை (Green Alert )
மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert)
ஆம்பர் எச்சரிக்கை ( Amber Alert)
சிவப்பு எச்சரிக்கை (Red Alert).
பச்சை எச்சரிக்கை (Green Alert ): பச்சை எச்சரிக்கை அறிவித்தால், மக்கள் அச்சப்படத்தேவையில்லை. ஏனெனில், மழை பொழிவதற்கான அறிகுறி தென்பட்டால் மட்டுமே பச்சை எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert) : மிக மோசமான வானிலை இருக்கும் போது, மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இந்த எச்சரிக்கையின் போது, போது மக்கள் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.
ஆம்பர் எச்சரிக்கை ( Amber Alert): உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்படும் வகையில் வானிலை இருக்கும் சமயத்தில் ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இந்த நேரங்களில், பயணம் செய்வதை மக்கள் முற்றிலும் தவிர்க்கவேண்டும்.
சிவப்பு எச்சரிக்கை (Red Alert): மிக மிக மோசமான வானிலை இருக்கும் நேரத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை அறிவிக்கப்படும். அதாவது, மக்கள் தங்கள் உயிர், உடைமைகளை பார்த்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த எச்சரிக்கையின் போது, மின்சார சேவை நிறுத்தம், சாலை போக்குவரத்து திடீர் துண்டிப்பு உள்ளிட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் அளவுக்கு வானிலை இருக்கும் போது, ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...