Thursday, October 11, 2018

ஐந்து வகை வணங்குதல்கள் – யாரை எங்கே எப்ப‍டி வணங்க வேண்டும் – அரிய தகவல்.

ஐந்து வகை வணங்குதல்கள் – யாரை எங்கே எப்ப‍டி வணங்க வேண்டும் – அரிய தகவல்

ஐந்து வகை வணங்குதல்கள் – யாரை எங்கே எப்ப‍டி வணங்க வேண்டும் – அரிய தகவல்
ஒருவரை நாம் காணும்போது அவரை இருகரம் கூப்பி வணங்குவது
நம் தமிழர் பண்பாடு. ஆனால் இந்த இருகரம் கூப்பி வணங்குதல்களில் ஐந்து (5) வகைகள் உண்டு.

நாம், யாரை எப்ப‍டி வணங்க வேண்டும்? என்ற முறையினை சாஸ்திரங்கள் நமக்கு கூறுகின்றன• அதாவது மும்மூர்த்திகள், இதர தெய்வங்கள், ஆசிரியர், பெற்றோர், சான்றோர்கள் போன்றவர்களை வணங்கும்போது எப்ப‍டி வணங்க வேண்டும் என்ற முறையினை இதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முறையினை சாத்திரங்கள்  வகுத்துள்ள‍ன• இதோ அந்த முறைகள் . . .
சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளை வணங்கும் போது தலைக்கு மேலே இரண்டு கைகளையும் நேராக உயர்த்தி வணங்க வேண்டும்.
மற்ற தெய்வங்களையும், தேவர்களையும் வணங்கும்போது தலைக்குமேல் கையை உயர்த்தி வணங்க வேண்டும்.
ஆசிரியரை (குருவை) வணங்கும்போது இரண்டு கைகளையும் நெற்றிக்கு நேராக கைகூப்பி வணங்க வேண்டும்.
பெற்ற‍ தாயையும் வளர்த்த‍ தந்தையையும் மற்றும் நாடாளுபவர்களை வணங்கும் போது, இரண்டு கைகளையும் வாய்க்கு நேராக வைத்து கையை கூப்பி வணங்க வேண்டும்.

சிந்தனையாளர்களை, சான்றோர்களை அறநெறியாளர்களை வணங்கும் போது, நமது கைகளை மார்புக்கு நேராக குவித்து வைத்து வணக்கம் தெரிவிக்க வேண்டும்.
பெரியவர்களின் கால்களில் வீழ்ந்து வணங்கும்போது, நமது தலை, இரு கைகள் மற்றும் இரு முழங்கால்கள் ஆகியவை தரையில் படும்படி வீழ்ந்து அவர்களது பாதங்களை இரு கைகளால் தொட்டு கண்களில் ஒற்றிக்கொள்ள‍  வேண்டும் இந்த முறைக்கு பஞ்சாங்க வணக்கம்
இறைவனிடம் சரணாகதி அடைவதாக இருந்தால், நமது தலை, மார்பு, கைகள் இடுப்பு, தொடை கால் விரல்கள் போன்ற நன்றாக தரையில் படும்படி அதாவது குப்புறப்படுத்து வணங்க வேண்டும். (இந்த முறையிலான வணங்குதல் ஆண்களுக்கு மட்டுமே)

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...