Thursday, October 11, 2018

நீதிக்குத் தண்டனை – நாட்டாமை தீர்ப்பை மாற்றி சொல்லு.

நீதிக்குத் தண்டனை – நாட்டாமை தீர்ப்பை மாற்றி சொல்லு


இறையான்மையும், அறநெறியும் மதிப்பும் மாட்சிமையும் கொண்ட
நீதித்துறை என்று உலகளவில் பாராட்ட‍ப்பட்ட‍ இந்திய நீதித்துறையின் இன்றைய நிலவரம் கலவரமாகியிருக்கிறது.
ஏழை – பணக்காரன், வலியவன் – எளியவன், உயர்ந்தவன் – தாழ்ந்தவன் என்ற பாகு பாடின்றி நீதி வழங்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் நீதிதேவதையின் கண்கள் கட்ட‍ப்பட்டிருக்கின்றனவேயன்றி… கண்மூடித்தனமாக கன்றாவியான தீர்ப்புக்களுக் க‍ல்ல‍.
ஒழுக்க‍த்திற்கும் ஒப்புமையில்லாத உன்ன‍த உறவுமுறைக்கும் பெயர் பெற்ற‍ நம் புண்ணிய பூமியில்… ஓரினச் சேர்க்கைத் தவறில்லை என்றும் கள்ள‍க்காதல் நல்ல‍ காதல் என்றும் தீர்ப்ப‍ளிக்க‌ எப்ப‍டி இந்திய நீதிபதிகளால் முடிந்திருக்கிறது?
மதவழிபாடுகளில் மதச்சடங்குகளில் இதுவரை எவருமே தலையிடாதபோது அதை நீதிமன்றம்வரை கொண்டு சென்றதும் தவறு. அவற்றை நீதிமன்றம் ஏற்றுக் கொண் டு விசாரிக்க‍ முன்வந்ததும் தவறு. அதைவிட இந்தியாவின் ஆன்மீக உணர்வுகளை கொச்சைப்படுத்தும் படியான சபரிமலை தீர்ப்போ ஒரு வரலாற்றுப் பிழை.
ச‌பரிமலைக்கு பெண்கள் நுழைவு சம உரிமை என்று வாதாடுகிறவர்கள்… மாற்று மதங்களில் பெண்களின் உரிமை எப்ப‍டியிருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதற்காக போராடியிருக்கிறார்களா? கொடிப் பிடித்தார்களா? கோஷம் எழுப்பினார் களா? இல்லை நீதி தேவதையிடமாவது முறையிட்டார்களா?
இந்திய தேசத்தின் பல ஆலயங்களில் ஆண்கள் மேலாடையின்றி இறைவனை தரிசிக்க‌ வேண்டும் என்ற நியதியுள்ள‍தே அதை மாற்றி தீர்ப்பெழுத நீதிமன்றங்கள் முன்வருமா? இல்லை பெண்களும் அவ்வாறு வருவதில் தடையில்லை என்று கூச்ச‍மின்றி புரட்சித் தீர்ப்புதான் வழங்குமா? (கேவலமா சிந்திக்க‍ வைச்சுட்டீங்களே .. கனம் கோர்ட்டார் அவர்களே)
க‌ணவனை கண்கண்ட தெய்வமாக, மனைவியை மங்கல நாயகியாக, பெற்றோரை கடவுளாக, குழந்தைகளை தெய்வாம்சமாக ஏன்? இயற்கையைக் கூட இறைவனாக மதித்து மகிழ்ந்து வாழ்கிற கோடானகோடி மக்க‍ளைப் புறந்தள்ளி விட்டு சில (அ)நாகரீக பேய்களின் கூற்றுக்கு நீதிபதிகளும் நீதிமன்றமும் இரையாவது நீதிக்கு அவர்களை தருகிற தண்டனையாகும்.
சகிப்புத் தன்மைக்கும் மத ஒற்றுமைக்கும், சத்தியத்துக்கும் சாட்சியாக வாழ்ந்த அண்ண‍ல் காந்தி அடிகளின் 150 ஆவது பிறந்த நாளில்…
தீர்ப்புக்களைத் திரும்ப பெற… நாட்டாமை தீர்ப்பை மாற்றி சொல்லு என்று ஒற்றுமை யுடன் உரத்த‍ குரல் எழுப்புவோமாக, (உச்ச‍ நீதிமன்றத்தின் காதுகளில் விழும் அளவிற்கு)

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...