வருமான வரித் துறையினர் விரித்த வலையில் சிக்கிய துரைமுருகன், அதில் இருந்து மீண்டு வர வழி தேடிக்கொண்டிருக்கிறார்.வேலுாரில், தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மார்ச், 20ல் நடந்நது. அதில் பேசிய துரைமுருகன், 'வேலுார் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, ஆறு சட்டசபை தொகுதி களில், எந்த தொகுதியில், தி.மு.க.,வினர் அதிக ஓட்டுகள் வாங்கி தருகின்றனரோ, அந்த நிர்வாகிகளுக்கு, 50 லட்சம் ரூபாய், என் தனிப்பட்ட பணத்தில் இருந்து தருகிறேன்' என்றார்.
வாயால் கெட்டார்
இந்த பேச்சு தான், வருமான வரித்துறையினர், வேலுார் தொகுதி மீது, தனி கவனம் செலுத்த வழி ஏற்படுத்தி கொடுத்தது. தீவிர கண்காணிப்பில், இருந்த வருமான வரித்துறையினர், தங்களுக்கு கிடைத்த நம்பிக்கையான தகவலின் அடிப்படையில், மார்ச், 30ல் இரவு, 10:30 மணிக்கு, துரைமுருகன் வீட்டை சோதனையிட சென்றனர்.அதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், திடீர் நாடகத்தை அரங்கேற்றினர்.
நான்கு மணி நேரம் காத்திருப்பது போல் நடித்த அதிகாரிகள், துரைமுருகன் வீடு, கல்லுாரியிலிருந்து, பணம் வெளியேற்றப்படுகிறதா என்பதை கண்காணித்தனர். பின், சோதனையை துவக்கி, 10.50 லட்சம் ரூபாய், முக்கிய ஆவணங்கள், மூன்று, 'பென் டிரைவ்' உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.பென்டிரைவில் இருந்த தகவல்களில், வாக்காளர் பட்டியலும், ரகசிய குறியீடுகளும் இருந்துள்ளன. அதை பார்த்த அதிகாரிகள், பணப் பட்டுவாடாவுக்கான ரகசிய குறியீடாக கருதி, தீவிர விசாரணையில் இறங்கினர்.
நான்கு மணி நேரம் காத்திருப்பது போல் நடித்த அதிகாரிகள், துரைமுருகன் வீடு, கல்லுாரியிலிருந்து, பணம் வெளியேற்றப்படுகிறதா என்பதை கண்காணித்தனர். பின், சோதனையை துவக்கி, 10.50 லட்சம் ரூபாய், முக்கிய ஆவணங்கள், மூன்று, 'பென் டிரைவ்' உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.பென்டிரைவில் இருந்த தகவல்களில், வாக்காளர் பட்டியலும், ரகசிய குறியீடுகளும் இருந்துள்ளன. அதை பார்த்த அதிகாரிகள், பணப் பட்டுவாடாவுக்கான ரகசிய குறியீடாக கருதி, தீவிர விசாரணையில் இறங்கினர்.
மோப்பம்
துரைமுருகனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள் சிலரை, தங்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அவர்களிடம் இருந்து கிடைத்த தகவலையடுத்து, பணம் இருக்கும் இடங்களை மோப்பம் பிடித்தனர்.மார்ச், 31, ஏப்., 1 வங்கிகள் விடுமுறை என்பதால், முன்கூட்டியே பணத்தை குவித்ததையறிந்து, சோதனைக்கு நாள் குறித்தனர்.
வெளிமாவட்ட வருமான வரித்துறையினர், மார்ச், 31 மாலை வேலுாருக்கு வந்து சேர்ந்தனர். ஏப்.,1 காலை, 3:00 மணிக்கு சோதனை துவக்க திட்டமிட்டிருந்தனர்.இதற்கிடையே, வேலுார் கலெக்டர் அலுவலக பறக்கும்படையினர், காலி கவர் வேனை மடக்கிய போது, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, வருமான வரித்துறையினருக்கு, அவசர தகவல் சென்றது. உடனடியாக சோதனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என, உத்தரவு பறந்தது
உத்தரவு
ஏற்கனவே, வேலுாரில் முகாமிட்டிருந்த, வெளிமாவட்ட வருமான வரித்துறையினருக்கு, உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்தது. இவர்கள், கலெக்டர் அலுவலக பறக்கும் படையினருடன் சேர்ந்து, சோதனையில் ஈடுபட்டனர். நேற்று மாலை வரை, 33 கோடி ரூபாய் வரை கைப்பற்றியுள்ளனர். இந்த தொகை வருமான வரித்துறையினருக்கு பெரிய தொகையாக தெரியவில்லை.
'கப்சிப்!'
ஆனால், உள்ளூர் பறக்கும் படையினர், தொகையை பார்த்து வாய் பிளந்துள்ளனர்.பணம் கைப்பற்றப்பட்டதை அறிந்த துரைமுருகன், 'வசமாக சிக்கிக் கொண்டோம். இனி, அதிலிருந்து மீண்டு வரும் வழியை பார்ப்போம்' என, முடிவு செய்துள்ளார். அதற்காக தன் டில்லி நட்பு வட்டாரங்கள் மூலம், நிதித்துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டதாகவும், அங்கு கதவுகள் அடைக்கப்பட்டதால், வருத்தத்தில் உள்ளதாகவும், தி.மு.க.,வினர் தெரிவித்தனர். -
No comments:
Post a Comment