Tuesday, April 2, 2019

சின்னா பின்னமான திமுக கணக்கு.

தி.மு.க.,வின் முதன்மைச் செயலராக இருந்த துரைமுருகன், கருணாநிதி மறைவுக்கு பின், பொருளாளர் பதவிக்கு குறி வைக்கிறார். ஆனால், கடும் போட்டி உருவாகிறது. கனிமொழி, எ.வ.வேலு, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி என்று சீனியர்கள் முட்டி மோதினர். அனைவரையும் வீழ்த்தி, பொறுப்பை கைப்பற்றினார் துரைமுருகன். ஏற்கனவே சட்டசபை கட்சி துணைத் தலைவர் பதவி அவரிடம் உள்ளது. ஸ்டாலினை சரிக்கட்டி காரியம் சாதிக்கிறார் என்று மூத்த தலைவர்கள் கோபம். இது மேல் மட்ட பகை.
மகன் கதிர்ஆனந்துக்கு, வேலுார் தொகுதியில், சீட் வாங்க வேண்டும்; அங்கு ஜெயிக்க, பா.ம.க., உதவி தேவை என்பதால், பா.ம.க.,வை கொண்டுவர ரொம்பவும் மெனக்கிட்டார். அரக்கோணம் தொகுதியை விரும்பிய ஜெகத்ரட்சகனும், இதே ரூட்டில் பயணித்தார். இருவரும் ஸ்டாலினுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். மற்றவர்கள், பா.ம.க., வருகையை விரும்பவில்லை. ஸ்டாலினை தொடர்ந்து எச்சரித்தனர்.
அவர்கள், விரும்பியபடி எதிர் முகாமுக்கு போனது, பா.ம.க., ஏமாற்றம் துரைக்கும், ஜெகத்துக்கும்தான்; மற்றவர்கள் குஷி.
கோபமான துரைமுருகன், தே.மு.தி.க.,வை கலாய்த்து, அது, தி.மு.க., கூட்டணிக்குள் வராமல் தடுத்து விட்டார். இதெல்லாம் பார்த்து ஸ்டாலினுக்கு கடுப்பு. ஆனாலும், எதிர்ப்பை கண்டு கொள்ளாமல் வேலுாரை துரை மகனுக்கு ஒதுக்கியது. காரணம், அ.தி.மு.க., சார்பில் ஏ.சி.சண்முகம் நிற்கிறார். அவரை சமாளிக்க பணத்தை வாரி இறைக்க வேண்டும். மகன் ஜெயித்தாலும் தோற்றாலும் துரையின் கஜானா கணிசமாக கரைந்திருக்கும். இது உள்குத்து அரசியல்.
அப்பா காட்பாடி, எம்.எல்.ஏ., சட்டசபை கட்சி துணை தலைவர்; கட்சியின் பொருளாளர்; மகனுக்கு வேலுார் எம்.பி., சீட். என்ன, மொத்தக் குத்தகையா என்று வேலுார் தொகுதி, தி.மு.க., நிர்வாகிகளுக்கு எரிச்சல். நாம் யார் என்பதை, துரைமுருகன் குடும்பத்தினருக்கு காட்டுவோம்; ஆனால், அமைதி வழியில் என்று தீர்மானித்தனர். துரையுடனே இருந்தனர். அவரும் நம்பி, பொறுப்பான வேலைகளை கொடுத்தார். போதாதா... கூடவே இருந்து, தேர்தலுக்காக துரை செய்யும், தில்லாலங்கடி வேலைகள் மொத்தத்தையும் மொபைல் போன் மூலம் யாருக்கெல்லாம் தெரியக்கூடாதோ அவர்களுக்கு உடனுக்குடன் போட்டுக் கொடுத்தனர். இது கீழ்மட்ட கோபம்.
'வேலுார் கலெக்டர் ராமன், அ.தி.மு.க.,காரர். அவரை வைத்துக் கொண்டு, தேர்தலை நியாயமாக நடத்த முடியாது. அவரை மாற்ற ஏற்பாடு செய்யுங்கள்' என, துரைமுருகனை உசுப்பி விட்டனர். அவர் அதை ஸ்டாலினிடம் கூற, அவர் உடனே, 'வேலுார், தர்மபுரி, சேலம், நாமக்கல் கலெக்டர்கள் ஒருதலைபட்சமாக செயல்படுகின்றனர். அவர்களை மாற்ற வேண்டும்' என, தேர்தல் கமிஷனிடம் புகார் கொடுத்தார். இதனால், வேலுார் கலெக்டர் ராமனுக்கு கோபம். பறக்கும் படை அதிகாரிகளை அழைத்தார்.
இந்நிலையில் கலெக்டர் ராமன் வருமான துறை அதிகாரிகளை கையில் எடுத்தார், அவர்களுக்கு தகவல்களை பாஸ் செய்தார்,
இதற்க்கு முக்கிய காரணம் துறை முருகனின் பேச்சித்தான் எப்போது பார்த்தாலும் நான் யார் தெரியுமா நான் MGR ரை எதிர்த்தே அரசியல் செய்தவன் இவர்கள் எல்லாம் எனக்கு ஒரு தூசி என்று பேசி அடுத்தவர்களை மடடம தட்டுவது அவரது இயல்பு
'தி.மு.க வேட்பாளர் பண பட்டுவாடா செய்ய போவதாக தகவல் வந்துள்ளது. தடுத்தாக வேண்டும். சோதனையில் கிடைக்கும் எல்லா தகவல்களையும் எனக்கு அனுப்ப வேண்டும்' என, உத்தரவிட்டார்.
தொகுதி முழுக்க, பறக்கும் படை உஷார் ஆனது. துரை தரப்பினர், பல இடங்களிலும் பதுக்கி வைத்திருக்கும் தகவல்கள் குறித்து வந்த தகவல்களை தேர்தல் கமிஷனுக்கு, 'பாஸ்' செய்தார் கலெக்டர். அங்கிருந்து வருமான வரி துறைக்கு திருப்பப்பட்டது. அதை தொடர்ந்து, 'ஸ்கெட்ச்' போடப்பட்டது.
அவர்கள் துரைமுருகன் நண்பர்கள் போன் உரையாடலை ஒட்டு கேக்க ஆரம்பித்தனர் ,, அவர்களும் ஏராளமான தகவல்களை சேகரித்து விட்டனர் ,,
சோதனை நடப்பதற்கு முன் தினம், ஒரு கம்பெனியில் இருந்து, இரண்டு லட்சம் கவர்களை வாங்கி ஒரு லாரியில் எடுத்துச் சென்றனர். பறக்கும் படை சோதனையில் லாரி சிக்கியது. 'மொத்தமாக கவர் வாங்கி, சில்லரை விற்பனை கடைகளுக்கு சப்ளை செய்வோம்' என கூறினர். கலெக்டருக்கு தெரிவிக்கப்பட்டது. 'வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டாம். கவர்களையும் தொட வேண்டாம். போக விடுங்கள். ரகசியமாக கன்காணியுங்கள்' என்றார் கலெக்டர். லாரி துரைமுருகன் வீடு முன் நின்றது. சில நிமிடங்களில் அங்கிருந்து புறப்பட்டு, வெவ்வேறு இடங்களில் கவர் பார்சல்கள் இறக்கப்பட்டன. எல்லாம் வீடியோ பதிவாக கலெக்டருக்கு போனது. அதே நேரத்தில், துரைமுருகன் கூடவே இருந்த, அதிருப்தி கட்சியினர் அவ்வப்போது தெரிவித்த தகவல்களுடன், கலெக்டரின் தகவலும் ஒத்து போனது. மீண்டும் களத்தில் இறங்க வருமான வரி அதிகாரிகள் முடிவு எடுத்தனர்.
மார்ச், 29 இரவு, 10:௦௦ மணிக்கு மேல், காட்பாடியில் துரைமுருகன் வீட்டுக்கு வருமான வரி துறையினர், பறக்கும் படையினர் சென்றனர். இதை எதிர்பார்க்காத துரைமுருகன் தடுமாறினார். உடல் நிலை சரியில்லை என்று கூறி அவர்களை, ஓரிரு மணி நேரம் காக்க வைத்தார். அந்த அவகாசத்தில் ஏராளமான மூட்டைகள் விசுவாசமான கட்சிக்காரர்கள் வீட்டுக்கும், தொழில் நடத்தும் இடங்களுக்கும் மாற்றி விடப்பட்டன. இதனால், துரை வீட்டில் எதுவும் சிக்கவில்லை.
முதல், 'ரெய்டு' முடிந்து வெறும், பத்து லட்சத்துடன் அதிகாரிகள் கிளம்பிய பின், துரை அமைதியாக இருந்திருக்கலாம். அவருக்கே உரிய பாணியில், 'கருணாநிதியிடமே அரசியல் செய்தவன் நான்; என் வீட்டுக்கு வந்து, என்னோட பணத்தை எடுத்துட்டு போய்டுவாங்களா.. எங்கே எவ்வளவு வச்சிருக்கேன்னு, அவனுகளுக்கு தெரியுமா?' என்று உடனிருந்தவர்களிடம், 'பீலா' விட்டிருக்கிறார். அதையும், 'ரெக்கார்ட்' செய்து கலெக்டருக்கு அனுப்பி வைத்தது, ஒரு உடன்பிறப்பு.
இந்த இடத்தில் தான் ஒரு, 'டுவிஸ்ட்'
ஏப்.,1ம் தேதி அதிகாலை, 4:30 மணிக்கு, மீண்டும் முழுவீச்சில் 'ஆபரேஷன் துரை' தொடங்கியது.
துரைமுருகனின் காட்பாடி வீடு, கதிர் ஆனந்தின் பள்ளிகள், கல்லூரிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முன்னாள் துணைத் தலைவர் அலங்காநல்லுார் சக்கரவர்த்தி வீடு, மாவட்ட முன்னாள் செயலர் வாணியம்பாடி தேவராஜ் வீடு, வஞ்சியூர் பெருமாள், துரைமுருகன் உதவியாளர் செங்குட்டை அஷ்ரப் அலி, துரையின் பள்ளித் தோழரும், காட்பாடி பகுதி, தி.மு.க., செயலருமான காங்குப்பம் 'பூஞ்சோலை' சீனிவாசன் வீடு, அவருக்கு சொந்தமான பள்ளிப் பாளையம் சிமென்ட் குடோன், கடைகள், சீனிவாசனின் அக்கா மகன் சுகுமாரின் வீடுகள், அவர் தொடர்புடைய இடங்கள் என, 20 இடங்களில், சோதனை நடத்தப்பட்டது.
சிமென்ட் குடோனில் மூட்டை, மூட்டையாக பல கோடிகள் சிக்கின. எல்லாம் புத்தம் புதிய, 200, 500, 2,000 ரூபாய் நோட்டுகள். தனித்தனி தொகையாக பாலிதீன் கவர்களில் போட்டு, வார்டு வாரியாக பிரித்து, பண்டல் போட்டிருந்தனர். பூத் சிலிப்களோடு, வாக்களர் பட்டியல், பணம் எங்கு செல்ல வேண்டும், யார் மூலம் பட்டுவாடா செய்ய வேண்டும் உள்ளிட்ட விபரங்களும் இருந்தன. லட்சக்கணக்கான கவர்கள், பூத் வாரியாக பிரித்து கட்டி வைக்கப்பட்டிருந்தன. அந்த பட்டுவாடா பட்டியலில், உள்ள தி.மு.க.,வினரை விசாரிக்க வரி துறை முடிவெடுத்துள்ளது.
தொண்டர்களை மதிப்பதில், தி.மு.க.,வின் ப.சிதம்பரம் என புகழ் பெற்றவர் துரைமுருகன்.
யாரையும் மதித்தது இல்லை. ஏராளமான எதிரிகளை உருவாக்கி விட்டு, அவர்கள் யார் என்பதே தெரியாமல், கூடவே வைத்து கொள்வது, அவர்களிடமே ரகசிய வேலைகளை ஒப்படைப்பது அவருக்கு வாடிக்கையானது. அதோடு வாய்த்துடுக்கும் நேர்ந்ததால், சிக்கல் கழுத்தை சுற்றிவிட்டது.
இந்த தேர்தலில் துரைமுருகன் குடும்பத்தில் இருந்து, ஒரு எம்.பி., உருவாகக் கூடாது என்பது மாவட்ட உடன் பிறப்புக்களின் லட்சியம். 'சக்சஸ்' என்று பாராட்டும் வகையில் அந்த வேலையை செய்து முடித்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...