Tuesday, April 2, 2019

*ஏலக்காய்*

🍂 ஏலக்காயை பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும், கண்பார்வை அதிகரிக்கும்.
🍂 ஏலப்பொடி, சீரகப்பொடி, சோம்புப்பொடி ஆகிய மூன்றையும் 5 கிராம் வீதம் எடுத்து கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் பசி கூடும். ஜீரணம் அதிகரிக்கும்.

🍂 ஏலக்காய் 15, வால் மிளகு 15, மற்றும் மூன்று வெற்றிலை ஆகியவற்றை அரை லிட்டர் நீரில் கொதிக்க வைத்து பிறகு வடிகட்டி மூன்று வேளை குடித்தால் வாந்தி, குமட்டல் நிற்கும்.
🍂 ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு 5 ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்துபோல் போட்டால் தலைவலி சளி விலகும்.
🍂 ஏலக்காய், சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம் ஆகியவற்றை 20 கிராம் வீதம் எடுத்துக்கொண்டு நன்றாக வறுத்து பொடியாக்கி அரை தேக்கரண்டி சர்க்கரை அல்லது தேன் அல்லது நெய் கலந்து சாப்பிட்டால் (தினசரி 3 வேளை) உடல் வலி, பசியின்மை, அஜீரணம் ஆகியவற்றுக்கு நிரந்தர தீர்வு ஏற்படலாம்.
🍂 ஏலக்காய் 10, மிளகு 5, கையளவு ரோஜா மொக்கு ஆகியவைகளை ஒரு லிட்டர் நீரில் நன்றாக பாதியாகும் வரை காய்ச்சி வடிகட்டி தேவையான சர்க்கரை, பால் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி பெறும்.
🍂 ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு, இருமல், தொண்டை வலி ஆகியவைகள் தீரும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...