நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை -
அறிவு அற்றுப்போன மனிதன் இந்த மோடி -
இந்த நாட்டில் ஒரு கவுன்சிலராகக் கூட இருக்கத் தகுதியில்லாதவரை பிரதமராகக் கொண்டு வந்து உட்கார வைத்துவிட்டனர் இந்திய மக்கள் -
இவரின் குளறுபடிகளால் பாவம் இந்திய மக்கள், அதிலும் தமிழக மக்கள் வாழ்க்கையே இந்த நாலு வருடங்களில் வீணாகப் போய்விட்டது தெரியுமா?
அதிலும் இந்த NEET கொடுமை இருக்கிறதே?
தமிழகத்தில் மட்டும் 18 தனியார் மருத்துவ, பல் மருத்துவ கல்லூரிகள் இருக்கின்றன -
NEET வருவதற்கு முன்பு இவர்களெல்லாம் 50% அரசு ஒதுக்கீடு போக மீதமுள்ள 50% இடங்களை ஒரு சீட்டிற்கு 50 லட்சம் முதல் ஒரு கோடி வரை நன்கொடை பெற்றுக்கொண்டு வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே வழங்கி வந்தனர் -
NEET வந்ததற்குப் பிறகு இந்த இடங்கள் NEET-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும் என்பதால் இக்கல்லூரிகளுக்கு பல கோடி வருவாய் இழப்பு -
இதே போல் இந்தியா முழுவதும் எத்துனை மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன தெரியுமா?
ஒரு பழைய உண்மைச் சம்பவத்தை இங்கே குறிப்பிட்டு விட்டு பிறகு தொடர்கிறேன் -
அது 2001-ம் வருடம் ஜெயலலிதா முதல்வர் ஆன சில நாட்களில் ஒரு அறிவுப்பு -
அதாவது,
போக்குவரத்துத் துறையை முற்றிலும் தனியார்மயமாக்கப் போவதாக -
(செய்திருக்கலாம், இனிமேலாவது செய்ய வேண்டும்)
போக்குவரத்துத் துறையை முற்றிலும் தனியார்மயமாக்கப் போவதாக -
(செய்திருக்கலாம், இனிமேலாவது செய்ய வேண்டும்)
இங்கே எனக்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சிலர் நண்பர்களாக இருந்தனர் -
தனியார் பேருந்தின் மதிப்பு என்பது அதன் ரூட் மதிப்புதான் - (Permit)
அது அப்பொழுதே ஒரு கோடி முதல் மூன்று கோடி வரை இருந்தது,
போக்குவரத்துத் துறை தனியார் மயமாகிவிட்டால் அதன் பின் ரூட் மதிப்பு இருக்காது -
போக்குவரத்துத் துறை தனியார் மயமாகிவிட்டால் அதன் பின் ரூட் மதிப்பு இருக்காது -
தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஒரு பேருந்துக்கு 30,000 வீதம் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தில் செலுத்தி அந்தப் பணத்தை ஜெயலலிதாவிற்கோ, சசிக்கலாவிற்கோ தெரியாது அனுப்பி வைத்தனர்-
அதன் பின் அந்தப் பிரச்சினை அப்படியே ஓய்ந்து விட்டது - .
அது போலத்தான் _
இந்தப் பிழைக்கத் தெரியாத மோடி_
NEET - கொண்டுவரப் போகிறேன் என்று பாய்ச்சல் காட்டி தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் ஒரு கல்லூரிக்கு 10 கோடி என்று வசூலில் இறங்கி இருந்தாலும் கூட எளிதாக சில ஆயிரம் கோடிகளை நோகாமல் சம்பாதித்து இருக்கலாம் -
தனது தாய்க்கு கொடநாடு போல் சிம்லாவில் ஒரு எளிய எஸ்டேட்டை வாங்கிக் குடுத்திருக்கலாம் -
சகோதரர்கள் குடும்பங்களுக்கு Jazz சினிமாஸ் போல் சில தியேட்டர்களையும், நாலைந்து TV சேனல்களையுமாவது வாங்கிக் கொடுத்திருக்கலாம் -
இன்றைக்கு இவரது நேர்மையால் பாதிக்கப்பட்ட ஊடகங்கள், கட்சிகள் கூட இவரை இந்திரனே, சந்திரனே என்று புகழ்ந்து இருப்பார்கள் -
இந்த மனிதன்மூன்று முறை முதல்வராக இருந்தும் கூட சம்பாதிக்கத் தெரியவில்லை -
பிரதமர் ஆன பிறகாவது பிழைக்கத்தெரிய வேண்டாமா?
பிரதமர் ஆன பிறகாவது பிழைக்கத்தெரிய வேண்டாமா?
இங்கே, நமது அரசியல்வாதிகளைப் பாருங்கள் -
மோடி நாடு முழுவதும் 20 AIMMS மருத்துவக் கல்லூரிகள் வரும் என்று அறிவித்துவிட்டார் -
மோடி நாடு முழுவதும் 20 AIMMS மருத்துவக் கல்லூரிகள் வரும் என்று அறிவித்துவிட்டார் -
ஆனால்,
தமிழகத்தில் அவ்வளவு சுலபத்தில் நுழைய விட்டு விட மாட்டார்கள் இங்குள்ள தனியார் மருத்துவமனை உரிமையாளர்கள் -
தமிழகத்தில் அவ்வளவு சுலபத்தில் நுழைய விட்டு விட மாட்டார்கள் இங்குள்ள தனியார் மருத்துவமனை உரிமையாளர்கள் -
(10 வருடங்களுக்கு முன்பே நான் அடிக்கல் மட்டும் நாட்டினேன் என்று அன்புமணி கூறியது இதைத்தான் _ )
சில பல கோடிகளை அடித்து விட்டிருக்கிறார்கள்(இப்படியெல்லாம் பணம் கொடுத்தால் அப்புறம் கிட்னியை எடுத்து விற்காமல் எப்படி இருப்பான்கள் )
தமிழக அரசு இடம் தேர்ந்தெடுத்து கொடுத்தால் தானே AIMMS வரும் -
தமிழக அரசு இடம் தேர்ந்தெடுத்து கொடுத்தால் தானே AIMMS வரும் -
இன்று அதையும் மீறி வெற்றிகரமாக அடிக்கல் நாட்டிவிட்டார் -
வேலைகள் நடைபெறுகின்றன -
வேலைகள் நடைபெறுகின்றன -
எனக்குத் தெரிந்து மாவட்டத்திற்கு ஒரு கேந்திரிய வித்யாலயா (KV) பள்ளிகளை இலவசமாக மத்திய அரசு தருகிறது-
தேனி மாவட்ட ஒதுக்கீடு அரசு இடம் தராததால் 25 வருடங்களாக அப்படியே இருக்கிறது -
அதே போல்தான் நவோதயாக்களும் -
காரணம் இவர்கள் சொல்வது போல ஹிந்தி எதிர்ப்பெல்லாம் ஒன்றுமில்லை -
தனியார் பள்ளிகள் ஒழிந்து விடுமே என்ற கவலைதான் (இதில் பெரும்பாலான கல்வித் தந்தைகள் இந்த பெரியாரின் பேரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது)
இது போன்று இங்குள்ள திராவிட தியாக அரசியல்வாதிகளைப் போல் வேண்டாம் -
கொஞ்சமே கொஞ்சமாவது பிழைக்கத்தெரிய வேண்டாமா இந்த தாடி வைத்த மோடிக்கு -
என்ன பிள்ளையோ, என்ன வளர்ப்போ போங்கள் -
பெத்த தாய்க்கு ஒரு ஆடிக்கார் கூட வாங்கித்தராமல் ஆட்டோவில் அலைய விட்டிருக்கிறார் -
எங்க ஊர்ல ஜட்டிக்கு மேல கோவணம் கட்டுன விவசாயிக்கு கூட ஆடி கார் இருக்கே -
எங்க ஊர்ல ஜட்டிக்கு மேல கோவணம் கட்டுன விவசாயிக்கு கூட ஆடி கார் இருக்கே -
யாராவது அவர்கிட்ட சொல்லுங்க -
தேசப்பணியில் என்றும் -
🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️
🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️
No comments:
Post a Comment