இச் செய்தியால்..இரண்டு விஷயங்கள் கவனம் பெறுகின்றன.
1. ஏப்ரல் 23-ல் ..ஜாமீனில் இருக்கும் சோனியா, ராகுல் மீதான நேஷனல் ஹெரால்டு வழக்கின் இறுதி விசாரணை தலைமை நீதிபதி கோகோய் முன் நடக்க இருக்கிறது.
2. அடுத்த வாரம், ரபேல் விவகாரத்தில்..ஊழல் நடந்திருக்கிறது என்று உச்சநீதிமன்றமே சொல்ல விட்டது என்று அவதூறாக பொய் செய்தியை பரப்பியதற்காக ..ராகுல் காந்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..தலைமை நீதிபதி கோகோய் முன் விசாரணைக்கு வர இருக்கிறது.
இந்த நிலையில்....இன்று...தலைமை நீதிபதி கோகோய் மீது அவரிடம் பணிபுரியும் பெண்..பாலியல் புகார் அளித்திருக்கிறார் !
ரபேல் விவகாரமும் விசாரணைக்கு வர இருக்கிறதே என கேட்கலாம். ஆனால்..ரபேல் வழக்கு நீண்ட வருடங்கள் நடக்கக் கூடிய தன்மை கொண்டது. ஊழல் உண்டா இல்லையா என்று சொல்வதற்கே மாதங்கள் ஆகும்.
7 கட்டங்களாக நடக்கும் பாரளுமன்ற தேர்தலில் ..இன்னும் 5 கட்ட தேர்தல்கள் நடக்க வேண்டி இருக்கிறது. இந்த நிலையில்.. கோகோய் க்கு நெருக்கடி கொடுப்பதன் மூலம் உடனடி பலன் பெற விரும்புவது யார்? என்பதே கேள்வி.
No comments:
Post a Comment