ஒவ்வொருவருக்கும் இஷ்ட தெய்வம் இருக்கும் அடியேனை பொறுத்தவரை அது ஸ்ரீ கிருஷ்ணனே. அடியேன் முகநூல் பெயரே சர்வம் கிருஷ்ணார்ப்பணம்தான். கிருஷ்ணன் மற்ற தெய்வாம்சங்களை விட வேறுபட்டவன். அதர்மத்தை அதர்மத்தால் அழிப்பவன். தர்மத்தை நிலைநிறுத்த குறுக்கு வழியில் செல்லத் தயங்காதவன். சட்டத்திட்டங்கள், நெறிமுறைகள் என அனைத்தும் தர்ம பரிபாலனத்துக்கே என்றும், அந்த தர்ம பரிபாலனத்திற்காக சட்ட திட்டங்களை, நெறிமுறைகளை மீறுவதில் தவறில்லை என்றும் உணர்த்தியவன். அதர்மத்தை எதிர்த்து போராடுவதே சிறந்த தர்மம் என்று போதித்தவன். வழி முறைகளை விட நோக்கம் மிக முக்கியமானது என உணர்த்தியவன். எதை செய்கிறாய் என்பது முக்கியமல்ல எதற்காக செய்கிறாய் என்பதுதான் முக்கியம் என்று தன் அவதாரத்தின் மூலம் செயலாற்றிக் காட்டியவன். அப்பழுக்கற்ற ஆதிமூலம் அவன்.
16000 கோபிகைகளின் மணவாளன் அவன், ஆனால் அப்பழுக்கற்ற பிரம்மச்சாரி. ராதை, ருக்மினி, சத்யபாமா மற்றும் கோபிகைகளோடு அவன் உடல் ரீதியாக உறவு கொள்ளவில்லை. அவனின் பந்தம் மிக மிக பவித்திரமானது. அவனின் ஆன்மீக லீலைகளை எத்தனை எடுத்து சொன்னாலும் காமக் கொடூரர்களால் புரிந்துக் கொள்ள இயலாது. உடல், மனம், அறிவை கடந்து ஆத்ம தரிசனத்தை போதிக்கும் அவனுக்கு உடல்சார் இச்சைகள் எள்ளளவும் இல்லை. ஆசைகளை கடந்த அரியவன் அந்த ஹரி. கிருஷ்ணனோடு ஒப்பிடுகையில் நானெல்லாம் ஒரு பிரம்மாச்சாரியே இல்லை என்கிறார் பீஷ்ம பிதாமகர்.
பாரதப் போரின் இறுதியில் அபிமன்யு மனைவி உத்தரையின் வயிற்றில் இருக்கும் பாண்டவ வம்சத்தின் கடைசி வாரிசான குழந்தையை குறி வைத்து, பிரம்மசீரா எனும் அஸ்திரத்தை பயன்படுத்துகிறான் அஸ்வத்தாமன். பிரம்மாஸ்திரத்தை விட மிக சக்தி வாய்ந்தது இந்த அஸ்திரம். குழந்தை இறந்து விடுகிறது. உத்தரை கதறி அழுகிறாள். "பாண்டவர்களின் வம்சத்தை காப்பேன் என கிருஷ்னா நீ வாக்கு தந்திருந்தாயே ?" என்று கேட்கிறாள்.
கிருஷ்ணன் அமைதியாக சென்று தியானத்தில் ஆழ்கிறான். "நான் தர்மத்தையும், பிரம்மச்சரியத்தையும் ஒரு பொழுதும் தவறாமல் பின்பற்றியது உண்மையானால் இந்த குழந்தை உயிர் பெறட்டும்" என்கிறான். குழந்தை நொடி பொழுதும் தாமதிக்காமல் உயிர்த்தெழுகிறது. வெள்ளைக்கார ஜீசஸின் உயிர்த்தெழுதல் கதைக்கெல்லாம் மிக மிக முந்தைய சரித்திரம் இது. ஆக அப்பழுக்கற்ற அந்த கிருஷ்ணனை பெண் பித்தன், காமுகன் என்றெல்லாம் அசுரர்கள், அரக்கர்கள் மனநோயாளிகள், அழைப்பது மகாபாரத காலத்திலேயே இருந்துள்ளது. ஆக வீரமணி போன்ற பதர்கள் கிருஷ்னணை விமர்சிப்பது, மானமில்லாமல், வெட்கமில்லாமல் இருக்கும் இந்துக்களை தட்டி எழுப்பவே என்றே கருதுகிறேன். யார் கண்டார்கள் ஜடமாக இருக்கும் பல இந்துக்களை விழிப்புணர்வு பெற வைக்க இதுவும் அந்த மாயக்கண்ணனின் லீலையோ என்னவோ ? இன்னும் நிறைய வீரமணி போன்ற அசுரர்கள் தோன்றி தமிழக இந்துக்களை தட்டி எழுப்ப வேண்டும் என பிரார்த்திக்கிறேன். சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.கருடசேவகம்.

No comments:
Post a Comment