ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை திமுக கூட்டணியின் விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் வந்து கொண்டே இருக்கின்றன ...
சன் குழுமம் மற்றும் கருணாநிதி குடும்பத்தினரின் சேனல்கள் மட்டுமே இருபதைத்தாண்டும்.. போதாததற்கு மீதி இருக்கும் எல்லா சேனல்களிலும் விளம்பரம் செய்கிறார்கள்... யூ டியூபில் எந்த வீடியோவைப் பார்க்க முயன்றாலும் இவர்களின் விளம்பரங்கள்தான் முதலில் வருகின்றன..
டைம் ஸ்லாட்டுக்கு இவ்வளவு என்று இவர்கள் வழக்கமாக வர்த்தக நிறுவனங்களிடம் வாங்கும் தொகையை வைத்து கணக்கிட்டுப்பார்த்தால் , இந்த விளம்பரங்களுக்கான செலவு மட்டும் பலநூறு கோடிகளைத்தாண்டும்...இவையெல்லாம் தேர்தல் செலவில் வராதா?
அதுவும் இந்த கொள்ளைக்கும்பலுக்கு தங்கள் ஆட்சி கால சாதனைகளை சொல்லி ஓட்டுக்கேட்க வக்கில்லாததாலும் , தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இன்னின்னதெல்லாம் செய்வோம் என்று வாக்குறுதி கொடுக்கும் நேர்மையில்லாததாலும் , தற்போது ஆட்சியில் இருக்கும் கட்சிகளை மிகத் தரக்குறைவாக தாக்கி விளம்பரங்கள் வருகின்றன..
இவற்றையெல்லாம் கண்காணிக்க தேர்தல் ஆணையத்துக்கு நேரம் இல்லையா ?அல்லது விருப்பம் இல்லையா ?
ஊரில் உள்ள திருட்டுப் பயல்கள் எல்லாம் ஆளுக்கு ஒரு சேனல் ஆரம்பித்துக்கொண்டு , இவர்களாக ஒரு திருட்டுக் கூட்டணி அமைத்து , நொடிக்கு ஒரு முறை விளம்பரம் செய்து பொது மக்களை மூளைச் சலவை செய்யலாம் என்றிருந்தால் இது என்னவிதமான ஜனநாயகம் ? சொந்தமாக டிவி சானல்கள் இல்லாத கட்சிகள் எல்லாம் இனி இந்த தேசத்தில் தேர்தலில் போட்டியிடவே முடியாதா?
வாகன சோதனை என்ற பெயரில் பொதுமக்களிடமும் , வியாபாரிகளிடமும் வழிப்பறி செய்வது மட்டும்தான் தங்கள் கடமை என்று தேர்தல் ஆணையம் நினைக்கின்றதா? இதுதான் நீங்கள் தேர்தல் நடத்தும் லட்சணமா?
எது எதையோ தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து , விளம்பரம் தேடிக் கொள்ளும் டேஷ் மன்றங்களுக்கு கண்முன்னே தெரியும் இந்த அநியாயத்தை கண்டு கொள்ள மனமில்லையா?
இந்த நாடும் , நாட்டு மக்களும்..
No comments:
Post a Comment