*"தேவைப்படும் நேரங்களில் அணிந்து கொள்வதற்கும், மற்ற நேரங்களில் கழட்டி வைப்பதற்கும், உருத்திராக்கம் ஒன்றும் வேறு அல்ல."*
*தூங்கும் போதும், விரும்பிய உணவை உண்ணும் போதும், மலம் சலம் கழிக்கும் போதும், இல்லறத்தின் போதும், துக்க வீட்டிற்கு செல்லும் போதும்........ சிவபெருமான் உன்னை விட்டு விலகுவதே இல்லை. அதனால், இது போன்ற நேரங்களில் உருத்திராக்கத்தை கழட்டி வைக்க எந்தவொரு அவசியமும் இல்லை. "எந்நேரமும்" சிவச்சின்னங்கள் அணிந்தே இருக்கலாம்.*
*நால்வர், நாயன்மார்கள் ஆகிய சிவனடி சேர்ந்த எவரும், சிவச்சின்னங்கள் அணிய விதிமுறைகள் வகுக்கவில்லை. ஆதலால்..... உருத்திராக்கம் அணியலாமா வேண்டாமா என்ற குழப்பம், இனி உங்களுக்கு வேண்டாம்.*
*நெற்றியில் திருநீறு. கழுத்தில் உருத்திராக்கம். நாவில் நமச்சிவாய என்ற நாதன் நாமம். சிந்தையில் சிவம். இப்படிபட்ட தன்மையுடன் வாழ்பவன் புனிதன். அவன் செய்யும் எல்லா செயல்களும் புண்ணிய செயலே. சிவபெருமானை நினைத்து, நமச்சிவாய என்று சொல்லி எதையும் செய். உருத்திராக்கம் அணிந்து எல்லா செயல்களையும் செய்.*
*உருத்திராக்கம் உன்னோடு இருந்தால், சிவபெருமான் உன்னோடு இருப்பது போல் ஆகும். அவரை விட்டு விலக நினைக்காதே. சிவச்சின்னங்களை ஒதுக்காதே.*
*திருநீறு பூசுங்கள். உருத்திராக்கம் அணியுங்கள். நமச்சிவாய என்று நாதன் நாமத்தை சொல்லி, எல்லா செயல்களையும் செய்யுங்கள். உருத்திராக்கம் அணியாமல் நீங்கள் செய்யும் செயல்களால், உங்களை வினை தொற்றிக் கொள்ளும். சிவச்சின்னங்கள் அணிய, வினை அண்டாது. வினை தொற்றாமல் வாழ்பவர் தான் இன்புற வாழ்வார். இன்புற வாழ்வாரே இறைவன் அடி சேர்வார்.*
*வாழ்தலே வழிபாடு. நமச்சிவாய.*
No comments:
Post a Comment