செல்வத்தை தரும் மகாலட்சுமி மட்டுமல்லாமல் அஷ்டலட்சுமிகளும் நம் உடலில் குடி இருக்கிறார்கள். மகாலட்சுமி மட்டுமில்லாமல் எந்தெந்த லட்சுமி எந்தெந்த பாகங்களில் இருக்கிறார்கள் எனப் பார்ப்போம்.
ஆதிலட்சுமி நம் பாதங்களில் வசிக்கிறாள், நம் பாதம் பிறர்மீது தெரியாமல் பட்டால் சிவ சிவ எனக்கூறி மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் ஆதிலட்சுமி நம்மை விட்டு விலகி விடுவாள் என்பது ஐதீகம்.
கஜலட்சுமி நம் முழங்கால் பகுதியில் வசிக்கிறாள். அதனால்தான் காலை நீட்டியபடி படிக்க, சாப்பிடக்கூடாதென முன்னோர்கள் சொல்வர். அரிசி இவைகளை கால்லளால் மிதிப்பதாலும் நம்மை விட்டு கஜலட்சுமி விலகுவாள்.
வீர்ய லட்சுமி நம் இடுப்புக்கு கீழ் பகுதியில் வசிக்கிறாள். பிறரை நித்திப்பதன் மூலம் சாபம் பெறுபவர்களை விட்டு இந்த வீர்யலட்சுமி விலகுகிறாள்.
நம் இடது தொடையில் வசிப்பவள் விஜயலஷ்மி. இடது தொடை எப்போதும் மனைவி கணவனுக்குச் சொந்தம். எனவே மனைவி கணவனை விடுத்து பிறன்மனை நோக்கினால் இந்த விஜயலட்சுமி விலகி விடுவாள்.
வலது தொடையில் வசிப்பவள் சந்தானலஷ்மி. பெற்றோர்கள் கன்னிகாதானம் செய்யும்போது பெண்ணை வலது தொடையில் அமர வைக்க வேண்டும். இடது தொடையிலோ இரு தொடைகள் இடையே அமர வைத்தால் இந்த ‘சந்தானலஷ்மி’ விலகி விடுவாள்.
தான்யலட்சுமி நமது வயிற்றுப் பகுதியில் வசிக்கிறாள். எச்சில் உணவு, ஊசிப்போன உணவு இவைகளை ஏழைகளுக்கோ, பிறருக்கோ கொடுத்தால் தான்ய லட்சுமி விலகி விடுவாள்.
தைரியலட்சுமி நமது நெஞ்சுப் பகுதியில் வசிக்கிறாள். நெஞ்சிலே நஞ்சை வைத்து பிறரைக் குறைக்கூறி குடும்பத்தை கெடுப்பவர்களை, நெஞ்சறிய பொய் சொல்பவர்களை விட்டு தைரிய லட்சுமி விலகுகிறாள்.
வித்யாலட்சுமி நமது கழுத்துப் பகுதியில் வசிக்கிறாள் . கழுத்தில் ஒரு ருத்ராட்சம் அணியாதவனும், பூணூல், தாலி என குடும்ப பராம்பரிய சின்னத்தை அணியாதவர்களை விட்டு வித்யா லட்சுமி விலகுவாள்.
செளபாக்யலஷ்மி நம் நெற்றியின் மத்தியில் வசிக்கிறாள். குங்குமம் வைக்காதவர்களையும், வகிட்டில் குங்குமம் வைக்காமல் இருப்பதாலும் வீபூதி, நாமம் என அவரவர் சின்னத்தை அணியாவிட்டாலும் நம்மை விட்டு சௌபாக்ய லட்சுமி விலகுகிறாள்.
No comments:
Post a Comment