Friday, October 4, 2019

எந்தெந்த ஹோரைகளில் என்னென்ன செய்யலாம்; செய்யக்கூடாது?


சூரியன்: உத்தியோகத்தில் சேர்தல். பத்திரங்கள் மற்றும் உயில் எழுதுதல், சிபாரிசு செய்தல் போன்றவற்றை சூரிய ஹோரையில் செய்வது சிறப்பு. ஆனால் இந்த ஹோரையில் பயணம் தொடங்குதல், புதுவீடு குடிபுகுதல் கூடாது.
சந்திரன்: வியாபாரம் துவங்குதல், யாத்திரை செல்லுதல், வெளிநாடு புறப்படுதல் ஆகியவற்றை இந்த ஹோரையில் மேற்கொள்ளலாம். தேய்பிறை நாட்களில் இந்த ஹோரையில் சுப காரியங்களை விலக்கவும்.
செவ்வாய்: மருத்துவமனைப் பணிகள், அறுவை சிகிச்சை, மருந்து அருந்துதல் ஆகியவற்றுக்கு உகந்த ஹோரை இது. ஆனால் செவ்வாய் ஹோரையில் சுபகாரியங்களைத் தவிர்க்கவும், பேச்சைக் குறைக்கவும் வேண்டும்.
புதன்: வழக்கு தொடர்பாக வழக்கறிஞரை அணுகுதல், கதை- கட்டுரைகள் எழுதுதல், ஜாதகம் பார்த்தல், புதுக்கணக்கு தொடங்குதல், நிலம் வாங்குதல் ஆகியவற்றுக்கு உகந்தது.
குரு: இந்த ஹோரையில் எடுத்த காரியங்கள் அனைத்தும் நன்மை பயக்கும். இந்த ஹோரை வேளையில் முகூர்த்தம் அமைவது உத்தமம். ஆடை- ஆபரணங்கள் வாங்குதல், திருமாங்கல்யத்துக்கு பொன் வாங்க, நகைக் கடை துவக்க, பெரிய தொழில்கள் செய்ய உகந்த ஹோரை இது.
சுக்கிரன்: திருமணம் சம்பந்தமான செயல்கள் தொடங்குதல், சாந்தி முகூர்த்தம், ஆடை- ஆபரணம் அணிதல், அழகு பொருட்கள், ஆடை வியாபாரம் தொடங்குதல், சுப நிகழ்ச்சிகள், விருந்து அளித்தல், புதிய வாகனங்கள் வாங்குதல் ஆகியவற்றுக்கு உகந்தது.
சனி: நிலம், வீடு- மனை வாங்க விற்க முயற்சிக்கலாம். இரும்பு சாமான்கள் வாங்குதலும் நலம் சேர்க்கும். ஆனால், இந்த ஹோரையில் பிரயாணம், மருத்துவமனை செல்லுதலைத் தவிர்க்க வேண்டும்.
சுப ஹோரையில் அஷ்டமி, நவமி, மரண யோகம், பிரபாலாரிஷ்ட யோகம் ஆகியற்றைப் பார்க்க வேண்டாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...