Friday, October 18, 2019

சன்னி வக்பு வாரிய முடிவால் முஸ்லிம் தரப்பினர் அதிர்ச்சி: அயோத்தி வழக்கில் திடீர் திருப்பம்.

அயோத்தி வழக்கில், மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற தயாராக இருப்பதாக, சன்னி வக்பு வாரியம் அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக, முஸ்லிம் தரப்பினர் தெரிவித்து உள்ளனர்.

உத்தர பிரதேசமாநிலம், பைசாபாத் மாவட்டம், அயோத்தியில், ராமர் பிறந்த இடத்தில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் நீதிமன்றம், 2010ல் தீர்ப்பளித்தது.'சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலத்தை, சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாடா மற்றும் ராம் லல்லா பிரித்துக் கொள்ள வேண்டும்' என, தீர்ப்பில் கூறப்பட்டது.

 சன்னி, வக்பு வாரிய ,முடிவால்,முஸ்லிம், தரப்பினர், அதிர்ச்சி: அயோத்தி ,வழக்கில், திடீர், திருப்பம்

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில், 14 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த பிரச்னை குறித்து சமரசம் ஏற்படுத்த, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா தலைமையில், மூன்று பேர் குழுவை, உச்ச நீதிமன்றம் அமைத்தது.இந்த குழு நடத்திய பேச்சில், சமரசம் ஏற்படவில்லை.

இதையடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, ஆக., 5 முதல், தொடர்ந்து, 40 நாட்கள் விசாரணை நடத்தி முடித்து, இறுதி தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.இந்த விசாரணையின் இறுதி நாளன்று, மத்தியஸ்த குழுவின் சமரச பரிந்துரை, தலைமை நீதிபதியிடம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், அயோத்தி வழக்கில் திடீர் திருப்பமாக, 'மத்தியஸ்த குழு அளித்துள்ள சமரச பரிந்துரை, ஹிந்து - முஸ்லிம் இரு தரப்புக்குமே மகிழ்ச்சியை அளிக்கும்' என, சன்னி வக்பு வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷாஹித் ரிஸ்வி கருத்து தெரிவித்தார்.இதையடுத்து, தங்கள் மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற, சன்னி வக்பு வாரியம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து, முஸ்லிம்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இஜாஸ் மெக்பூல் கூறுகையில், ''இந்த சமரச முயற்சி உள்நோக்கம் கொண்டது. ''சன்னி வக்பு வாரியத்தை தவிர, முஸ்லிம் தரப்பைச் சேர்ந்த மற்ற அனைவரும், மத்தியஸ்த குழுவின் சமரச பரிந்துரையை நிராகரித்து விட்டோம். சன்னி வக்பு வாரியத்தின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது,'' என்றார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...