திருமணங்களுக்கு தடை வருவதும், அதற்கு பரிகாரம் செய்வதும் நிறைய இடங்களில் நடக்கின்ற செயல். அந்த வகையில் தமிழ்நாட்டில் திருமணத் தோஷப் பரிகாரத்துக்கு நிறைய கோயில்கள் இருக்கின்றன.
சென்னையில் உள்ள நந்தீஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தியம் பெருமானுக்கு தொடர்ந்து 5 பிரதோஷங்கள் இரு ரோஜா மாலையை வாங்கி சாற்றினால் திருமணத்தடை நீங்கிவிடும்.
சென்னை-செங்கல்பட்டு வழியில் உள்ள சிங்கப்பெருமாள் ஆலயத்தில் நரசிம்மர் த்ரிநேத்ரதாரியாய் அருள்கிறார். அந்த மூன்றாவது கண்ணை தரிசனம் செய்பவர்களுக்கு எல்லா தடைகளும் விலகி, திருமணம் கைகூடுகிறது.
சென்னை மயிலாப்பூர் ஆதிகேசவப்பெருமாள் ஆலயத்தில் உள்ள மயூரவல்லித் தாயாருக்கு வெள்ளிக்கிழமை வில்வத்தளங்களால் சுக்த அர்ச்சனை செய்தால் மனநிறைவாக திருமணம் நடைபெறுகிறது.
திருமண தோஷம் உள்ளவர்கள் திருச்செந்தூரில் நாழிக்கிணற்றில் நீராடி பின் கடலில் குளித்து செந்தூரனை வணங்கி, குகை லிங்கத்தை தரிசித்தால் தோஷம் நீங்கி திருமணம் நிச்சயமாகிறது.
தெய்வானைக்கும், முருகனுக்கும் திருமணம் நடந்த திருப்பரங்குன்றம் கோயிலை திங்கள், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வழிபட, விரைவில் திருமணம் கைகூடும்.
கோபிசெட்டிப்பாளையம் முருகன்புதூரில் அருளாட்சி செய்யும் ஸ்ரீதேவி கருமாரியம்மன் திருமண வரம் அருள்கிறாள். திருமணஞ்சேரியில் அருளும் உத்வாகநாதரையும், கோகிலாம்பிகையையும் வழிபட்டு அத்தல கல்யாணசுந்தரருக்கு மாலை சாற்றி வழிபடுவோர் விரைவில் மணமாலை சூடுகிறார்கள்.
திருமணதோஷம் உள்ளவர்கள் திருச்சி அருகே திருப்பைஞ்ஞீலி கோவிலில் கல்வாழை மரத்திற்கு தாலி கட்டி 12 முறை வலம் வந்து பரிகார பூஜை செய்தால் 3 மாதங்களுக்குள் மங்கல நாண் கழுத்தை அலங்கரிக்கும்.
கும்பகோணம் ஒப்பிலியப்பன், மார்க்கண்டேய முனிவரின் மகளாகப் பிறந்த பூமிதேவியை மணம் புரிந்ததால் இத்தலம் திருமணவரம் அருள்வதில் நிகரற்றது.

No comments:
Post a Comment