Thursday, October 17, 2019

ரியல் எஸ்டேட் காரர்களுக்கு வெகு தொலைவும் மிக அருகில்; ஆட்டோகாரர்களுக்கு மிகப் பக்கமும் வெகு தொலைவு!

நேற்று டீஸல் விலை உயர்வைப் பற்றிப் பேசும்போது ஒரு தொலைக் காட்சி பேட்டியில் ஒரு ஆட்டோ ஓட்டுனர் பின் வருமாறு புலம்பினார்.
“ஏற்கெனவே ஓலா, ஊபர் என்று போட்டியில் சிக்கித் தவிக்கிறோம்.
இதில் இந்த விலையேற்றம் வேறு.”
அவருக்கு ஒரு கேள்வி.
ஏனய்யா, டாக்ஸிகளெல்லாம் உங்களை விட மலிவான கட்டணத்தில் ஓட்டும்போது, நீங்கள் மட்டும் ஏன் மக்களைக் கொள்ளையடிக்க வேண்டும்? எல்லா ஆட்டோ ஓட்டுனர்களும் சேர்ந்து ஒரு வாரம்- ஒரே ஒரு வாரம்- மீட்டர் கட்டணப் படி மட்டும் ஓட்டுவோம் என்று தீர்மானம் செய்து கொள்ளுங்கள். அதைச் செய்து காட்டினால், உங்கள் வருமானம் அந்த வாரக் கடைசியில் 3 பங்காவது உயர்ந்திருப்பதைப் பார்ப்பீர்கள். அதோடு இந்த ஓலா, ஊபர் எல்லாம் ஊரை விட்டு ஓடுவதையும் பார்ப்பீர்கள்.
இப்போது உங்கள் ஒரே ப்ரச்னை, நீங்கள் மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டீர்கள் என்பது மட்டும்தான். ஆட்டோக்காரர் என்றால் ரவுடிகள் சண்டைக்காரர்கள் என்ற அபிப்பிராயம் மக்கள் மனதில் பதிந்து விட்டது. அதனால்தான் ஆட்டோவில் ஏற வசதி படைத்த மக்களில் (அடியேன் உட்பட) தொண்ணூறு சதவீத்ததினர், ஆட்டோவின் அருகில் செல்லவே பயப்படுகிறார்கள்.
இதை மாற்றினால், உங்கள் காட்டில் மழைதான்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...