Thursday, October 3, 2019

அமிட்ஷாவுடன் தினகரன் சந்திப்பு... அப்போ H.ராஜா சொன்னது உண்மைதானோ.???

அமமுக துணை பொது செயலாளர் TTV தினகரன் பாஜக தலைவர் அமிட்ஷாவை டெல்லியில் சந்திக்க நேரம் கேட்டிருப்பது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவிற்குள் மீண்டும் அடி எடுத்து வைத்தவர் TTV தினகரன், அதனை தொடர்ந்து அதிமுக இரண்டாக உடைந்து ஒபிஸ் அணி சசிகலா அணி என இரண்டாக பிரிந்தது.
சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு அதிரடி மாற்றங்கள் கட்சிக்குள் நடந்தன, ஜெயலலிதா வென்ற தொகுதியில் TTV தினகரன் அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார், ஓபிஎஸ் தரப்பில் மதுசூதனன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சூழலில் கடைசி நேரத்தில் பண பட்டுவாடா புகாரின் காரணமாக தேர்தல் கைவிடப்பட்டது.
அதனை தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் ஈ பி எஸ் தரப்பினர் ஒன்றாக இணைந்து ஆட்சியை நடத்தினர், TTV தினகரன் பக்கம் சென்ற 18 எம் எல் யே களும் பதவி இழந்தனர், ஆர் கே நகரில் ttv தினகரன் வெற்றி பெற்று சுயேச்சை வேட்பாளராக தேர்வாகினார்.
இந்நிலையில் பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன TTV தினகரன் ஆர் கே நகர் சட்டமன்ற இடை தேர்தலில் வெற்றி பெற்றதால் நிச்சயம் நாடாளுமன்ற பொது தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றுவார் என்றும் சட்டமன்றத்தில் 7-10 தொகுதிகளை தினகரன் தரப்பு வெல்லும் என்று கணக்கிட்டனர் ஆனால் முடிவு கடும் அதிர்ச்சியை கொடுத்தது.
அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தேனி தொகுதியில் வெற்றிபெற அனைத்து தொகுதியையும் திமுக கைப்பற்றியது, ஆனால் ttv தினகரன் தரப்பு படு தோல்வி அடைந்தது. நின்ற அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது.
அதனை தொடர்ந்து தங்க தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் அமமுகவில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்தனர் அமமுக மாவட்ட செயலாளர்கள் பலர் ஓபிஎஸ், ஈபிஎஸ்சை சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதனால் என்ன செய்வது என்பதை யோசித்து வந்த TTV தினகரன் தற்போது தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்க அதிரடி திட்டம் தீட்டியிருக்கிறார்.
அத்துடன் பாஜக தலைவர் அமிட்ஷாவை சந்திக்க TTV தினகரன் நேரம் கேட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது, மேலும் TTV தினகரன் தரப்பும் பல கோரிக்கைகளை அமித்ஷாவிடம் முன்வைக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது, ஒரு வேலை தினகரன் பாஜகவில் இணைகிறாரா இல்லை பாஜக கூட்டணியில் இணைவது குறித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட போகிறாரா என்ற தகவல்கள் முழுமையாக தெரியவில்லை.
இருப்பினும் சிவகங்கை தேர்தல் பிரச்சாரத்தின் போது H ராஜா தேவகோட்டை வாரச்சந்தை அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது விரைவில் அமமுக அதிமுகவில் இணையும் அல்லது பாஜகவில் இணையும் என்று குறிப்பிட்டு பேசியிருந்தார், அது தற்போது நடந்துவிடுமோ என்று அரசியல் நிபுணர்கள் பேசி வருகின்றனர்.
ஓ அதனால்தான் தமிழக பாஜக தலைவர் பதவி நியமனம் தள்ளிப்போகிறதோ….
எல்லாம் அந்த ஷாமிக்குதான் தெரியும்....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...