ஊரடங்கு - 144 தடை வேறுபாடு என்ன?
ஊரடங்கு உத்தரவு மற்றும் 144 தடை உத்தரவுக்கும் இடையேயான வேறுபாடுகள்:
ஊரடங்கு
* சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவும், அசாதாரண சூழ்நிலையை சீராக்கவும் இச்சட்டம் பிறப்பிக்கப்படும்* ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மக்கள் வெளியே வரக்கூடாது* அத்தியாவசிய சேவைகள் மட்டும் இயங்கலாம்* உத்தரவை மீறும் பட்சத்தில், ஆறு மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்* சுய ஊரடங்கு என்பது மக்கள் தாங்களாகவே முன்வந்து, இந்த உத்தரவை கடைபிடிப்பதாகும். இதையே மார்ச், 22ல் கடைபிடித்தனர்.
144 தடை
* குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு, 144ன் படி எதிர்பார்க்கிற அபாயம் போன்ற சூழ்நிலைகளில் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது* தற்போது கொரோனா அச்சம் காரணமாக, தமிழகம் முழுவதும், தடை உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது* இதன்படி மக்களிடம் இருந்து வைரஸ் பரவுதலை தடுக்க, ஐந்து அல்லது ஆறு பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடக்கூடாது* அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் மட்டுமே இயங்கலாம் * தடை உத்தரவை மீறும்பட்சத்தில், ஆறு மாதம் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
'கொரோனா'வுக்கு மருந்து ஹைட்ராக்சிகுளோரோக்வின்: மத்திய அரசு பரிந்துரை
புதுடில்லி:கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, 'ஹைட்ராக்சிகுளோரோக்வின்' என்ற மருந்தை பயன்படுத்தும்படி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.கொரோனா வைரஸ், நம் நாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு, எந்த நாட்டிலும் இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் ஜெனரல் பல்ராமா பார்கவா நேற்று கூறியதாவது:கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலால், தேசிய அளவிலான சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, கொரோனாவால் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களுக்கு, 'ஹைட்ராக்சிகுளோரோக்வின்' என்ற மருந்தின் மூலம் சிகிச்சை அளிக்கும்படி, பரிந்துரை செய்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்திற்கிடமானவர்களுக்கும், இந்த மருந்தின் மூலம் சிகிச்சை அளிக்கலாம். ஆனால், அங்கீகரிக்கப்பட்டமருத்துவர்களின் பரிந்துரை மற்றும் கண்காணிப்பின் அடிப்படையிலேயே, இந்த மருந்தை பயன்படுத்த வேண்டும். பொதுமக்கள், தங்கள் இஷ்டத்துக்கு இந்த மருந்தைபயன்படுத்தக் கூடாது. இவ்வாறு, அவர் கூறினார். 'ஹைட்ராக்சிகுளோரோக்வின்' மருந்து, 1944ல் இருந்தே, மலேரியா காய்ச்சலை குணப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுவாச கோளாறுக்கும் இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது. 'சார்ஸ்' வைரஸ் பாதிப்பின் போதும், இந்த மருந்து பயன்படுத்தப்பட்டது.
No comments:
Post a Comment