Tuesday, March 24, 2020

வருமான வரி கணக்கு, ஜிஎஸ்டி தாக்கலுக்கு அவகாசம்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், வருமான வரி கணக்கு தாக்கல், ஜிஎஸ்டி தாக்கல், ஆதார் பான் இணைப்பிற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டில்லியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் அனுராக் தாக்கூர் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.

latest tamil news



அப்போது நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
நடப்பு நிலவரம் கவலை அளிக்கிறது. கடந்த 2 மாதங்களாக தொழில் நிறுவனங்கள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றன. நடப்பு நிலவரங்களை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. வருமான வரி, ஜிஎஸ்டி தாக்கல் உள்ளிட்டவற்றில் சலுகை அளிக்கப்படும். தொழில்துறையினரின் கருத்துகளை கேட்டறிந்து வருகிறோம். கொரோனா பாதிப்பிற்கான நிவாரண நிதி விரைவில் அறிவிக்கப்படும்.

2018 - 19 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம் அளிக்கப்படும். காலதாமதமாக தாக்கல் செய்யப்படும் கணக்கிற்கு விதிக்கப்படும் அபராதம் 12 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக குறைக்கப்படும்.வரி பிரச்னைகள் தொடர்பான தீர்வுக்கான திட்டமான விவாத் சே விஷ்வாஸ், ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விவாத் சே விஷ்வாஸ் திட்டத்திற்கு முதல்கட்ட தொகையான 10 சதவீத வட்டி கட்ட தேவையில்லை. வருமான வரித்துறையின் கீழ் அனுப்பப்படும் பல்வேறு நோட்டீஸ்களுக்கு பதில் அளிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.



மார்ச் 31 ல் முடிவடைய இருந்த ஆதார் - பான் கார் இணைப்பிற்கான அவகாசம் ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச், ஏப்ரல், மே மாதத்திற்கான ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி, சுங்கவரி கணக்கு தாக்கல் செய்ய தொழில்துறையினருக்கு கடுதல் அவகாசம் அளிக்கப்படும். 5 கோடிக்கு கீழ் வருமானம் உள்ள நிறுவனங்களுக்கு தாமதம் மற்றும் அபராதம் விதிக்கப்படாது. பெரும் நிறுவனங்களுக்கான அபராதம் 9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் அவதிப்படுவதை மத்திய அரசு விரும்பவில்லை. இதனால், ஜூன் 30 வரை சுங்கத்துறை 24 மணி நேரமும் செயல்படும். கார்பரேட் நிறுவன இயக்குனர்களின் கூட்டத்தை கூட்டுவதற்கு 6 மாத அவகாசம் அளிக்கப்படுகிறது.கட்டாயமாக கூட வேண்டிய நிறுவன நிர்வாக கூட்டங்கள் அடுத்த 2 காலாண்டுக்கு கூடத்தேவையில்லை. 2019 - 20 ல் போர்டு மீட்டிங் நடைபெறவே இல்லையென்றாலும், அது விதிமீறலாக கருதப்படாது.

ஏடிஎம்.,களில் கட்டணம் இல்லை
அடுத்த மூன்று மாதங்களுக்கு வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை கிடையாது. அனைத்து வங்கி ஏடிஎம்.,களிலும் சேவைக்கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம். மக்கள் வங்கிகளுக்கு நேரில் செல்லாமல் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும். டிஜிட்டல் முறையிலான பண பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களும் குறைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...