உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்க்கு மருந்து இல்லை என்று சொல்லிவரும் நிலையில், சித்த வைத்தியர்கள் மருந்து இருக்கிறது என்று தமிழ்நாடு ஆயுஷ் மருத்துவர்கள் நலச்சங்கத்தைச் சேர்ந்த டாக்டர். குரு செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் மருத்துவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.
அவர்கள் பேசியதில், ‘‘கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் தொண்டையிலுள்ள கிருமிகளைக் கொல்வதுதான் இதற்குத் தீர்வாகும். கொரோனா வைரஸ் கிருமிகளைக் கட்டுப்படுத்துவதில் நில வேம்பு குடிநீர், கபசுர குடிநீர், ஆடு தொடா மணப்பாகு ஆகிய மருந்துகள் சிறப்புற பயனளிக்கிறது. இந்த மூலிகைகள் காய்ச்சல், சளி, இருமல், உள்ளிட்ட சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைச் சரி செய்யும்.
இவை தவிர கொரோனா வைரஸ் கிருமிகளிலிருந்து தப்பிக்க தினசரி ஒரு வெற்றிலையில், ஒரு மிளகு, ஒரு கிராம்பு வைத்து மென்று தின்றால் தொண்டை பாதுகாப்பாக இருக்கும். மேலும், அடிக்கடி உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது, மஞ்சள் நீரில் ஊற வைத்த கைக்குட்டையைப் பயன்படுத்துவது, குழந்தைகள் உள்ள வீடுகளில் படிகாரம், உப்பை நீரில் கலந்து தரை மற்றும் பொருட்களைத் துடைத்து சுத்தமாக வைக்க வேண்டும். பாலில் மஞ்சள், மிளகு கலந்து அருந்தினால் தொண்டையில் நோய்க் கிருமிகள் அண்டாது. வைட்டமின் சி சத்துள்ள ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாச்சிப்பழச் சாறுகளை அருந்துவது உகந்தது. வெந்நீரில் எலுமிச்சைச்சாறு கலந்து குடிப்பது இன்னும் நல்லது’’.
No comments:
Post a Comment