Sunday, March 29, 2020

தலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு.

செய்திதாள்களை விநியோகிக்க அனுமதிக்க வேண்டும் என அனைத்து மாநில தலைமைசெயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


இது குறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: தற்போது நாடு முழுவதும் கொரோனா பதற்றம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை தடை செய்ய கூடாது. செஞ்சிலுவை சங்கத்தினர் அவர்களின் சேவையை செய்வதற்கும், மளிகை பொருட்கள் மற்றும் சோப்புகள் , கிருமி நாசினிகள் உட்பட்ட பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

latest tamil news



மேலும் பால் விநியோகம் மற்றும் செய்தி தாள் விநியோகம் உள்ளிட்டவைகளை அனுமதிக்க வேண்டும். புலம் பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்ளுக்கு தேவையான மறுவாழ்வு முகாம், உணவு, மருத்துவசதி போன்றை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கடித்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...