Monday, March 23, 2020

ஸ்டாலின் தவறான பதிவு; 'டுவிட்டரில்' நீக்கம்.

 'கொரோனா பாதிப்பில், தமிழகத்தில், ஒன்பது பேர் பலியாகியுள்ளனர்' என்ற தவறான தகவலை, தி.மு.க., தலைவர், ஸ்டாலின், 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவிட்ட, ஒரு மணி நேரத்தில் நீக்கினார்.

'டுவிட்டர்' பக்கத்தில், நேற்று ஸ்டாலின் கூறியிருந்ததாவது: தமிழகத்தில், கொரோனாவால், ஒன்பது பேர் உயிரிழப்பு; 8,000 ஆயிரம் பேருக்கு பாதிப்பு; சென்னை உள்ளிட்ட, மூன்று மாவட்டங்களைத் தனிமைப்படுத்த, மத்திய அரசு அறிவுறுத்தல் ஆகியவை, மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன.இவ்வாறு, அவர் கூறியிருந்தார்.

latest tamil news



தமிழகத்தில், ஒன்பது பேர் இறக்கவில்லை; பாதிக்கப்பட்டவர்கள் தான், ஒன்பது பேர். ஆனால், ஸ்டாலின் தவறான தகவலை தந்ததால், சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்டாலின் தன் பதிவை, ஒரு மணி நேரத்தில் நீக்கினார்.

இதையடுத்து, டுவிட்டரில், அமைச்சர் வேலுமணி வெளியிட்ட பதிவில், 'ஸ்டாலின் பதிவு, பதற்றம் உண்டாக்கும் முயற்சியா என்ற, சந்தேகத்தை எழுப்புகிறது. சுகாதார பேரிடர் தகவல் பரிமாற்றத்தை, தலைவர்கள் மிகவும் கவனமுடன் கையாள வேண்டும்' என, கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...