நேற்று மாலை ராஜேந்திர பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில்,"இந்துக்களின் மத வழிபாட்டு தன்மைகளையும் நம்பிக்கைகளையும் இயற்கையான வழிபாடுகளையும் கிண்டல் செய்த போலி போராளிகளுக்கு இன்று நாட்டில் நடக்க கூடிய சம்பவம் ஒரு பாடம்.. ஒரு படிப்பினை..! இறைவா கிருஷ்ணபரமாத்வே இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் கொரோனோவிடமிருந்து காப்பாற்று" என்று ட்விட்ட் செய்திருந்தார். அடுத்த இரண்டு மணிநேரத்தில் ராஜேந்திர பாலாஜியின் மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்துள்ளது அ.தி.மு.க தலைமை.
ராஜேந்திர பாலாஜியிடம் இதுகுறித்து முதல்வர் தரப்பில் விளக்கம் கேட்க, அவர் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறாமல் பதில் அளித்தாகக் கூறப்படுகிறது.
இதனால் முதல்வர் எடப்பாடியார், ஓ.பன்னீர்செல்வத்தைத் தொடர்பு கொண்டுபேசி, ராஜேந்திர பாலாஜி வசம் உள்ள விருதுநகர் மாவட்டச் செயலாளர் பதவியை பறிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், அவரிடம் இருக்கும் அமைச்சர் பதவியை பறிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்துவரும் நிலையில், அவர் பதவியை உடனடியாக பறிக்க முடியாது என்பதால் அடுத்த சில நாள்களில் அமைச்சர் பதவி பறிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.
தென்மாவட்டத்தில் 10 வருடங்களாக தொடர்ந்து ஒருவர் அதிமுக மாவட்ட செயலாளராக இருந்தார் என்றால், அது ராஜேந்திரபாலாஜி மட்டுமே. கே.கே.எஸ்.எஸ்.ஆர். கூட, இத்தனை வருடங்கள் அதிமுகவில் தொடர்ந்து மாவட்ட செயலாளராக இருந்ததில்லை. விருதுநகர் மாவட்டத்தில், இதற்குமுன் இருந்த அதிமுக மாவட்ட செயலாளர்களைக் காட்டிலும், கட்சிப் பணியில் ஈடுபாடும் வேகமும் காட்டியவர் என்றே, அக்கட்சியினரால் ராஜேந்திரபாலாஜி சிலாகிக்கப்படுகிறார்.
கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில், எத்தனையோ மாவட்ட செயலாளர்களைப் பந்தாடிய ஜெயலலிதா கூட, ராஜேந்திரபாலாஜியிடமிருந்து பொறுப்பினை பறித்ததில்லை.
அப்படிப்பட்ட ராஜேந்திரபாலாஜி கட்சிப் பொறுப்பிலிருந்து இப்போது நீக்கப்பட்டிருக்கிறார் என்றால் காரணம்?
உண்மையான,இந்து மத நம்பிக்கையும். ஆன்மிக ஈடுபாடும் உள்ள ராஜேந்திரபாலாஜி,தன் மனதில் பட்டதை,எந்தவித ஔிவு மறைவும் இன்றி, பேட்டிகள் மூலம், தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார்.திராவிட கட்சிகளின் அரசியல் வாதிகள் போல்,உள் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசும் குள்ள நரித்தனம் கொண்ட மனிதராக இல்லாதவர்.தன் சுயநலத்திற்காக, தன் மதத்தை,தாய் நாட்டை இழிவுபடுத்தும் யாரையும் தாங்கிப்பிடித்து நடக்கும் சூடு,சொரணை அற்ற மனிதர் அல்ல,ராஜேந்திர பாலாஜி.குறுகிய மனம் படைத்த கூமுட்டையும் அல்ல இவர்.திமுக,அதிமுக, இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.அங்கே நல்லவர்கள், நேர்மையாளர்கள்,அந்த இரண்டு கட்சிகளிலுமே இருக்க முடியாது. இருக்கவிடவும் மாட்டார்கள்.
முத்துராமலிங்க தேவர் சொன்னது போல்,ஆன்மீகமும்,தேசியமும் எனது இரண்டுகண்கள் என்ற உயர்ந்த சிந்தனை கொண்டவர் திரு ராஜேந்திர பாலாஜி.இவர் சிந்தனைக்கு ஏற்ற, தேசிய சிந்தனை உள்ள கட்சியில் இணைந்து பணியாற்றிட வேண்டும். அதுதான் அவருக்கும்,நாட்டுக்கும் நல்லது.
இத்தனை ஆண்டுகால திராவிட அரசியலில் இந்துக்களுக்கு ஆதரவாக ஒலித்த ஒரே குரல் திரு ராஜேந்திர பாலாஜி அவர்களுடையதே..அதுவும் நசுக்கப்பட்டது.இந்துக்களே சிந்தியுங்கள்!ஒன்றுபடுங்கள்!!செயல்படுங்கள்!!!
No comments:
Post a Comment