Sunday, April 5, 2020

ஜோதிடமும் இறைவனும்:-

பொதுவாக ஜோதிடத்திலும் சரி ஆன்மீகத்திலும் சரி மக்களின் நம்பிக்கை வெவ்வேறாகவே உள்ளது அதை நாம் வரிசையாக காண்போம்.
1.ஜோதிடத்தையும் ஆன்மிகத்தையும் நம்பும் கூட்டம் ஒரு சார்பினராகவும்
...
2. இரண்டுமே போய் என்று ஒரு சார்பினரும்
3. ஜோதிடத்தை மட்டும் நம்பும் ஒரு சார்பினரும்
4.ஆன்மிகத்தை மட்டும் ஒரு சார்பினரும்
5. இரண்டையும் அரைகுறையாக நம்பும் ஒரு சார்பினரும்
இப்படி 5 பிரிவுகளாக மக்களின் நம்பிக்கை தென்படுகிறது குறிப்பாக ஆன்மிகமும் ஜோதிடமும் இரண்டும் ஒன்றுதான் ஆனால் மக்கள் அதை சரியான வழியில் பின்பற்றவில்லை என்பது எனது கருத்தாகும் இதில் ஆன்மிகம் பொறுத்தவரை மக்களின் வேண்டுதல்கள் மூலம்தான் இவர்களுக்கான பற்றும் நம்பிக்கைக்கும் பரிட்சிக்கப்படுகிறது அவர்களது வேண்டுதல்கள் நிறைவடைந்தால் இறைவனை மறப்பதும் அதேநேரத்தில் நினைத்தகாரியம் நிறைவேறவில்லை இறைவனை தூற்றி சாபமிடுவதும் வாடிக்கையாகவே உள்ளது அதேபோல் ஜோதிடம் பொறுத்தவரையில் யோகபலம்களை வாரி வழங்கினால் போற்றுவதும் தீய பலனைகள் வழங்கினால் தூற்றுவதும் வாடிக்கையாகவே உள்ளது இதற்கு முக்கிய காரணம் சுயநலம் இந்த சுயநலம் என்கிற நோயால் மக்கள் தனது நோக்கம் நிறைவேறுவதற்காக தவறான வழியில் இவ்விரண்டிலும் பயணித்து வருகிறார்கள் இறைவன் நமக்கு விதிக்கப்பட்ட விதி மற்றும் நமது கர்மம் நமது தர்மம் பாவ புண்ணியம் ஆயுள் ஆகியவை அனைத்து விதமான விதிகளை ஜோதிடம் என்கிற வேத சாஸ்திரத்தில் கணித்துள்ளான் அதனை நடைமுறைப்படுவதற்கு நவகிரகங்களை படைத்தான் மேலும் அதற்கு நாம் கட்டுபட்டு நடக்கவேண்டும் என்பது இறைவனின் தலையாய கட்டளையாகும் பொதுவாக ஜோதிடத்தில் காலம் சரியில்லை என்றால் உடனே பரிகாரம் பிராத்தணை செய்வது வழக்கம் ஆகிவிட்டது இதனால் விதிக்கப்பட்ட விதி மாறுமா என்ன??? இல்லை இறைவனால் விதிக்கப்பட்ட விதி மற்றும் கர்மபலன் கண்டிப்பாக அந்த ஜீவன் அனுபவித்தே ஆகவேண்டும் இதில் இறைவனிடம் நாம் செலுத்தும் பரிகாரத்திற்கும் பக்திக்கும் நிச்சயம் பலன் உண்டு ஆனால் நடக்கவேண்டிய விதி மாற்றுவழியில் நடந்தே தீரும்.......!!!!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...