Monday, May 4, 2020

ஞானி....

எந்திரன் படம் சமயத்தில் கருணாஸ் ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.அதாவது,உன்னுடைய முகம் எனக்கிருந்தால் நான் இந்திய சினிமாவையே புரட்டி போட்டிருப்பேன் என்று ரஜினி சொன்னதாக சொல்லியிருந்தார்.இது ஒரு சம்பிரதாய சினிமா பேச்சு என்று எல்லோராலும் கடக்கப்பட்டது.
ஆயினும் ரஜினி சொல்ல வந்தது மிக முக்கியமான விஷயம்.அவர் 'ரஜினி' என்கிற பிராண்டோடு இந்த முகத்தை இணைத்து கற்பனை செய்து சொல்லியிருக்கிறார்.ரஜினி சொல்ல வந்தது கறுப்பு என்பதையே இன்றைய சூழலில் ஒரு வணிகமாக மாற்ற முடியும் என்று.
அந்த வணிக அரசியலில் என் முகத்தை விட கருணாஸ் முக அமைப்பு இன்னும் கூடுதல் வசதியானது என்ற பொருளில்தான் சொல்லியிருந்தார்.அதையெல்லாம் ரஜினி கடந்துவிட்டால் கூட அது அவர் மனதில் படுகிற அளவுக்கு ஒரு வணிக சூழல் இருப்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள வேண்டும்.இதே போல ஜாதி,மதம் எல்லாவற்றிக்கும் ஒரு விற்பனை வலிமை உள்ளது.நிற்க.
இப்படி ஒரு வணிக அரசியல் ஓப்பன் ரம்மியாகவே இளையராஜாவுக்கு எப்போதும் தயாராக இருந்தது.நான் புறக்கணிக்கப்பட்டேன் என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும் ஒரு பெரும்படை அவரை ஆதரித்திருக்கும்.ஆனால் எந்த சூழ்நிலையிலும் அதை அவர் செய்ததில்லை.
பல நுணுக்கமான அரசியலை இளையராஜாவால் கையிலெடுத்து மிகப்பெரிய அளவில் நின்றிருக்க முடியும்.ஆனால் அதையெல்லாம் என்றுமே அவர் செய்ய விரும்பியதும் இல்லை.அவருக்காக பேசுவதாக காட்டிக் கொள்ளும் பல பேர் அவர் புறக்கணிக்கப்படுவதாக சொல்வதை எல்லாம் அவர் என்றுமே பொருட்படுத்தியதும் இல்லை.
இன்று வரை தான் ஒரு இசைஞானி எனவே,கருவறைக்குள் போய் பூஜை செய்ய வேண்டும் என்று பேசியதில்லை.தமிழ்,தமிழர் என்றெல்லாம் பிரிவினை பேசியதில்லை.இத்தனைக்கும் அவர் தன் இளமைக்காலத்தை கம்யூனிஸ மேடையில் ஆரம்பித்தவர்.மறைந்து வாழும் நக்ஸலியக்க ஆரம்ப சூட்சுமங்களை எல்லாம் அறிந்தவர்தான் அவர்.இதையெல்லாம் அவர் பேசமாட்டாரா என்று ஏங்கிக் கிடக்கும் ஓநாய்கள்தான் அவர் மீது எப்போதும் பாய்வது.
இளையராஜா ஏன் இந்த சில்லறை அரசியலில் ஈடுபடுவதில்லை? அவர் தீர்ந்துபோன கருப்பொருளால் துவண்டு போய் கிடப்பவர் அல்ல.அதை ஈடுகட்ட அரசியலை கையில் எடுக்க.உண்மையிலேயே அரசியல் கலப்பில்லாமல் தன் கலையை நம்புகிறார்.
ஹிந்து மதத்தின் புனித்தன்மை எப்படி தெரியுமா? என்று 2014 ல் பாஜக ஆட்சி வரும் என வேஷம் போட ஆரம்பித்தவர் இல்லை.அவருடைய பக்தி என்பது தன்னை காப்பாற்றிக் கொள்ளவோ,ஊர் மரியாதைக்கு போடும் வேஷமோ இல்லை.
உண்மையில் அற்பத்தனமான அரசியலை விட்டு,போலி கருணைகளை விட்டு அவர் தள்ளி நிற்கிறார்.அதைத்தான் இவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.அவர் கலக்கமில்லாத குறியீடாக நாளை நின்றுவிடுவார் என்று இவர்களுக்குத் தெரியும்.அதை எப்படியாவது பிம்ப உடைப்பு செய்ய வேண்டும் என துடிக்கிறார்கள்.
அவர் தன்னை ஒரு சுயம்பு என்றெல்லாம் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டவரும் இல்லை.அவர் ஆத்மார்த்தமாக குரு மரபுகளை நம்புகிறார்.இன்று கமல்ஹாசன்,சிவக்குமார் குடும்பம்,விஜய் சேதுபதி போன்றவர்கள் பேசுவதை எல்லாம் தொடர்ச்சியாக பார்க்கும் போது இளையராஜாவின் செருப்பினை தூக்கி தலையில் வைத்துக் கொண்டு யாத்திரை கூட போகலாம் என்றுதான் தோன்றுகிறது.
நன்றி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...