"எனது கருத்தின் ஆழத்தைக் கவனியுங்கள்" என்று பீடிகை போட்டு விட்டு மிகவும் தட்டையான, மேம்போக்கான கருத்துக்களைச் சொல்கிறார் :
"நமக்கும் கடவுளுக்கும் இடைவெளி எதற்கு?
சம்ஸ்கிருதத்தில் கூறி வழிபட்டால் தான் இறைவன் அருள்புரிவாரா?
தமிழில் கூறினால் புரியாதா?
அருள்புரிய மாட்டாரா" என்று முழங்குகிறார் சுகிசிவம்.
சம்ஸ்கிருதத்தில் கூறி வழிபட்டால் தான் இறைவன் அருள்புரிவாரா?
தமிழில் கூறினால் புரியாதா?
அருள்புரிய மாட்டாரா" என்று முழங்குகிறார் சுகிசிவம்.
இந்த வாதத்தை ஏன் இதனுடன் நிறுத்த வேண்டும்?
இன்னும் கொஞ்சம் நீட்டி, ஏன் வழிபட்டால் தான் கடவுள் அருள்புரிவாரா?
பக்தனுக்கு என்ன வேண்டும் என்று அவருக்குத் தெரியாதா?
ஏன் கோயிலுக்குப் போய்த்தான் கும்பிடவேண்டுமா?
மனதில் நினைத்தால் போதாதா?
இன்னும் கொஞ்சம் நீட்டி, ஏன் வழிபட்டால் தான் கடவுள் அருள்புரிவாரா?
பக்தனுக்கு என்ன வேண்டும் என்று அவருக்குத் தெரியாதா?
ஏன் கோயிலுக்குப் போய்த்தான் கும்பிடவேண்டுமா?
மனதில் நினைத்தால் போதாதா?
இப்படியெல்லாம் கூட பேசிக்கொண்டே போகலாமே.. பிறகு இது எதில் போய் நிற்கும்?
கோயில், சுவாமி, பூஜை, வழிபாடு ஒண்ணும் வேண்டாம் என்ற தி.க.த்தனமான வாதத்தில் தான். அதற்குத் தான் அனேகமாக சுகிசிவம் அடிபோடுகிறார் என்று தோன்றுகிறது - ஆன்மீகச் சொற்பொழிவில் ஈவேராவையே புகழ்ந்து பேசிய நபராச்சே..
இதற்கடுத்ததாக, வளர்ப்பு நாயுடன் தனக்கு வேண்டப்பட்ட மொழியில் கொஞ்சிப் பேசுவதையும் இறை வழிபாட்டு மொழியையும் ஒப்பிட்டு ஒரு அபத்தமான உதாரணத்தை வேறு தருகிறார்.
வெளங்கிடும்.
வெளங்கிடும்.
தமிழ்நாட்டுக் கோயில்களுக்கு என்று பல நூற்றாண்டு காலமாக நிலைபெற்று விட்ட ஆகம மரபுகள் உள்ளன, சம்பிரதாயங்கள் உள்ளன. அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற சிரத்தையும் உணர்வும் இக்கோயில்களுக்குச் சென்று வழிபடும் *உண்மையான* பக்தர்களுக்கு உள்ளது.
அவர்கள் இதுபோன்ற வெட்டி விவாதங்களில் ஈடுபடுவதில்லை. கோயில் வழிபாடுகளை நெறிப்படுத்த தெள்ளத்தெளிவாக வைதீக / தாந்திரீக / சிவாகம / வைஷ்ணவ ஆகம நெறிமுறைகள் இருக்கின்றன. அவற்றைக் கற்றுப் பேணி வரும் பாரம்பரிய அறிஞர்களும் விற்பன்னர்களும் அர்ச்சகர்களும் உள்ளனர்.
அவற்றையெல்லாம் கடாசி விட்டு, இஷ்டத்துக்கு தோன்றியதைத் தமிழில் பாடி கோயில் சடங்குகளையும் வழிபாடுகளையும் செய்வேன் என்பது தான் சமய மரபுக்கு அளிக்கும் மரியாதையா? உங்கள் வீட்டில் தாராளமாக, அப்படி பூஜை செய்துகொள்ளலாமே, அதை யார் தடுத்தது? ஆனால் கோயில் விஷயம் வேறு.
பக்தியின் பெருமையை விளக்கும் கணிகண்ணன் - திருமழிசை ஆழ்வார் கதையை சம்பந்தமே இல்லாமல் ஏன் சுகிசிவம் இங்கு சொல்கிறார்? ஆழ்வாரின் பக்திக்கு பெருமாள் கட்டுப்பட்டார் என்பது தான் கதை - அதில் தமிழ் / சம்ஸ்கிருதம் எங்கே வருகிறது?
பண்டரிபுரத்திலும் பூரி ஜகன்னாதத்திலும் மதுராவிலும் கூட அங்குள்ள அருளாளர்களை வைத்து இதே போன்ற கதைகள் உண்டு. அவை பாரத தேசமெங்கும் உள்ளன. அங்குள்ளவர்கள் உடனே மராட்டியில் ஹோமம் செய்வோம் என்று ஆரம்பித்து விடவில்லையே..
மேலும், தெய்வத் தமிழை நமக்கு அருளிய ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாசுரங்களில் எங்காவது சம்ஸ்கிருத மந்திரம் கூடாது என்று உள்ளதா? மாறாக, கோயில்கள் தோறும் வேதஒலி முழங்கியதைப் பற்றித் தான் நூற்றுக்கணக்கான பாடல்கள் பேசுகின்றன.
அங்கமும் வேதமும் ஓதும் நாவர் அந்தணர் நாளும் அடிபரவ...
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்..
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்..
வெள்ளச்சுகமவன் வீற்றிருந்த, வேத ஒலியும் விழா ஒலியும்
பிள்ளைக்குழாம் விளையாட்டொலியும்..
பிள்ளைக்குழாம் விளையாட்டொலியும்..
இதுபோக, சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்களின் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் எல்லாம் சம்ஸ்கிருத சுலோகங்களும் முழுதும் சம்ஸ்கிருத வாசகங்களுமே உள்ளன. தமிழ் மன்னர்கள் சம்ஸ்கிருதத்திற்கு உரிய இடமளித்துள்ளனர் என்பதையே இது காட்டுகிறது.
ஆன்மீகச் சொற்பொழிவாளர் என்று தன்னை முன்னிறுத்திக் கொள்பவர் சமய மரபுகளைக் குறித்து குழப்படியாகவும் திரிபுகளுடனும் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். உள்ளதை உள்ளபடி பேச வேன்டும்.
சுகிசிவம் பேச்சின் வீடியோ - https://www.facebook.com/devotee.of.sukisivam/videos/1158681257595759/
No comments:
Post a Comment