நீதிபதி_சர்க்காரியா_புத்தகத்தின் துணையோடு...
தி.மு.க-வின் வரலாற்றில் இன்றளவும் பேசப்பட்டு வரும் ஊழல் குற்றச்சாட்டுகளில் முக்கியமானது வீராணம் ஊழல்.
1970-களில் சென்னை மாநகரத்தின் குடிநீர்த்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டது.
பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப் பட்டதுதான் வீராணம் திட்டம். சென்னை நகரிலிருந்து 222 கிலோ மீட்டரில் கடலூர் மாவட்டத்தில் உள்ளதுதான் வீராணம் ஏரி. வீராணம் ஏரியிலிருந்து சுத்திகரிக்கப் படாத நீரை எடுத்து, நெய்வேலிக்கு அருகிலுள்ள வடக்குத்து என்ற இடத்தில் அமைக்கப் பட இருந்த சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தம் செய்து, சென்னை மாநகருக்கு 198 கிலோ மீட்டர் குழாய்கள் பதித்து, அதன் மூலமாக குடிநீரைச் சென்னைக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் இந்தத் திட்டம்.
இந்தத் திட்டத்துக்காக பல்வேறு நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டது. ஆனால், இந்தத் துறையில் முன்னனுபவம் இல்லாத, கருணாநிதி தன்னுடைய மனசாட்சி எனக்கூறிய முரசொலி மாறனுக்கு நெருங்கிய நண்பரான சத்யநாராயணன் என்பவருடைய நிறுவனத்துக்கு இந்த டெண்டர் இறுதி செய்யப்படவே இந்த டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
பணி ஆரம்பிக்கும் முன்னே சத்யநாராயணன் 40 லட்சம் ரூபாய் லஞ்சமாக கருணாநிதிக்கு தரவேண்டும் என்று டீலிங் முடிக்கிறார் மாறன்.
40 லட்சம் என்பது இன்றைய மதிப்பு 4000 கோடி.
40 லட்சம் என்பது இன்றைய மதிப்பு 4000 கோடி.
லஞ்சமாக முன்பணம் 6 லட்சம் ரூபாய் அடங்கிய லெதர் பெட்டியை கருணாநிதியிடம் மாறன் முன்னிலையில் கொடுத்தேன், கருணாநிதி அதிலிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு வெறும் லெதர் பெட்டியை என்னிடம் கொடுத்தார்,
வீராணம் ஊழல் பற்றி நீதிபதி சர்க்காரியா கமிஷனிடம் சத்யநாராயணின் மருமகன் புருஷோத்தமன் என்பவர் அளித்த வாக்குமூலம் இது...
வீராணம் ஊழல் பற்றி நீதிபதி சர்க்காரியா கமிஷனிடம் சத்யநாராயணின் மருமகன் புருஷோத்தமன் என்பவர் அளித்த வாக்குமூலம் இது...
பின்பு பணி ஆரம்பிக்கும் முன் 40 லட்சம் ரூபாயும் கைமாறுகிறது.
பல்வேறு நாடுகளிலிருந்து வந்த அனுபவமிக்க கம்பெனிகளின் டெண்டர்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு சத்யநாராயணன் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டதை எதிர்த்த அதிகாரிகளுக்கு பயம் காட்டப்பட்டதாம்...
உயிர் வேண்டுமா இல்லை...??
அதாவது அதில் பணியாற்றிய மூத்த பொறியாளர் திரு சிவராமன் நீதிபதி சர்க்காரியா விடம் இப்படி வாக்குமூலம் அளித்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
உயிர் வேண்டுமா இல்லை...??
அதாவது அதில் பணியாற்றிய மூத்த பொறியாளர் திரு சிவராமன் நீதிபதி சர்க்காரியா விடம் இப்படி வாக்குமூலம் அளித்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
40 லட்சம் ரூபாய் லஞ்ச பணத்திற்கு ஆசைப்பட்டு தமிழக அரசின் 6 கோடி பணம் செலவழிந்துதான் மிச்சம். ஆம் அந்த திட்டம் நிறுத்தப்பட்டது.
தகுதியற்ற நிறுவனத்திடம் டெண்டர் வழங்கி பெரிய பெரிய ராட்ஷச குழாய்கள் வீணாகி போயின..!!
தரமற்றதால் உடைந்து நாசமாகி போயின..!!
பலவீனமான நிலையில் இருந்ததால்..!!
தரமற்றதால் உடைந்து நாசமாகி போயின..!!
பலவீனமான நிலையில் இருந்ததால்..!!
இத்திட்டத்தை கருணாநிதி என்ன காரணம் சொல்லி நிறுத்தினார் தெரியுமா..?? சத்யநாராயணன் நிறுவனம் இந்த பணிக்கு தகுதி படைத்ததல்ல என்று சொல்லி நிறுத்தினார்...!!
இறுதியில் மனம் நொந்த மாபெரும் செல்வந்தரான பெரிய அளவில் காண்ட்ராக்டராக இருந்த சத்யநாராயணன் தற்கொலை செய்து கொண்டார்... (ஒரு வேளை அது சாதிக்பாட்ஷா தற்கொலையை போன்றுகூட இருக்கலாம், யார் அறிவார்கள்).
இந்த திட்டத்தால் கருணாநிதிக்கு சரிசமமாக மாறனும் பல வழிகளில் தனக்கு தேவையானதை ஈட்டிக்கொண்டார்.
அப்போது பச்சையப்பன் டிரஷ்ட் என்பது பணம் மிகுந்த தமிழகத்தில் கோலோச்சிய அமைப்பு, அதில் பிரதிநிதியாக தன்னை சேர்த்துவிடும்படி சத்யநாராயணின் மருமகன் புருஷோத்தமனிடம் சொல்கிறார் மாறன் (புருஷோத்தமன் அதில் ஒரு பிரதிநிதி).
அவர் நேரத்திற்கு அதன் தலைவர் எம் ஏ எம் சிதம்பரம் செட்டியார் காலமாகிறார். பிறகென்ன உடனே அந்த ட்ரஷ்ட்டில் பிரதிநிதியாகிறார் மாறன். சில காலங்களில் அந்த பச்சையப்பன் ட்ரஷ்ட்டுக்கு தலைவராகவே ஆகிறார் மாறன் என்பது பெரிய கதை...
அவர் நேரத்திற்கு அதன் தலைவர் எம் ஏ எம் சிதம்பரம் செட்டியார் காலமாகிறார். பிறகென்ன உடனே அந்த ட்ரஷ்ட்டில் பிரதிநிதியாகிறார் மாறன். சில காலங்களில் அந்த பச்சையப்பன் ட்ரஷ்ட்டுக்கு தலைவராகவே ஆகிறார் மாறன் என்பது பெரிய கதை...
40 லட்ச ரூபாய் கைமாறும் நேரத்தில்தான் மாறன் அண்ணா சாலையில் 1240 சதுர அடி கொண்ட வீடு வாங்குகிறார், அப்போதே அதன் மதிப்பு 45000 ரூபாய்...
முரசொலி கட்டிடம் கட்டும் பணி, சத்யநாராயணா பிரதர்ஸின் துணை நிறுவனமான மஹாலட்சுமி கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்திடம் ஒப்படைக்கப் படுகிறது. அதற்கான தொகையை மாறன் கொடுத்தார் என்று அவசரப்பட்டு முடிவெடுத்து விடாதீர்கள். தங்களிடம் சிக்கியவர்களை பட்டாபட்டி அண்டர்வேரோடு அனுப்புவதில் இவர்கள் கைதேர்ந்தவர்கள். வேலையையும், கட்டுமானப் பொருட்களையும், இலவசமாகவே மாறன் பெற்றார். இது குறித்து நீதிபதி சர்க்காரியா விடம் பதில் அளித்த மாறன், மஹாலட்சுமி கன்ஷ்ட்ரக்ஷன் நிறுவனம், சத்யநாராயணா நிறுவனத்தின் துணை நிறுவனம் என்ற விபரம் தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்….. ஊழலின் சாட்சியாக முரசொலிக் கட்டிடம் இன்றும் நிற்கிறது...
ஊழல் தொடரும்...
No comments:
Post a Comment