இருபது லட்சம் கோடிகளை இந்திய மக்கள் ஒவ்வொருவருக்கும் ரொக்கமாக பிரித்துக் கொடுத்து விடலாமே...
சொல்வது யாரென்றால் மூணாம் கிளாஸ் மயில்சாமியை பொருளாதார நிபுணராக்கிய மேதைகள்.
இருபது லட்சம் கோடிகளை பிரித்துக் கொடுத்தால் இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் தோராயமாக பதினாறாயிரம் ரூபாய் கிடைக்கும். வீட்டில் உள்ள அரை டிக்கெட், கால் டிக்கெட், ரிடையர்டு பெருசுகள், அக்கப்போர் கிழவிகள் உள்பட ஒரு தலைக்கு இந்த தொகை கிடைக்கும்.
குடும்பத்திற்கு நான்கு பேர் என்றால் அறுபத்தி ஐந்தாயிரம் கிடைக்கும்.
இதை வாங்கி என்ன செய்வார்கள்... ? கொஞ்சம் அறிவாளிகள் வாஷிங் மெஷின், பைக், வாங்குவார்கள். சிலர் கந்து வட்டி கடன் அடைப்பார்கள். அதி புத்திசாலிகள் ஆறு மாத டாஸ்மாக் செலவை இதில் ஈடுகட்டுவார். மேதாவிகள் இதுவரை தினமும் வாங்கிய ஒரு குவார்டரை ஆப் ஆக்கி விடுவார்கள்.
இதனால் என்ன ஆகும்.... ? பண வீக்கம் தான் உயரும்.
இருபது லட்சம் கோடிகள் ஒதுக்கியிருப்பது வெறும் கொரோனாவால் பொருளாதார ரீதியாக பாதிக்கப் பட்ட மக்களை அதன் தாக்கத்திலிருத்து மீட்பதற்காக அல்ல, சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து காங்கிரஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதாரத்தை மீட்பதற்காக என்றே நான் கருதுகிறேன்.
ஒரு சராசரி குடும்பத்திற்கு அறுபத்தி ஐந்தாயிரம் என்பது குறைந்தது மூன்று மாதங்களுக்கு போதுமானது. மூன்று மாதங்களுக்கு பிறகு... ?
கொரோனாவால் தொழில், வேலை வாய்ப்புகளை இழந்ததால் தான் இவ்வளவு பெரிய தொகை அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பத்து சதவிகிதத்தை ஒதுக்கியுள்ளார்கள்.
அந்த பணமும் மூன்று மாதங்களில் காலியாகி விடும். இழந்த வேலை வாய்ப்புகளை மீண்டும் பெற, வருமானம் பார்க்க அவன் என்ன செய்வான்..? பிச்சை தான் எடுக்க வேண்டும்.
இப்போது மக்களுக்கு அரசு இலவச பிச்சை போட வேண்டுமா... ? யாரிடமும் கையேந்தாமல் தொழில் செய்து கௌரவமாக பிழைக்க வேலை வாய்ப்புகளை மக்களுக்கு உருவாக்கி கொடுக்க வேண்டுமா.... ?
அனைவருக்கும் மத்திய அரசில், மாநில அரசில் வேலை போட்டுக் கொடுக்க முடியாது. அது உலகில் சாத்தியமும் இல்லை. வேறு என்னதான் செய்வது... ?
தொழில் துறையில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமே ஒரே வழி. அதனால் தான் இருபது லட்சம் கோடிகளை ஒதுக்கியுள்ளனர்.
தொழில் துறையை ஊக்குவித்தால் . உள் நாட்டு உற்பத்தி பெருகும், உற்பத்தி பெருகினால் வேலை வாய்ப்புகள் பெருகும், இது இரண்டும் பெருகினால் அரசுக்கு வரி வருவாய் பெருகும். அரசுக்கு வரி வருவாய் பெருகினால் நாடு முன்னேறும். இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.
இது புரிய ஒரு சின்ன உதாரணம்.
நீங்கள் தினமும் வீட்டை விட்டு வெளியே போனால் காணும் காட்சி தான்.
பெட்டிக்கடையுடன் இணைந்த டீக்கடையை கொஞ்சம் கவனித்துப் பாருங்கள் புரியும்.
ஒரு டீ மாஸ்டர், வடை பஜ்ஜி மாஸ்டர் ஒருவர், கல்லாவில் காசு வாங்கி போட்ட படி பீடி, சிகரெட் விற்கும் ஒருவர் என மூவர் இருப்பார்கள்.
அந்த கடைக்கான முதலீடு எவ்வளவு இருக்கும் என்று குத்து மதிப்பாக மதிப்பினுங்கள்.
கடை அட்வான்ஸ் இரண்டு லட்சம், சிகரெட், பாக்கு, கடலை மிட்டாய், டீ பாய்லர், ஸடவ், வடை போடும் எண்ணை சட்டி என எல்லாமாக சேர்த்தால் மூன்று லட்சம் வரலாம்.
மொத்தம் மூன்று லட்ச ரூபாய் முதலீடு தான். அது மூன்று பேருக்கு வேலை வாய்ப்பை தருகின்றது. நாள் ஒன்றுக்கு குறைந்தது ஐநூறு ரூபாய் ஒவ்வொருவருக்கும் வருமானமாக நாள் ஒன்றுக்கு ஆயிரத்தி ஐநூறு ரூபாய்கள் அந்த ஒரு கடை மூலம் வருமானமாக கிடைக்கின்றது. கடையில் தயாராகும் வடை, பஜ்ஜி எல்லாமே ஜிடிபி அதாவது உள்நாட்டு உற்பத்தி தான்.
மூன்று லட்சம் ரூபாய் முதலீடு மூன்று பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குகின்றது. சரியாக சொன்னால் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு ஒருவருக்கான வேலைவாய்ப்பை வழங்குகிறது.
இன்னும் கூட தரை மட்டமாக பாரத்தால் இரண்டாயிரம் ரூபாய்க்கு கோயம்பேடு மார்க்கெட்டிங் வாங்கும் காய்கறிகளை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பிழைக்கின்றன. இரண்டாயிரம் ரூபாய் முதலீடு அவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கிறது. நாம் அந்த அளவு கீழே போக வேண்டாம். பெட்டிக்கடை கணக்கையே பார்க்கலாம்.
வெறும் ஒரு லட்சம் ரூபாய் முதலீடே ஒருவனுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து அவனது வாழ்வாதாரமாக இருந்தால் மத்திய அரசு வழங்கும் இருபது லட்சம் கோடிகள் எத்தனை வேலை வாய்ப்புகள் உருவாக்கும் என கால்குலேட்டரை தட்டிப் பார்த்துக் கொள்ளவும்.
உடனே சாப்பாட்டுக்கு வழியில்லை, வாடகை தர முடியவில்லை, குழந்தைக்கு பால வாங்க கூட காசு இல்லை... மத்திய அரசின் இந்த திட்டத்தால் எங்கள் வயிறு நிரம்புமா... ? மக்களை பட்டினியில் சாக விட்டு விட்டு தொழில் அதிபர்களுக்கு பணத்தை வாரி இறைக்கிறது மோடி அரசு என்று கூப்பாடு போடுவார்.
போடட்டும், தாராளமாக மேடை போட்டு ஒப்பாரியே வைக்கட்டும். சோற்றுக்கு வழியில்லாத தமிழ் நாட்டில் தான் ஒரே நாளில் டாஸ்மாக்கில் நூற்றி ஐம்பது கோடிகளை கொடுத்து தமிழன் குடித்து தீர்த்தான். சோற்றுக்கு வழியில்லாத தமிழனுக்கு குடிப்பதற்கு மட்டும் எப்படி இருநூற்றி எண்பது கோடிகள் வந்தது என எவனும் கேட்க மாட்டான்.
ஒரு கசப்பான உண்மையை சொல்லட்டுமா... ?
இந்த திட்டத்தை பொறுத்தவரை தமிழகத்தில் மிக அதிகப்படியான ஆதாயத்தை அடையப்போவது வடமாநிலத்தவர்கள் தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா... ?
இன்று தமிழகத்தின் ஒவ்வொரு தொழிற்சாலை, ஹோட்டல், நிறுவனங்கள் என்று எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அனைத்திலும் வடமாநில தொழிலாளர்களின் ஆதிக்கம் நிறைந்துள்ளது.
வடமாநில தொழிலாளர்களின் பலவீனம் இரண்டே இரண்டு தான். முதலாவது மொழி. இரண்டாவது சுயமாக தொழில் தொடங்க முதலீடு இல்லாதது.
எலக்ரிகல், பிளம்பிங்., மொசைக், டைல்ஸ் மற்றும் கிரானைட் ஒட்டுதல், போர்வெல், பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்தல், உருக்காலைகள் என அனைத்திலும் நிறைந்துள்ளனர். வருடக் கணக்காக ஒரு முதலாளியின் கீழ் வேலை பார்த்தவர்கள் தொழிலை நேர்த்தியாக செய்யவும் பழகி விட்டனர். தமிழ் மொழியை பேசுவதிலும நல்ல தேர்ச்சி பெற்று விட்டனர்.
மீதம் இருந்தது முதலீடு மட்டும் தான். இப்போது ஒதுக்கப்பட்ட நிதியில் கடன் பெற்று சுயமாக தொழில் தொடங்குபவன் தமிழனா.., வட மாநிலத்தவனா.... ?
தமிழனுக்கு என்று இருக்கவே இருக்கிறது போராட்ட தொழில். கொடி பிடித்து போராட்டம் நடத்தினால் குவார்டர், கோழி பிரியாணி, ஐநூறு ஓவாய். இதை தாண்டி தமிழன் வரப் போவதில்லை. அவனுக்கு அது போதும். அதற்கு மேல் சுய தொழில் தொடங்க நினைத்தாலும் எந்த தொழிலும் தெரியாமல் வளர்ந்த தமிழன் எந்த தொழில் செய்யப்போவதாக சொல்லி கடன் வாங்குவான். அவனுக்கு தெரிந்த போராட்ட தொழிலுக்கு எல்லாம் கந்து வட்டிக்காரன் கூட கடன் கொடுக்க மாட்டான்.
ஆனால் மத்திய நிதியமைச்சரை ஊறுகாய் மாமி என்று வக்கனையாக மீம்ஸ் போடுவான்.
எதுவுமே வேண்டாம். தமிழன் தினமும் செல்லும் டாஸ்மாக் பாருக்கு ஊறுகாய் தயாரித்து விற்றாலே கூட தினம் ஐந்தாயிரம் வியாபாரம் செய்யலாம். ஊறுகாய் தயாரிப்பும் ஒரு தொழில் தான். அதை காட்டி வங்கி கடன் பெற்று மேலும் ஐந்து பேருக்கு வேலை கொடுத்திருக்கலாம். அந்த அளவிற்கு தமிழனுக்கு அறிவு ஏது.... ?
இந்தி ஒழிக என்று ஊளையிட்டே இரண்டு தலைமுறைகளாக தமிழனை இந்தி கற்காமல் தடுத்து விட்டனர். அதன் விளைவு எந்த தமிழ் வியாபாரியும் மொழி பிரச்சனையால் தமிழகத்தை தாண்டி செல்வதில்லை. பலன் தமிழகத்தின் மொத்த வியாபாரம் முழுவதும் மார்வாடிகளிடமும், குஜராத்திகளிடமும் போய் விட்டது. திரைக்கடலோடி திரவியம் தேடிய தமிழ் வர்த்தகர்களின் நிலமை மொத்த வியாபாரிகளான சேட்டுகளிடம் பொருளை வாங்கி விற்கும் சில்லறை வியாபாரி நிலமைக்கு வந்து விட்டான் தமிழன்.
இப்போது மத்திய அரசின் திட்டத்தை பயன்படுத்தி வடமாநில தொழிலாளிகள் சிறு, குறு உற்பத்தி மற்றும் சேவை துறைகளில் கால் பதிக்கப் போகின்றனர். இதன் பாதிப்பு இப்போது தெரியாது. இன்னும் ஐந்தாண்டுகளில் தெரியும்.
ஒரு உதாரணம் பார்க்கலாம். சேட்டுகள் நடத்தும் எலக்டிரிகள் கடை வாசலில் எலக்ட்ரிகல் வேலை வரும் என உட்கார்ந்திருக்கும் எலக்ட்ரீஷியன்கள் அனைவரும் தமிழர்கள் தான்.
சேட்டு கடைகளில் விற்பனையாகும் பொருட்களை தள்ளுவண்டியில் ஏற்றி கொண்டு போய் லாரியில் புக்கிங் செய்யும் லோடு மேன்கள் தமிழர்கள் தான்.
இதெல்லாம் இந்தி ஒழிக தமிழகத்திற்கு கொடுத்த வரம். இனி வடமாநிலத்தவர் உற்பத்தி செய்யும் இடத்தின் வாசலிலும் தமிழன் அதை சார்ந்த தொழிலுக்காக தேவுடு காத்து நிற்பான்.
ஆக மொத்தம் தமிழ், தமிழன் என்று அரசியல் செய்தே தமிழக மக்களை இந்தி பேசும் மக்களிடம் அடிமையாக்கி விட்டனர் என்பதே நிதர்சனம்.
தமிழர்கள் இப்போதாவது விழித்துக் கொள்வது நல்லது.
No comments:
Post a Comment