Thursday, October 22, 2020

முதல் முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்ட நாள் (அக்.23- 1911).

 1911-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதி முதல் முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்டது. இந்த விமானத்தை இத்தாலியின் போர் வீரர் லிபியாவில் இருந்து துருக்க ராணுவ நிலைகளுக்கு ஓட்டிச் சென்றார். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1956 - ஹங்கேரியப் புரட்சி, 1956: ஹங்கேரியில் பல்லாயிரக்கணக்கானோர் அரசுக்கு எதிராகவும் சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் போராட்டம் நடத்தினர். ஹங்கேரியப் புரட்சி நவம்பர் 4-ல் நசுக்கப்பட்டது.

முதல் முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்ட நாள் (அக்.23- 1911)

















1911-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதி முதல் முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்டது. இந்த விமானத்தை இத்தாலியின் போர் வீரர் லிபியாவில் இருந்து துருக்க ராணுவ நிலைகளுக்கு ஓட்டிச் சென்றார்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1956 - ஹங்கேரியப் புரட்சி, 1956: ஹங்கேரியில் பல்லாயிரக்கணக்கானோர் அரசுக்கு எதிராகவும் சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் போராட்டம் நடத்தினர். ஹங்கேரியப் புரட்சி நவம்பர் 4-ல் நசுக்கப்பட்டது. * 1958 - நோவா ஸ்கோசியாவில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 174 நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கினர். இவர்களில் 100 பேர் மட்டும் நவம்பர் 1 வரையில் மீட்கப்பட்டனர். * 1973 - சிரியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் இடம்பெற்ற யோம் கிப்பூர் போர் ஐநாவின் தலையீட்டை அடுத்து முடிவுக்கு வந்தது.

* 1983 - லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்க கடற்படைத் தளத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 241 அமெரிக்கக் கடற்படையினர் கொல்லப்பட்டனர். அதே நாளில் இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் பிரெஞ்சு இராணுவத்தினர் 58 பேர் கொல்லப்பட்டனர். * 1989- கம்யூனிச ஹங்கேரியன் மக்கள் குடியரசு, ஹங்கேரியன் குடியரசு எனப் பெயர் மாற்றப்பட்டது. * 1991 - ஈழப்போர்: தமிழீழப் போரில் அனாதைகளான பெண் பிள்ளைகளின் மறுவாழ்வுக்காக செஞ்சோலை சிறுவர் இல்லம் ஆரம்பிக்கப்பட்டது. * 1998 - இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டனியாகு மற்றும் பாலஸ்தீன தலைவர் யாசர் அரபாத்துக்கும் இடையில் அமைதிக்காக நிலம் என்ற உடன்பாடு எட்டப்பட்டது. 2001 - வட அயர்லாந்தில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுக்களின் பின்னர் ஐரிஷ் குடியரசு ராணுவம் ஆயுதக் களைவில் ஈடுபட்டது. * 2001 - அப்பிள் நிறுவனத்தின் ஐப்பேர்டு வெளியிடப்பட்டது.

* 2001 - காஷ்மீர் விமானத் தளத்தைப் தகர்க்கும் தீவிரவாதிகளின் தற்கொலைப் படைமுயற்சி முறியடிக்கப்பட்டது. 4 தீவிரவாதிகள் மற்றும் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டனர். * 2002 - மொஸ்கோவில் நாடக அரங்கு ஒன்றில் செச்னிய தீவிரவாதிகளினால் 700 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். * 2004 - பிரேசில் VSB-30 என்ற தனது முதலாவது விண்கப்பலை விண்ணுக்கு ஏவியது.

* 2004 - வடக்கு ஜப்பானில் நிலநடுக்கம் தாக்கியதில் 35 பேர் கொல்லப்பட்டு 2,200 பேர் படுகாயமடைந்தனர். * 2006 - இலங்கை சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...