புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் முதல்வர் ஆக இருந்த நேரத்தில் ஒரு நாள்..
மதுரை மாநாட்டில் ஊர்வலத்தில் கலந்து கொண்டு தன் பயிற்சி திறமைகளை காட்டிய திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம் தலைவரை பார்க்க தோட்ட இல்லத்துக்கு வருகை தர.
அங்கே மெயின் கேட் அருகில் ஒரு கிராமத்து வயதான அம்மாவும் அவர் அருகில் ஒரு இளம் விதவை பெண்ணும் தயங்கி தயங்கி நிற்க.
ஜாகுவாரை பார்த்ததும் ஐயா எங்களை உள்ளே ஐயாவை பார்க்க அழைத்து செல்ல முடியுமா என்று அந்த தாயார் கேட்டதில் பதில் சொல்ல முடியாமல் வாருங்கள் என்னுடன் என்று அழைத்து உள்ளே செல்ல...
கொஞ்சம் நேரம் ஆகி தலைவர் வந்து வாங்க என்று ஜாகுவாரை கண்டு பேச யார் இவர்கள் என்று கேட்க.
அந்த வயதான அம்மையார் ஐயா அவர் ஊரை சொல்லி விட்டு எனக்கு கணவரும் இல்லை இப்போது அவர் உங்கள் ரசிகர்.
விதி படி கொஞ்ச நாட்கள் கழித்து திருமணம் முடிந்த பின் என் மகனும் இறந்து போக எனக்கு என்று இருக்கும் இடத்தில் ஒரு சிறிய வீடு அதற்கு பின்னால் தோட்டம் போல ஒரு காலி இடம் என்று சொல்ல ஆரம்பித்து அவர் கண்களில் அருவியாக கண்ணீர் ஊற்ற.
சரி சொல்லுங்க...அழ வேண்டாம் என்று பொன்மனம் கேட்க..
இப்போது நாங்கள் இருக்கும் எங்கள் வீட்டை மருமகளை கையை காட்டி நமது கட்சியில் அந்த பகுதியில் செல்வாக்கு மிக்க ஒருவர் அதிகாரிகள் துணை கொண்டு எங்களை விரட்டி...
பின்னால் இருந்த காலி இடத்தில் வேலி போட்டு நாங்கள் குடி இருந்த பழைய வீட்டையும் இடித்து விட நாங்கள் இருவரும் இப்போ நிற்கதி ஆக நிற்க.
மகராசன் உங்க நிர்வாகத்தில் இப்படி என்று உங்களிடம் சொல்லவே வந்தோம்.
ஏழை எளியவர்களை எட்டி உதைத்தால் உங்களுக்கு இருக்கும் பெயர் என்ன ஆகும்.
என்ற கவலையும் கூட எங்களுக்கு என்று சொல்ல..
தலைவரின் சிவந்த முகம் மேலும் சிவக்க.
கோவத்தில் தன் மூக்கை தடவிய படி அம்மா இன்று ஒருநாள் இங்கேயே சென்னையில் இருங்க நாளை மதிய வேளைக்குள் உங்களுக்கு நல்ல பதில் கிடைக்கும் என்று சொல்ல..
தலைவர் சொன்ன படி அந்த இருவரையும் ஜாகுவார் அனகாப்புத்தூர் நகரில் உள்ள தன் உறவினர் வீட்டில் அவர்களை அன்று தங்க வைத்து மறுநாள் காலை அவர்கள் இருவரையும் மீண்டும் அழைத்து கொண்டு தலைவர் இல்லம் நோக்கி வர.
தலைவர் ஆணை படி அதற்குள் அந்த நல்ல கட்சி நிர்வாகிக்கு தலைவர் உங்களை உடனே வர சொன்னார் என்று தகவல் பறக்க.
ஆகா நமக்கு ஏதோ பெரிய அரசு பதவி கிடைக்க போகிறது என்ற மகிழ்ச்சியில் அவர் உடனே கிளம்பி சென்னை வந்து சேர.
தலைவர் வழக்கம் போல மற்றவர்களை சந்தித்த கொண்டு இருக்க இவர் வந்த உடன் உள்ளே இருந்த அந்த பாதிக்க பட்ட அந்த இரு பெண்களையும் அழைத்து...
கட்சி நிரவாகி அவர்களை பார்த்தவுடன் முகம் மாற....தலைவர் இவர்களை உங்களுக்கு தெரியுமா என்று கேட்க...அவர் பதறி....தெரியாது என்று மலுப்ப.
அந்த வீட்டை இடத்தை இழந்த அவர்களிடம் அம்மா நீங்கள் சொல்ல நபர் இவர் தானா என்று தலைவர் கேட்க ஆமாம் ஐயா என்று அவர் மெல்லிய குரலில் சொல்ல..
விருட்டென்று எழுந்த தலைவர் அந்த கட்சி காரருக்கு கொடுத்த அறையில் ஜாகுவார் தங்கம் அரண்டு போய் திகைக்க....சுருண்டு விழுந்து எழுந்த அவரிடம்...
ஒழுங்கா ஊருக்கு போய் இவங்க வீட்டை மறுபடி கட்டி கொடுத்து அந்த வீட்டுக்கு பின்னால் இருக்கும் இடத்தை ஒப்படைத்து விட்டால் உனக்கு மன்னிப்பு....
இல்லை என்றால்....என்று சொல்ல தலைவரே உடனே செய்கிறேன் என்று கண்ணத்தை தடவி கொண்டே அவர் வெளியே கிளம்ப..
வந்த அந்த பாட்டி அவர் மருமகள் இருவரிடமும் ஆளுக்கு ஒரு லட்சம் பணம் கொடுத்து நீங்க பத்திரம் ஆக ஊருக்கு போங்க இனி இப்படி நடக்காது.
உங்க மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை அதிகாரிக்கு தகவல் சொல்லி விட்டேன் என்று சொல்ல..
கூப்பிய கரங்கள் உடன் அந்த இருவரும் புறப்பட தயார் ஆக உடன் வந்த ஜாகுவார் சொல்வது தெரியாமல் திகைக்க.
மூவரும் கிளம்பி கதவு அருகில் வரும் போது ஒரு நிமிடம்...அம்மா.
என்ற குரல் கேட்டு அவர்கள் திரும்ப இனி உங்கள் ஊரில் யாராவது நீங்க யார் என்று கேட்டால் நாங்க எம்ஜிஆர் குடும்பம் என்று சொல்லணும் சரியா என்று கேட்ட...
அவர்தான் எளிய மக்களின் தலைவர்.
என்றும் அவர் புகழ் காப்போம்...நன்றி.
யார் ஆட்சி யாருக்கான ஆட்சி என்பது ஒருபுறம்.
எப்படி ஆட்சி ஆட்சி என்பது மறுபுறம்...
படித்தேன் பிடித்தது பகிர்ந்துள்ளேன்.
No comments:
Post a Comment