Sunday, October 18, 2020

நிதர்சனம்...................

 இரண்டாம் வகுப்பு ஆசிரியை வாய்ப்பாடு ஒன்றை கரும்பலகையில் எழுதினார்.

இந்த வாய்ப்பாடு எழுத ஆரம்பித்தது முதல்....,
வகுப்பறை முழுவதும் சிரிப்பொலி தொடர்ந்தது.
காரணம்,
முதலாவது வாய்ப்பாடு பிழையாக எழுதப்பட்டிருந்தது.
1×9=7, ❌
2×9=18, ✔
3×9=27, ✔
4×9=36, ✔
5×9=45, ✔
6×9=54 ✔
7×9=63 ✔
8×9=72 ✔
9×9=81 ✔
10×9=90 ✔
மாணவர்களைச் சிரிக்கத் தூண்டியது.
சமன்பாட்டை எழுதி முடித்து மாணவர்களை நோக்கிய ஆசிரியை.....,
சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு பேசத் துவங்கினார்...
நான் முதல் வாய்ப்பாட்டை பிழையாக எழுதியிருக்கின்றேன்.*
இதன் மூலம் உங்களுக்கொரு உண்மையை புரியவைக்கப் போகிறேன்.
இந்த உலகம்
உங்களை எப்படி விமர்சிக்கும் என்பதை நீங்கள் இதன்மூலம் புரிந்து கொள்வீர்கள்.*
நான் இங்கு 9 முறைகள் மிகச் சரியாக எழுதியிருக்கின்றேன்.
அதற்காக நீங்கள் யாரும் என்னைப் பாராட்டவில்லை.
ஆனால்,
நான் பிழையாக எழுதிய
ஒரே ஒரு விஷயத்தைக் மட்டும் கவனித்து.......
அனைவரும் சிரித்து கேலி செய்கிறீர்கள்.
⚀ நீங்கள் இலட்சம் தடவைகள் விஷயங்களைச் சரியாக செய்தபோதிலும்......,
⚀ இந்த உலகம் உங்களை ஒரு போதும் பாராட்டப் போவதில்லை.
⚀ ஆனால்
நீங்கள் செய்த ஒரு பிழையைத்தான் உலகம கவனிக்கும்.
⚅ அதையே மிகக் கீழ்த்தரமாக விமர்சிக்கும்...
⚅ இவைகளைக் கண்டு
ஒரு போதும் தளர்ந்து விடாதீர்கள்.
⚅ உங்களைப் பார்த்து சிரித்தவர்கள்,
⚅ உங்களை விமர்சித்தவர்கள் முன்னால் .....,
⚅ உயர்ந்து நிற்கும் முயற்சியில் உறுதியாக நில்லுங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...