கார்த்திகைச்செல்வன்:
செழியன் இப்ப அங்க நிலைமை எப்படி?
செழியன்:-
கணுக்கால் வரைக்கும் மழைநீர் வழியுது கார்த்திகைச்செல்வன் -
கா. செல்வன்:-
முட்டி போட்டு உட்காருங்க இப்ப?
செழியன்:-
இடுப்பளவு தண்ணீர் கார்த்திகைச்செல்வன் -
கா. செல்வன்:-
இப்ப நீங்க - செழியன் -
செழியன் :-
தெரியுது படுக்கச் சொல்லப் போற -
இருய்யா - சட்டைப் பாக்கெட்ல செல்போன் இருக்கு -
கா. செல்வன் :-
அவரது இனைப்பில் தகராறு போல் தெரிகிறது - மழையினால் - நெட்வொர்க் கிடைத்திருக்காது என்றே நம்புகிறேன் - மோடியின் டிஜிட்டல் இந்தியாவில் இப்படித்தான் இருக்கும்.
அடுத்து -
தாம்பரத்திலிருந்து நமது செய்தியாளர்-
தம்பி ராமையா,
அங்கு நிலவரம் என்னதம்பி -
தம்பி :-
மழைவிடாமல் தொடர்கிறது கார்த்திகைச்செல்வன் -
தண்ணீர் ஆறு போல் ஓடுகிறது, ஏரி போல் காட்சியளிக்கிறது - கார்த்திகைச்செல்வன் -
கா.செல்வன்:-
சரி, அங்கே உணவின்றி லட்சக்கணக்கானோர் தவிப்பதாக வந்த செய்திகள் பற்றிச் சொல்லுங்கள் -
தம்பி :-
அப்படியா ? - ம்ம், ஆமாம், ஆமாம். கார்த்திகைச்செல்வன் இங்கே உண்ண உணவின்றி லட்சககணக்கான மக்கள் உள்ளனர் -
பாக்கெட்டில் கிரெடிட், டெபிட் கார்டுகள் இருந்தும் கையில் பணமில்லையே என்று ஏங்குகிறார்கள் கார்த்திகைச்செல்வன் -
கா. செல்வன் :-
இதுவும் மோடி அரசின் சாதனைதான் தம்பி -
கையில் கார்டு - ATM செயல்படவில்லை -
வேதனை, சரி தம்பி இதே நிலை நீடித்தால் இவர்கள் இன்னும் எத்தனை மணி நேரம் உயிரோடு தாக்குப் பிடிக்க முடியும் தம்பி?
-தம்பி இனைப்பில் இருக்கிறீர்களா? தம்பி, தம்பி,
தம்பி :-
கார்த்திகைச்செல்வன் கேட்கிறதா?-
ம், அதேதான் கார்த்திகைச்செல்வன் -
இங்கு நிலைமை படுமோசமாக இருக்கிறது -
ஒரு பெண்மணி இங்கே, இரண்டு மணி நேரமாக உணவின்றி மயங்கி விழும் நிலையில் இருக்கிறார் - அவரிடமே கேட்போம் -
வணக்கம், தங்கள் பெயர்?
எத்தினிவாட்டி சொல்றது பேமானி?
கா. செல்வன் :-
இனைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது -
மோடியின் டிஜிட்டல் இன்டியா மக்களே மீண்டும் -
24 மணி நேர தொடர்மழை -
மக்கள் அவதி -
பசி, பட்டினி - உறங்குகிறதா?
மோடி அரசு?
நேர்படப் பேசு - சற்று நேரத்தில் -
No comments:
Post a Comment