பச்சை வெங்காயம் சாப்பிட்ட நாற்றத்தை போக்க உப்பு கலந்த நீரில் வெங்காயத்தை ஊற வைத்து எடுத்து சாப்பிட்டால் காரம், நாற்றம் இருக்காது.
வெங்காயம் வதக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கி விடும்.
சின்ன வெங்காயத்தை வாங்கி வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்திருந்தால் ஒரு மாதம் வரை கெடாமல் முளை வராமல் இருக்கும்.
வெங்காயத்தைத் தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு பின்னர் நறுக்கினால் கண்களில் கண்ணீர் வராது.
பாத்திரங்கள் அடிப்பிடித்துகொண்டால், பாத்திரத்தில் வெங்காயத்தை நறுக்கி போட்டு, சிறிது நீர் ஊற்றி வேக வைத்து, பிறகு தேய்த்துக் கழுவினால் அடிப் பிடித்த சுவடு காணாமல் போகும்.
நறுக்கி வைத்த வெங்காயத்தில் சிறிதளவு வெண்ணெய் கலந்து வைத்தால் நீண்ட நேரம் பிரஷாக இருக்கும்.
சாம்பார், ரசம் இவற்றுக்காக செய்யும் மசாலா கலவையில் ஒரு சின்ன வெங்காயத்தை சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.
பூண்டு, வெங்காயம் போன்றவைகளை நறுக்குவதால் கத்தியில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க, சிறிதளவு உப்பை கத்தியில் தடவி குளிர்ந்த நீரில் கழுவவும்.
லேசான வெந்நீரில் வெங்காயத்தை நனைத்து வெட்டினால் கண்கள் எரியாது.
வெங்காயம் நறுக்கும்போது கண்ணீர் வராமல் இருப்பதற்கு நறுக்க வேண்டிய வெங்காயங்களை முன்பே ஃப்ரிட்ஜில் வைத்த பின்னர் நறுக்க ஆரம்பிக்கலாம்.
தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அரைத்து ஊற்றினால், குருமா வாசனையுடன் சுவையாகவும் இருக்கும்.
காபி, டீ கொடுக்கும் பீங்கானில் கறை படிந்து உள்ளதா? ஒரு பெரிய வெங்காயத்தினை வெட்டி நன்கு தேயுங்கள். கறைகள் விட்டு விலகும்.
No comments:
Post a Comment