Tuesday, March 2, 2021

வெற்றிலைக்காம்பு தீபமும்... தீரும் பிரச்சனைகளும்...

நம்மிடம் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் நீங்கி வெற்றிப் பாதையை நோக்கி செல்வதற்கு, அதிர்ஷ்டத்தை இந்த பரிகாரம் நமக்கு தேடித்தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

வெற்றிலைக்காம்பு தீபமும்... தீரும் பிரச்சனைகளும்...
வெற்றிலைக்காம்பு தீபம்


















வெற்றிலை காம்பில் மூதேவி, வாசம் செய்கின்றாள் என்பதும் சிலரின் கூற்று. ஆனால் வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதிதேவியும் வாசம் செய்வதாக மற்றொரு கூற்றும் உள்ளது. சரி. முதலில் வெற்றிலைக்காம்பு எப்படி தீபம் ஏற்ற வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளலாம்.

முதலில் சேதாரம் இல்லாத 6 வெற்றிலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக நுனிப்பகுதி இருக்க வேண்டும். நுனிப்பகுதி இல்லாத வெற்றிலையை பரிகாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது. முதலில் கையில் வைத்திருக்கும் 6 வெற்றி இலைகளிலிருந்து காம்புகளை மெதுவாக கிழித்து எடுத்து விட வேண்டும். காம்பு இல்லாத 6 வெற்றிலைகளை ஒரு பலகையின் மீதோ அல்லது ஒரு டேபிளின் மீதோ வைத்துக் கொள்ளுங்கள்.

6 வெற்றிலைகளையும் மயில் தோகை போல் விரித்து, வைத்து விடவேண்டும். அதன்மேல் ஒரு அகல் தீபத்தை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு, வைத்துக்கொள்ளுங்கள். அடுத்ததாக 6 காம்புகளையும் நல்லெண்ணெயில் போட்டுவிடலாம். பின்பு தீபத்தை ஏற்றி விட வேண்டும். ஏற்றிய தீபத்தில் எண்ணெய் சூடாகி வெற்றிலை காம்பில் இருந்து லேசான நறுமணம் வீசும். தீபத்திற்கு அடியில் இருக்கும் காம்பு இல்லாத வெற்றியில் இருந்தும் நல்ல நறுமணம் வீசும்.

இந்த நறுமணத்தை நன்றாக சுவாசம் செய்து தீபத்தை நோக்கியவாறு ஐந்து நிமிடங்கள் உங்கள் மனதில் நினைத்திருக்கும் கோரிக்கையை வைத்து தியானம் செய்தாலே போதும். உங்களுக்கு இருக்கும் எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும், அது விரைவாக தீர்ந்துவிடும். வாரம் ஒரு முறை இப்படி செய்வது நம் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. நம்மிடம் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் நீங்கி வெற்றிப் பாதையை நோக்கி செல்வதற்கு, அதிர்ஷ்டத்தையும் இந்த பரிகாரம் நமக்கு தேடித்தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இந்தப் பரிகாரத்தை நீங்கள் எப்படி நினைத்து செய்தாலும் சரி. நம்மிடம் வாசம் செய்யும் மூதேவியானவள் நம்மை விட்டு விலக வேண்டும் என்று இந்த பரிகாரத்தை செய்வதாக இருந்தாலும் சரி. அல்லது காம்பில் வாசம் செய்யும் பார்வதிதேவியின் மூலம் நமக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போவதாக இருந்தாலும் சரி. இது பார்ப்பவர்களின் கண்களில் உள்ளது. எந்த ஒரு சந்தேகத்துடனும், குழப்பத்துடனும் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...