Sunday, March 7, 2021

பணம் ஒன்னும் சும்மா வரலீங்க...???

 அனைத்து தொலைக்காட்சி களிலும் ஒரு நாளைக்கு 100 தடவைக்கு மேல் விளம்பரங்கள்...

நம்ம தமிழக புரட்சி கர போராளிகள் இந்தி காரனை திட்ட பானி பூரிகாரன் என்பார்கள்... அவர்களின் தரத்துக்கு என்றவன் தானே அவர்களின் கண்ணுக்கு படுவார்கள்....
இந்த லலிதா ஜூவல்லரி நகைக்கடை
காரன் எல்லாம் கண்ணில் பட வாய்ப்பு இல்லை...
லலிதா ஜூவல்லரி நகைக்கடை நிறுவனம் கணக்கில் வராமல் ஆயிரம் கோடி ரூபாய்களை வருமானமாக பெற்றிருக்கிறது. அதாவது, கள்ள வருமானம் ஈட்டியிருக்கிறது. நம்பிக்கை, நாணயம் என்பதெல்லாம் நகைக்கடைகளின் தாரக மந்திரங்களாக அவற்றின் விளம்பரங்களில் ஓதப்படுகின்றன. ஆனால், அயோக்கியத்தனத்தையே அவர்கள் நம்புகிறார்கள், கடைப்பிடிக்கிறார்கள்.
ஒரு நகைக்கடை நிறுவனமே ஆயிரம் கோடிகளை பதுக்கி வைக்கிறது எனில், அதிகாரம் கொண்ட அரசியல்வாதிகள், பெருமுதலாளிகள், மதவாதிகள், பெரும் வணிகர்கள், திரை உலகினர், விளையாட்டு பிரபலங்கள், உயரதிகாரிகள், நிழலுலக குற்றவாளிகள் போன்றவர்கள் எத்தனை ஆயிரம் கோடிகளை பதுக்கி வைத்திருப்பார்கள். அப்புறம் ஏன் அரசாங்கம் கடனில் மூழ்காது, அரசுத்துறை நட்டத்தில் தேயாது?
போக்குவரத்து துறை நட்டத்தில் இருக்கிறது, ஆனால் போக்குவரத்து அமைச்சர்களின் சொத்துமதிப்பு ஏராளமாக உயர்கிறது. இப்படித்தான் எல்லாத்துறைகளிலும். இதற்கெல்லாம் காரணம், இந்த கள்ளத்தனம்தான். இதை ஊழல் ஒழிப்பு என்கிற கூச்சலால் ஒழிக்க முடியாது. இதை வளர்த்துக் கொண்டிருக்கும் முதலாளித்துவ அரசியலை வீழ்த்துவதே தேசம் சீர்படுவதற்கு நல்லத் தொடக்கமாக இருக்க முடியும்...!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...