Tuesday, March 2, 2021

உழல்கள் மற்றும் பெண்களுக்கு செய்த அராஜகம் ஏன் மறந்திர்கள்.

 சமஸ்:

என் காலத்தில் இவ்வளவு ஏளனப்படுத்தப்பட்ட ஒரு தலைவர் இல்லை; அவருடைய தந்தை எதிர்கொண்ட வெறுப்பையும் அவமதிப்புகளையும் கணக்கில் கொண்டே எழுதுகிறேன்.
சென்னை மேயர் பதவியில் இருந்த காலம் தொட்டு அவரைக் கவனிக்கிறேன். ஒரு நல்ல நிர்வாகி என்பதை நிரூபிக்கும் யத்தனத்தை அவர் தொடர்ந்து வெளிப்படுத்திவந்திருக்கிறார். தவறுகள் சுட்டிக்காட்டப்படும்போதெல்லாம் திருத்திக்கொண்டிருக்கிறார்.
பல மாநிலங்களில் ஆளுங்கட்சிகளே பாஜகவால் சிதறடிக்கப்படும் நிலையில், அதிகாரத்தில் இல்லாத கட்சியில் எந்த விரிசலும் இல்லாமல் அதிகார மாற்றத்தைச் சாத்தியப்படுத்தியதுடன் 2019 மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றியையும் கட்சிக்குக் குவித்தார். நாடாளுமன்றத்தில் பல முக்கியமான விஷயங்களில் பாதிக்கப்படும் மக்கள் பக்கம் திமுக நின்றது. இன்று தமிழக அரசு முன்னெடுத்திருக்கும் பல மக்கள் நலச் செயல்பாடுகளுக்கு திமுகவும் அவர் தந்த அழுத்தங்களும் உறுதியான காரணங்கள்.
இவற்றையெல்லாம் மறுதலிப்பதும், அவரை இகழ்ந்துரைப்பதும் அவரவரிடம் உள்ள சாதிய வன்மம் / சுய வெறுப்பு - சுய இழிவின் உமிழ்வைத் தவிர வேறு இல்லை. எல்லாத் தலைவர்கள் மீதும் உள்ளதுபோல அவர் மீதும் எனக்கு விமர்சனங்கள் உண்டு. ஆனால், மக்களுக்காக உழைக்கும் ஒரு அரசியல் தலைவர் மீது இவ்வளவு அவமதிப்புகள் கொட்டப்படும்போது அவரது கரங்களைப் பற்றி அன்பைத் தெரிவிப்பது தார்மிகக் கடமை ஆகிறது.
மக்களுக்கான உங்கள் பணிகள் செழிக்கட்டும்..
கனவுகள் வெல்லட்டும்...
பிறந்த நாள்
வாழ்த்துகள்
திரு.மு.க.ஸ்டாலின்!
May be an image of 1 person, standing and footwear

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...