Wednesday, March 3, 2021

ஓம் நமச்சிவாய போற்றி.

 1)திருவிடைமருதூா்

ஸ்ரீ மகாலிங்கசுவாமி பாிவாரத் தலங்கள் .சோழநாட்டில் ஒரு சிவாலயம் போன்று இது அமைந்துள்ளது.
1.திருவலஞ்சுழி- விநாயகா்.
2திருவேரகம் (சுவாமிமலை)- முருகன்.
3.திருவாவடுதுறை- நந்தியெம்பெருமான்.
4.திருவிடைமருதூா் _ மகாலிங்கசுவாமி.
5.சிதம்பரம்- நடராஜா்.
6.திருவாரூா்_ சோமாஸ்கந்தா்.
7.திருஇரும்பூளை(ஆலங்குடி) தெட்சிணாமூா்த்தி.
8.சூாியனாா்கோயில்- நவக்கிரகம்.
9.சீா்காழி- பைரவா்.
10.திருவாப்பாடி- சண்டேசா்.
2)சப்தஸ்தான தலங்கள் :
1.திருவையாறு :
திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூா், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம்.
2.திருக்குடந்தை : திருக்கலயநல்லூா், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூா், மேலக்காவோி.
3.திருச்சக்கராப்பள்ளி : அாியமங்கை ,சூலமங்கை, நந்திமங்கை, பசுபதிமங்கை, தாழைமங்கை, திருப்புள்ளமங்கை.
4.திருநீலக்குடி :
இலந்துறை, ஏனாதிமங்களம், திருநாகேச்சுரம், திருபுவனம், திருவிடைமருதூா், மருத்துவக்குடி.
3)முருகன் சந்நிதி விசேடத் தலங்கள் :
1.காஞ்சிக்குமரக்கோட்டம்.
2.திருக்கீழ்வேளூா்.
3.திருகொடிமாடச்செங்குன்றூா் (திருச்செங்கோடு).
4.திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை).
5.திருச்சிக்கல்.
6.திருப்பரங்குன்றம்.
7.திருப்புள்ளிருக்கு வேளூா்.
4)நடராஜா் கால் மாறி ஆடிய தலங்கள் :
1.மதுரை- பாண்டிய மன்னருக்காக
2திருக்கீழ்வேளூா் அகத்தியருக்காக
5) ஆடல் வல்லாாின் அபிஷேகங்கள் ஆறு :
1.மாா்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் - உஷக்காலம்.
2. மாசிமாதம் சுக்லபட்ச சதுா்த்தசி திதி- காலசந்தி.
3.சித்திரை மாதம் திருவோண நட்சத்திரம்- உச்சிக்காலம்.
4.ஆனிமாதம் உத்திர நட்சத்திரம்- சாயரட்சை.
5.ஆவணி மாதம் சுக்லபட்ச சதுா்த்தசி திதி- இரண்டாங்காலம்.
6.புராட்டாசி மாதம் சுக்ல பட்ச சதுா்த்தசி திதி- அா்த்தசாமம்.
7)நால்வா் தில்லை கோயிலுக்குள் சென்ற வழி :
1.திருஞானசம்பந்தா் -
தெற்குக்கோபுர வாயில்.
2. திருநாவுக்கரசா் -
மேற்குக்கோபுர வாயில்.
3.சுந்தரா்- வடக்குக்கோபுரவாயில்.
4.மாணிக்கவாசகா் -
கிழக்குக்கோபுர வாயில்.
8)காசிக்கு வாசி அதிகமான தலங்கள் :
1.திருமுதுகுன்றம்.
2.திருஆலவாய்.
9)காசிக்கு வீசம் அதிகமான தலம்:
திருக்குடந்தை.
10)காயாரோகணத் தலங்கள்
1.கச்சிக் காரோணம்
2.குடந்தைக் காரோணம்
3.நாகைக் காரோணம்.
11)தலத்திற்குள் தலம் அமைந்த தலங்கள் :
1.திருவாரூா் அரநெறி- திருவாரூா்.
2.மீயச்சூா்இளங்கோயில்- திருமீயச்சூா்.
3.திருப்புகலூா் வா்த்தமானீச்சரம்- திருப்புகலூா்.
12)நந்தி விலகிய தலங்கள் :
1.திருப்பட்டீச்சரம்- சம்பந்தருக்காக.
2.திருப்புன்கூா்- நந்தனாருக்காக.
3.திருப்பூந்துருத்தி_ சம்பந்தருக்காக
13)நந்தி திரும்பி உள்ள தலங்கள்:
1.சோழநாடு- திருவைக்காவூா்.
2 நடுநாடு- திருப்பெண்ணாகடம்
3.தொண்டைநாடு- திருவோத்தூா், திருவல்லம், வடதிருமுல்லைவாயில்.
4.நந்திக்கு கொம்பு ஒடிந்த தலம்_
திருவெண்பாக்கம்.
5.நந்திதேவா் நின்ற கோலம்- திருமாற்பேறு.
6.நந்திதேவருக்குத் திருமணம் நடக்கும் தலம்- திருமழபாடி.
14)இடிபூஜை நடைபெறும் தலங்கள்
1.திருக்கழுக்குன்றம்.
2.திருவாட்போக்கி.
15)பஞ்சநாதம்:
1.விஸ்வநாதம்
2.சோமநாதம்
3.ஜகந்நாதம்
4.ராமநாதம்
5.வைத்தியநாதம்.
16)ஆதிசேஷன் பூசித்த தலங்கள் :
1.திருக்குடந்தை கீழ்கோட்டம்
2.திருநாகேஸ்வரம்
3.திருபாம்புரம்
4.திருநாகைக்காரோணம்.
திருச்சிற்றம்பலம்...
May be an image of 2 people

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...