திமுகவை பொறுத்தமட்டில்
90களுக்கு முன்புவரையிலும் கூட காங்கிரஸ் எதிர்ப்பு நிலைப்பாட்டை கடுமையாக கடைபிடித்து வந்தார்கள். காங்கிரசும் ஏதாவது ஒரு காரணத்தை கண்டுபிடித்து திமுக ஆட்சியை இருமுறை கலைத்திருக்கிறார்கள். முதன்முதலில் ஊழலுக்காக இந்திராகாந்தியால் கலைக்கப்பட்டாலும்
இரண்டாவது முறை
ஜெயா-ராஜிவ் கூட்டணி பேச்சுவார்த்தையின் முக்கிய அஜண்டாவான "திமுக ஆட்சியை கலைக்கவேண்டும்" எனும் ஜெயாவின் கோரிக்கையை ஏற்று 91ஜனவரி யில் அடாவடியாக கலைத்தார்கள். அந்த நிகழ்வு என்பது ஜனநாயக படுகொலை தான் என்று நிச்சயமாக கூறமுடியும்.
ஆட்சிகலைப்புக்கு இலங்கை தமிழர் பிரச்னையை காரணம் காட்டினார்கள். அந்த காரணம் காட்டி ஆட்சிகலைப்பு நடந்த 4 மாதத்திற்குள் ராஜிவ் மரணமும் நடந்ததால் மக்களின் சந்தேகப்பார்வைக்கு திமுக ஆளாக நேர்ந்தது. அதனால் பல இன்னல்களுக்கும் ஆளானார்கள். அரசியல் காரணங்களுக்காக
95க்கு பிறகு
திமுகவும் தன் அரசியல் பாணியை மாற்றிக்கொண்டார்கள். அதனால் தான் 96-2001 மற்றும் 2006-2011 ஆட்சிக்காலத்தில் இலங்கை தமிழர் பிரச்சனையில் அடக்கிவாசித்தார்கள்.
அவர்கள் எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறார்களோ அப்போதெல்லாம் மத்திய அரசோடு இணக்கமாகவே போய்விடுவார்கள். ஏன் மத்திய ஆட்சியின் பங்காளிகளாகவும் மாறியதால் மத்திய ஆட்சியின் முழு பலனையும் அனுபவித்தார்கள்
அதனால் தான் கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்தாலும் அவர்களால் தாக்குப்பிடிக்க முடிந்தது. தற்போது காலமும் சூழலும் தங்களுக்கு சாதகமாக வரவிருக்கும் நிலையில் தன்னோடு பயணித்துவரும் கூட்டணி கட்சியினர், தங்களின் புதிய நிலைப்பாட்டிற்கு முட்டுக்கட்டை போட்டுவிடுவார்களோ என்கிற சந்தேகம் அவர்களுக்கு கண்டிப்பாக இருக்கும். அதனாலேகூட தொகுதி உடன்பாட்டில் கூட்டணி கட்சிகளிடம் இத்தனை கடுமையாக நடந்திருக்க வாய்ப்புகள் உண்டு.
No comments:
Post a Comment