சசி விடுதலையாகி சென்னை வந்தவுடன், அவரால் நியமிக்கப்பட்ட அதிமுக தலைவர்கள் அத்தனை பேரும்,
சசி காலில் விழுந்து, மீண்டும் கட்சியை அவரிடம் ஒப்படைத்து விடுவார்கள், எடப்பாடி அரசு கவிழ்ந்துவிடும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
சசி வந்து ஒரு மாசம் ஆகி விட்டது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு மூணு நாளாச்சு. எடப்பாடி தலைமையில் அதிமுக பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டது.
பிஜேபியுடன் தொகுதி பங்கீடு இன்று முடிவு செய்யப்பட்டு விடலாம்.
இரண்டு நாளில் விஜயகாந்த் மற்றும்
சிறு கட்சிகள்....கூட்டணி இறுதி வடிவம்
பெற்றுவிடும்.
இதுவரை அதிமுக கட்சிக்குள் எந்த
குழப்பமும் இல்லை. எடப்பாடி தலைமை
தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டு விட்டது.
வேட்பாளர் தேர்வு முடிவான பிறகு
டிக்கட் கிடைக்காத சில அதிருப்தி கோஷ்டியாளர்களின் கூச்சல், சலசலப்பு,
கட்சியை விட்டு வெளியேறுவது, உள் குத்து வேலை செய்வது, என்பதெல்லாம் எம்ஜிஆர்,ஜெ.காலத்திலும் நடந்ததுதான்.
தென் மாவட்டங்களில் தேவர் சமுதாய
வாக்குகளை சசி பிரிப்பார், என்பது ஒன்றுதான் இப்போதைய அச்சம்.
அதைச் சமாளிக்க பன்னீர் தயாராகி விட்டதாகத் தெரிகிறது. 38 MP தொகுதிகளிலும் தோற்ற போதும்,
In spite of stiff fight, பன்னீர் தன் மகனை மட்டும் ஜெயிக்க வைத்திருக்கிறார்.
அதாவது சசியின் போர் வாளாக செயல்பட்டு, சசியின் மொத்த சக்தியையும் பிரயோகித்தும், தினகரனால் பன்னீர் மகன் வெற்றியைத் தடுக்க முடியவில்லை.
MP தேர்தலில் அதிக சீட் பெற்றால், மத்தியில் தொங்கு நிலை ஏற்பட்டால், பேரம் பேச உதவும் என்ற நிலை.
ஆனால், அகில இந்திய அளவில்
நாலைந்து மாநிலங்கள் தவிர NDA
மகத்தான வெற்றி பெரும் என்பது
உறுதியாகி விட்டதால்,
அதிமுக அப்போது அதிகமாக காசு செலவழிக்கவில்லை.
திமுக வெறியோடு காசை வாரி இறைத்து 38/39 வெற்றி கண்டது.
ஆனால் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்ந்தே நடந்த சில சட்டசபைத் தொகுதிகளின் இடைத் தேர்தலில்,
எடப்பாடி தன் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளத் தேவையான சட்டசபைத் தொகுதிகளை வென்றார்.
"நான் ஒரு முடிவு எடுத்து விட்டால் என்னால் திமுகவைத் தோற்கடிக்க முடியும் என்பதை நிரூபித்து விட்டார்".
இப்போது அதிமுக தலைவர்களுக்கு வாழ்வா சாவா என்ற நிலை. Winning alone will ensure their very survival.
புலி சவாரி தொடர்ந்தாக வேண்டும்.
கீழே இறங்க நேர்ந்தால் புலிக்கு பலி....
இந்த பயம் துரத்துவதால் அதிமுக தலைவர்கள் நம்ப முடியாத அளவு ஒற்றுமையாக இருக்கிறார்கள்.
காலில் விழுந்து 24×7 அஞ்சி நடுங்கி, கொத்தடிமைகளாக, கண் அசைவு கருணைக்காக ஏங்கி, வீசி எறிவதை........
அவல நாட்களை மறந்து,
நாலு ஆண்டுகளாகி விட்டன.
இப்போது கட்சியின் எல்லாத் தலைவர்களும் சர்வ சமம்.
பெரும்தலை என்று யாருமே இல்லை.
அவரவர் சுய கௌரவத்தோடு,
யாருக்கும் பயப்படாமல்
அவரவர் வகிக்கும் பதவியின் அதிகாரங்கள் வசதிகள் எல்லாவற்றையும், தானே
சர்வ சுதந்திரமாக புத்திர பௌத்திர பரம்பரை பாத்யதையாக அனுபவித்து.....
இப்படியே Maintain செய்து கொண்டு
போவதற்காக உயிரைக் கொடுத்து ஒற்றுமையாக உழைப்பார்கள்.
அதிமுக இப்போது ஒரு பொது சொத்து.
அதன் நல்லது கெட்டதுகளில் அனைத்துத் தொண்டர்கள், மற்றும் தலைவர்களுக்கு சம பாத்யதை உண்டு.
As a pleasant surprise ஆரோக்யமான உட்கட்சி ஜனநாயக முறை, அங்கு வேறூன்றத் தொடங்கி விட்டது.
தொண்டர்கள் இதைத் தன் கட்சி
என்ற உரிமையோடு பார்க்கிறார்கள்.
திமுகவின் நிலைமை அப்படி அல்ல.
அது ஒரு குடும்ப சொத்து.
கட்சியிலும், ஆட்சியிலும், சிம்மாசனம் ஏறும் உரிமை, தலைவனின் வம்சத்தின் வழி வழியாக வந்த வாரிசுக்கு மட்டுமே.
மற்ற தலைவர்கள், தொண்டர்கள் அனைவரையும்,
"சொன்னதைச் செய்து விட்டுக் கொடுப்பதை வாங்கிக்கொண்டு
இடத்தைக் காலிபண்ணிட்டு போ..."
என்ற ஸ்தானத்தில்தான் வைத்திருக்கிறார்கள்.
கருணாநிதி தொண்டனிடம், போலியான
அந்யோன்யத்தைக் காட்டி, தேனொழுகும் சொற்களால், மாய சொர்க்கத்தை சிருஷ்டித்து, போதையூட்டி......தனக்கு
அடிமையாக்கிக் கொண்டார்.
இன்றைய தலைவர்
இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்....
தலைவருக்கும் தொண்டர்களுக்கும் நடுவே வரலாறு காணாத இடைவெளி...
பத்தாக் குறைக்கு, பிரசாந்த் கிஷோர்...
கட்சியையும் தலைவர்களையும் தனது கட்டுப் பாட்டில் வைத்திருக்கிறார்.
இதனால் அத்தனை தலைவர்களும் கொதித்துப் போய் இருக்கிறார்கள்.
அசுர பலத்தோடு யாராலும் வெல்ல முடியாத சக்தியாக, கருணாநிதி
விட்டுச் சென்ற கழகத்தை,
அதே போக்கில் தொடர்ந்து நடத்தி இருந்தால் ஸ்டாலின் பட்டாபிஷேகம் எளிதாக நடந்திருக்கும்.
விதி விளையாடி விட்டது.
பஸ்மாசுரனுக்குக் கிடைத்த வரம் மாதிரி..
ஸ்டாலினுக்கு ஒரு பிரசாந்த் கிஷோர்.....?
சொந்தச் செலவில் தனக்குத் தானே
வைத்துக் கொண்ட சூனியம்.
மொத்தத்தில்
ADVANTAGE எ ட ப் பா டி.
No comments:
Post a Comment